PDA

View Full Version : காத்திருப்பு.....!



கலைவேந்தன்
18-07-2009, 04:06 PM
http://i194.photobucket.com/albums/z52/KALAIVENTHAN/waiting1.jpg
காத்திருப்பு...!

யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?

அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!

காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?

உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?

உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!

அமரன்
19-07-2009, 02:27 PM
கலைவேந்தர் ஆட்சி
மீண்டும் மன்றில்.. மகிழ்ச்சி.

காதல்..
அற்புதக் கவிதைச்சுரபி...!
கவிதை..
வற்றாத காதல்சுரப்பி...!

காத்திருப்பு
எங்கள் உயிர்ப்பின் இருப்பு.
உங்கள் காதலும்
காத்தில் இருப்பு... காத்து காத்திருப்பு..!

பிரமாத(ம்) கலைவேந்தே..!

கா.ரமேஷ்
20-07-2009, 04:47 AM
அருமை.... காத்திருப்பின் வலி சொல்லும் கவிதை....

அருள்
20-07-2009, 04:03 PM
நானும் காத்திருக்கி்றேன் இதை போல் கவிதைகள் பல வரும் என்று.....

lenram80
23-07-2009, 12:36 PM
உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களை சுற்றி இருக்கும்
கரு வளையம்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!

மருந்து கொடு என் விழிக்கு!
வந்து விடு என் வழிக்கு!

பாராட்டுகள் கலை!

கலைவேந்தன்
02-08-2009, 03:59 PM
பாராட்டிப் பெருமை சேர்த்த அனைத்து நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்....!

இளசு
03-08-2009, 08:46 PM
காத்திருக்கும் கணங்களும் யுகங்கள்..

பிரிந்திருந்தால் - நாளும் மாதம்...


-----------------------------------

பாடல் வரிகளின் வலியும் பாரமும்
பிரிந்தவர் மட்டுமே முழுமையாய்த் தாங்குவார்..


அதிலும் இணைதல் உண்டா இல்லையா?
இருந்தால் - எப்போது?

கேள்விகள் கனக்கும் கணங்கள் --- உயர்வெப்ப ரணங்கள்..


------------------------

உணர்வுகளை எழுத்தில் வடித்த கவிதைச்சிற்பிக்கு வாழ்த்துகள்!

நேசம்
04-08-2009, 06:49 AM
காத்தலின் வலிகளை கடைசி வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறிர்கள்.ஆனால் காத்தலிலும் ஒரு சுகம் உண்டோ என்பதை அனுபவஸ்தர்களே சொல்லுங்கள்

கலைவேந்தன்
05-08-2009, 08:04 AM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே.....!

நான் பொதுவாக காதல் கவிதைகள் அதிகம் எழுதுவது இல்லை.

காதல் கசந்ததாலா....இல்லை.

அந்த வலிகளை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வதை விட நம் கண்முன்னால் நிற்கும் ஏழ்மையை அதன் குரூரத்தை எழுதலாமே என்ற எண்ணம்தான்.

நான் எழுதியவற்றில் எனது சொந்த காதல் கதையும் மீராவின் கண்ணனுக்கான ஏக்கங்களை வெளிப்படுத்தும் மீராவின் கண்ணன் தொடர் கவிதையும் தான் எனக்கு மிகவும் பிடித்தவை எனக்கூறலாம்.

வெறுமனே கிறுக்கிய இந்த வரிகளையும் சிறப்பு எனப்பாராட்டும் உங்கள் பெருந்தன்மைகள் என்னை வியக்கவைக்கின்றன...!

மீண்டும் நன்றி நண்பர்களே...!

மஞ்சுபாஷிணி
05-08-2009, 06:14 PM
அருமையான கவிதை வரிகளை கிறுக்கல் என்று சொல்கிறாயே கலை...
அருமையா இருக்கு கலை....

கலைவேந்தன்
07-08-2009, 05:08 PM
மகிழ்ச்சி மஞ்சு....!