PDA

View Full Version : அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்rambal
05-04-2003, 04:58 PM
அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்

என் அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு....
நொந்து போன குடும்பத்தலைவன் எழுதிக்கொள்வது,

நலமா?
ம்ம்ம் நீங்கள் நலமாக இருப்பீர்கள்...
நான் தான் நலமாக இல்லை...
உங்கள் சீரியலால் பாதிக்கப்பட்டுள்ளேன்...
எப்படி தெரியுமா?
இப்பெல்லாம்
கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வந்தாலே,
எவளுடன் சுத்திட்டு வற்றீங்க என்று மனைவி
கேட்கிறாள்...
என் பையன்
அம்மான்னு கூப்பிட மாட்டேங்கிறான்...
உங்க சீரியலைப் பாத்துட்டு
சித்தின்னு கூப்பிடுறான்...
இல்லைன்னா
என் அப்பாவின் மனைவிங்கிறான்...
எல்லாம் உங்களின் சீரியல் பண்ணிய விளைவு..

எந்த ஆண்மகனையும் உத்தமனாக காண்பிக்கவில்லை...
சரி,
இப்படியெல்லாம் பெண்களா?
என எண்ணுமளவிற்கு
வில்லிகள்....
மாமியார் கொடுமைக்காரி
அல்லது
மருமகள் கொடுமைக்காரி
ஒன்னுவிட்ட சகோதரன், சகோதரி...
இப்படி எல்லாத்தையும் கெட்டவனா
காண்பிச்சிட்டீங்க...
அதுல ஒரே ஒரு குடும்பமோ அல்லது
ஒரு பெண்ணோ அப்பாவி...
இந்தக் கொடுமைக் காரங்களால்
அவ பாதிக்கப்பட்டு பின் அவள்
அவங்களை பழி வாங்ற மாதிரி கதைங்க...
அதெப்படி சலிக்காமல்
உங்களால் மட்டும் அழுகைகளை
தினம் தினம் காண்பிக்கமுடியுது...
அதிகபட்சமான அழுகைகளா
குடும்பத்துல குழப்பம்...
இப்பெல்லாம்
என் மனைவி டீவியில வற்ற
கதாபாத்திரங்களுக்காக அழுகுறா...
வீடான வீட்ல இப்படி அழுதா
நல்லாவா இருக்கு...
சும்மாவே ஆபீசில
பிரிச்னைன்னு வீட்டுக்கு வந்தா
வீட்டுலையும் அழுகை...
இப்படி இருந்தா எப்படி?
சரி,
இது ஒரு பக்கம் இருக்கட்டும்...
உங்களால
நான் ராத்திரி பட்டினி,
பகல்லையும் பட்டினி...
ரொம்ப நொந்துட்டேன்...
இந்தக்கூத்து ஒருபக்கம்...
பக்தி சீரியல்ங்ற பேர்ல...
அதை சொல்லனும்னா
அதுக்கு முழுசா இன்னொரு கடிதமே எழுதனும்....

அதென்ன தலைப்பு....
எல்லாம் பெண்களோட பெயர்லயே..இல்லைன்னா
உறவு முறைகளை தலைப்பா வைச்சிடுறீங்க...
அதுல இன்னும் பாக்கி
ஒன்னுவிட்ட சித்தப்பாவும்,
என்னோட கொள்ளுப்பாட்டியும்தான்....
வேற தலைப்பே கிடையாதா?
சரி,
இந்த சீரியலை எல்லாம்
உங்கள் வீட்டுல பாக்கிறது கிடையாதா?
இல்லை உங்க வீட்ல டீவியே கிடையாதா?

காலையிலே 10 மணிக்கு ஆரம்பிச்சு
ராத்திரி 10 மணி வரைக்கும் சீரியல்...
வாழ்க்கையே சீரில்லாம போயிடுச்சு...

சட்டத்தில தண்டனைங்கள திருத்தி எழுதப்போறாங்களாம்...
கொலைக்குற்றவாளிக்கு சாகும் வரை சீரியல் மட்டும் பாக்கனும்னு...
அந்த தண்டனைய உங்களுக்குக் கொடுத்தா எப்படி இருக்கும்னு
யோசிச்சிட்டிருக்கேன்...

உங்க ஸ்டீரியோ டைப் சீரியலை மாத்திக்குங்க....
இல்லைன்னா சீரியலே எடுக்காதீங்க...


மற்றவை அடுத்த கடிதத்தில்...

சரி வர்ட்டா...

இப்படிக்கு,
நொந்து போன குடும்பத்தலைவன்...

பொன்னியின் செல்வன்
06-04-2003, 12:43 PM
தலைவரே,

ராம்பாலின் கடிதத்தை சின்ன திரை பகுதியிலும் பதியுங்கள்.

ராம், உங்கள் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

----------------------------------------------------------------
சீரியலைப் புறக்கணிப்போம்.
சீரும் சிறப்புமாக வாழ்வோம்.
-----------------------------------------------------------------

aren
06-04-2003, 04:22 PM
நாங்கள் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

இளசு
06-04-2003, 04:55 PM
வீடு வந்த மூதேவிக்கு நல்ல அர்ச்சனை.

gankrish
07-04-2003, 12:43 PM
இது போறாது ராம்பால். இன்னும் கிழிக்கனும். அரைச்ச மாவை சினமாகாரங்க அரைச்சுக்கின்னு இருந்தாங்க. அந்த வேலையை இப்போ டிவி மெகா சீரியல்காரங்க செய்யறாங்க.

kathukutti
07-04-2003, 05:27 PM
ராம் அருமை.
இன்னும் கிழீங்க.

madhuraikumaran
07-04-2003, 09:39 PM
அதுவே சின்னத்திரை... அதை இப்படி ஆளாளுக்கு கிழிங்க கிழிங்கன்னா எப்படிங்க கிழிக்கறது?
ராம்... உங்கள் சாடல் அற்புதம்... இவ்ளோ உன்னிப்பாய் கவனித்து எழுதுவதற்கு எப்படித்தான் உங்களிடம் அவ்வளவு பொறுமை இருந்ததோ?... நன்று !

suma
09-04-2003, 08:30 PM
அவ்வளவு தொடரையும் பார்க்கவே தானே இவ்வளவு எழத முடியுது. ஏன் தமிழ் தொலைக்காட்சி சேனல் வைத்து இருக்கறீங்க.தூர்தர்சன் போன்ற சேனல பாருங்க.இல்லை டிஸ்கவரி சேனல் பாருங்க
நீங்க தரும் ஆதரவினால் தான் அவர்கள் எடுக்கறாங்க அக்கம்ம்ம்ம்...

Narathar
10-04-2003, 08:57 AM
அழுகை எனும் அட்சய பாத்திர
பிச்சைக்காரர்கள் இந்த
மெகா சீரியல் காரர்கள்

மன்மதன்
11-04-2004, 08:25 AM
அவ்வளவு தொடரையும் பார்க்கவே தானே இவ்வளவு எழத முடியுது. ஏன் தமிழ் தொலைக்காட்சி சேனல் வைத்து இருக்கறீங்க.தூர்தர்சன் போன்ற சேனல பாருங்க.இல்லை டிஸ்கவரி சேனல் பாருங்க
நீங்க தரும் ஆதரவினால் தான் அவர்கள் எடுக்கறாங்க அக்கம்ம்ம்ம்...

நீங்க பார்க்கிறீங்களா சுமா...நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்..

kavitha
11-06-2004, 09:36 AM
நீங்க தரும் ஆதரவினால் தான் அவர்கள் எடுக்கறாங்க அக்கம்ம்ம்ம்...
அப்படி கேளுங்க சுமா!

thempavani
11-06-2004, 09:44 AM
எல்லா குடும்பத்தலைவர்களின் ஆத்திரத்தை கொட்ட ஒரு வாய்ப்பு கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்..

அருமை

thempavani
11-06-2004, 09:47 AM
நம்ம சேரன் கூட ஏதோ சின்னத்திரை அரம்பிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது...

அவருக்கும் கொஞ்சம் சொல்லிவையுங்கள்

அறிஞர்
14-06-2004, 07:39 AM
அருமையான கடிதம்..... சோகத்தின் விளைவு.

ஓவியன்
02-05-2008, 04:11 PM
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்....

பத்தோடு பதினொன்றாக அழுகையை வைத்து ஓடும் நாடகத் தொடர்கள் இல்லாத தொலைக் காட்சி அலைவரிசைகளும் இருக்கத்தான் செய்கின்றன.... :)

Keelai Naadaan
02-05-2008, 05:29 PM
அதையேன் கேட்கிறிங்க..! முன்பெல்லாம் விருந்தினர் வந்தாலோ வேறு யாரேனும் வந்தாலோ அவர்களுக்கு உரிய மரியாதை, முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இப்போதெல்லாம். ஒரு புன்சிரிப்பு. பிறகு "இந்த சீரியல் முடியும் வரை காத்திரு" என்பது மாதிரியான முகபாவம்.

பாலகன்
02-05-2008, 10:48 PM
தொடர் தொலைகாட்சிக் கதைகள்,,,,,

அது நீல படத்துக்கு சமம்,,,, ஒரு சில வேளைகளில் அதைவிட கொடியது,,,

குடும்ப தலைவிகளுக்கு அகங்காரத்தை இலவசமாக விற்பனை செய்யும் ஒரு ராதிகாதனமான தந்திரம்...................

அன்புடன்
பில்லா

ஓவியா
02-05-2008, 10:56 PM
அடபோங்கப்பா இந்த கொடுமையை எழுத வச்சிடீங்களே!!!

லண்டனில் மதுரைனு ஒன்னு ஓடுது, அதுலே ஒரு கட்டத்திலே அந்த கதாநாயகி காதல் தோல்வியிலே சாகலாம் என்று முடிவெடுத்து காணாமல் போவதுபோல் காட்டி......காட்டி......வசனமும் அதுபோலவே பேசுவது போல் காட்டி பின் .காட்டி....காட்டி....காட்டி....காட்டி... காணமல் போயிடுச்சு......செத்துச்சா இல்லயானு காட்ட எத்தனை வாரம் ஆச்சு பாருங்க!!!! அய்யோடி மனுசனுக்கு இப்படியும் சோதனை வரனுமா!!!

அப்புரம் கதாநயகனை கத்தியால குத்தி அவன் பிளைப்பானா இல்லையானு காட்டி காட்டி காட்டி!!!காட்டி....காட்டி....காட்டி....காட்டி

அச்சச்சோ, மணி 9து ஆச்சே, டைம் போர் ராதிகா அடுத்து அரசி போட போறான்.....................அய்கோ போட்டுட்டானே .......அலோ மக்களே அப்பால வந்து எழுதுறேன்...... ...........இவளேன அதிசய தேவதையா... இவளுக்கு ல லல ல.......

பாலகன்
02-05-2008, 11:46 PM
நானும் ஒரு காலத்தில் சித்தி தொடரை பார்க்க ஓடியவன் தான்............. என்பதை நினைக்கும் போது ...................

என்ன செய்வது பாழும் மனது கேட்கமாட்டேன்கிறது ஓவியா

அன்புடன்
பில்லா

அனுராகவன்
02-05-2008, 11:57 PM
தொலைக்காட்சியில் மெகாசீரியல் ஒரு அடிமை போன்று உள்ளது.
அதுவும் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை அடசாமியே!!
ஏன் வேற வேலையில்லையா அங்கேயே பிரச்சனை ஆரம்பிக்கிது..
நன்றி ராம்பால் அவர்களே!!

pathman
03-05-2008, 04:57 AM
இந்த சீரியல் தொல்லை தாங்க முடியலடா சாமி. இதை எல்லாம் சீரியல் தடை சட்டம் கொண்டுவந்து தான் தடுக்கனும்.

நம்ம தெரிவு (மர்ம தேசம், விடாது கருப்பு, ருத்ர வீணை, சிதம்பர ரகசியம்) வகையரா தான்.

logini
28-05-2008, 12:39 PM
சீரியலில் லாஜிக்கே இல்லாமல் எடுக்கிறாங்க அப்படி எடுக்கிறதை மெனக்கெட்டு பார்க்கிறவங்களை தான் நாம திட்டனும்.

ராஜா
28-05-2008, 12:59 PM
5 ஆண்டுகளுக்கு முந்தியே இப்படி.. இப்போ இன்னும் மோசம்..!

ஆனாலும் சீரியல் தயாரிப்பாளர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.. அந்தக் கருமத்தை எல்லாம் உக்காந்து மாங்கு மாங்குன்னு பார்க்கற நம்ப வீட்டு பெண்தெய்வங்களும் இதற்கு முக்கிய காரணம்.

2 வருடம் முன்பு "சொர்ர்க்கம்" என்று ஒரு சீரியல். சன் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு வந்தது. மவுனிகா கதாநாயகி.

ஆரம்பத்தில், வில்லனின் நடவடிக்கைகளுக்கு கதாநாயகி சரிக்கு சரியா கவுன்டர் கொடுத்துகிட்டு இருந்தாங்க.. டி.ஆர்.பி. ஒன்னும் சுகமில்லை.

அப்புறம் ஒரு வில்லியைக் கொண்டுவந்தாங்க.. [கதாநாயகியின் நாத்தனார்..]. அவள் கதாநாயகியைப் படாதபாடு படுத்த, கதாநாயகி கண்ணீரில் துடிக்க... ரேட்டிங் எகிறிடுச்சு..

இதுக்கு என்ன சொல்றீங்க..!