PDA

View Full Version : நிசிவெளி



M.Rishan Shareef
16-07-2009, 06:30 AM
நிசிவெளி (http://mrishanshareef.blogspot.com/2009/07/blog-post_15.html)


தீராக் கொடும்பசியுடன்
பூரண நிலவைத்
தின்று சிதறி
ஏதுமறியாப் பாவனையோடு
பார்த்திருக்கின்றன
நிசிவெளியின் நட்சத்திரங்கள்

முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை

-எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - உயிர்மை

இளசு
16-07-2009, 05:34 PM
இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்பூச்சு
வெகு அழகு...

ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்!

கீதம்
17-07-2009, 02:46 AM
மிகவும் அருமை. பாராட்டுகள்!

M.Rishan Shareef
22-07-2009, 02:28 PM
அன்பின் இளசு,

//இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்பூச்சு
வெகு அழகு...

ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்! //

அழகான வரிகள். பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
22-07-2009, 02:29 PM
அன்பின் கீதம்,

//மிகவும் அருமை. பாராட்டுகள்! //

தமிழ்மன்றத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

ஆதவா
22-07-2009, 04:38 PM
இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்பூச்சு
வெகு அழகு...

ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்!

அண்ணா!!!!
சான்ஸே இல்லை!!! இந்த கவிதைக்கு இதைவிட எளிமையா சிறப்பா யாரும் பதில் சொல்லிட முடியாது!!

வாழ்த்துகள் ரிஷான், மற்றும் அண்ணா

M.Rishan Shareef
23-07-2009, 07:55 AM
அன்பின் ஆதவா,

ஒரு கால இடைவெளிக்குப் பின்னரான உங்கள் வருகையும் கருத்தும் மிக மகிழ்வைத் தருகிறது. தொடர்ந்து வாருங்கள்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

கா.ரமேஷ்
23-07-2009, 08:27 AM
அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef
27-07-2009, 08:35 AM
அன்பின் ரமேஷ்,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !