PDA

View Full Version : வினையாகும் விகிதாசாரம்....!!



சிவா.ஜி
15-07-2009, 06:39 AM
திரேதாயுகத்தில் பாஞ்சாலிகள் பாவமில்லை, இன்று
கலியுகத்தில் அவர்கள் பரத்தையர்கள்...
கள்ளிப்பால் கொடுத்து,குழந்தையர் எண்ணிக்கை குறைத்தால்
புள்ளியியல்படி பரத்தையர் எண்ணிக்கை கூடும்

ஒருவனுக்கு ஒருத்தி எனும் அர்த்தம் மறைந்து
ஒருத்திக்கு ஐவர் எனும் அநர்த்தம் விளையும்
பிறக்கும் பெண்ணெல்லாம் பாஞ்சாலியாவர்
விளக்கம் சொல்ல வியாசன் இருக்க மாட்டான்...

வீண் செலவை வேண்டாமென எண்ணி
வீண் இழவை வீட்டுக்கு கொண்டு வரும்,
வீணர்களை அவர்கள் அறியும்வரை அறை...
இல்லையேல் அவர்கள் மனதில் நீ உறை
விகல்ப்பமில்லா பெண் மகவை சமமாக நிறை, பின்
ஏற்றுக் கொள்கிறோம்.... நீதான் எங்கள் இறை..!

ஆதி
15-07-2009, 11:35 AM
சிந்தும் உயிர்ச்சொட்டில்
எந்த அணு கருவாகுமென
கண்டறிய தெரியாது நமக்கு..

வளரும் கருவில்
வகையாய் உயிர் உறைவது
எவ்வாறென உணரவில்லை நாம்..

உயிரில் இருந்து
உயிர் வருகிறதென்றால்
முதலுயிர்க்கான உயிர்ச்சொட்டு
எங்கிருந்து விழுந்தது ?

யாரந்த கருவை சுமந்தது ?
யாரில் கர்ப்பத்திலது வளர்ந்தது ?
எந்த பிரசவவாய் அதை
பெற்றடுத்தது ?
யாதும் தெரியாது நமக்கு ?

குரோமோசோன்களின் கணக்கை வைத்து
குழந்தை ஆணா பெண்ணா
எனக்கணிக்க அறிந்ததால்
கடவுளில்லை நாம்..

உயிரின் ரகசியம் அறியா நமக்கு
இறப்புக்கு வழி செய்ய
யாதொரு தகுதியுமில்லை

நம் நடப்பாதையில்
புல்லும் முளைப்பதில்லை
இப்போதாவது உணர்வோம்
நாம் போவது அழிவின் பாதையிலென..

-------------------

கனமான கரு சிவா அண்ணா..
கண்களையும் கனமாக்கும் கரு..

வார்த்தை வீச்சுக்கள் பிரமாதம் அண்ணா..
வாழ்த்துக்கள்..

இளசு
16-07-2009, 05:55 PM
சிவா வீசிய சாட்டையை வாங்கி
மீண்டும் அதே இடத்தில் உறைக்கும் வண்ணம் விளாசிய ஆதி..

பாராட்டுகள் இருவருக்கும்!

சிவா.ஜி
17-07-2009, 07:46 AM
இரு உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றி.

கடலில் கரைத்த பெருங்காயத்தின் சுவையறிந்து சொன்னதற்கு மனம்நிறைந்த நன்றிகள்.

aren
17-07-2009, 07:51 AM
அருமையான கவிதைவரிகள். சிவா மற்றும் ஆதி இருவருக்கும் பாராட்டுக்கள்.

பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் இந்த நிலமை மாறும்.

அமரன்
19-07-2009, 01:44 PM
பாரதமேறி...பாதரசமேவி...!
பாஞ்சாலிகள் குறிச்சிக்கு
பாதை அடைக்கும் கவி..!
பாராட்டுகள் சிவாஜி...!

பெண்கள் வீட்டின் கண்கள் என்று ஏன் சொன்னார்கள்?
அவர்களில் காணலாம் அகச்சிறப்பு....!-இதை
அறியாதவர்களைக் கண்டு முகம்திருப்பு...!

சிவா.ஜி
20-07-2009, 01:16 PM
அருமையான கவிதைவரிகள். சிவா மற்றும் ஆதி இருவருக்கும் பாராட்டுக்கள்.

பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் இந்த நிலமை மாறும்.

மிக்க நன்றி ஆரென். உண்மைதான்....பெண்களைக் கண்கள் என்று சொல்லிக்கொண்டே அதைக் குருடாக்கும் கொடியவர்கள் திருந்தும் நாள் தொலைவில் இல்லை.

சிவா.ஜி
20-07-2009, 01:18 PM
பெண்கள் வீட்டின் கண்கள் என்று ஏன் சொன்னார்கள்?
அவர்களில் காணலாம் அகச்சிறப்பு....!-இதை
அறியாதவர்களைக் கண்டு முகம்திருப்பு...!

அருமையாகச் சொன்னீர்கள் அமரன். அகச்சிறப்பை அறியாதவர்களிடம் நாம் செய்யவேண்டியது முகத்திருப்புதான்.

மிக்க நன்றி பாஸ்.