PDA

View Full Version : அதி வேகத்தில் கார் ஒட்டி நான்காம் வகுப்பு மாணவன் சாதனைநேசம்
15-07-2009, 05:11 AM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளே முத்தலாபுரத்தை சேர்ந்த பழனியப்பன் செல்வி மகன் நவின் குமார் வத்தலகுண்டு செயசீலன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்

http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_68219721318.jpg

நேற்று பள்ளி தாளளார், முதல்வர், ஆசிரியர்கள், மானவர்கள் முன்னிலையில் இன்டிகா, ச்கார்பியொ, டவரொ கார்களை வத்தலகுண்டு மெயின் ரோட்டியில் 100 முதல் 120 கி.மி வேகத்தில் ஒட்டி சென்றார்

நவின் குமார் கூறும் போது "எனக்கு கார் பந்தயங்களை பார்த்து ஆர்வம் ஏற்பட்டது.பெற்றொர்களின் ஒத்துழைப்பால் கார் ஒட்ட கற்று கொண்டேன்.எதிர்கலாத்தில் கார் பந்தயங்காலிள் கலந்து கொள்வது லட்சியம்" என்றார்.
அவரது தந்தை கூறும் போது "ஐந்து வயதில் இரு சக்கர வாகனங்களை ஒட்ட கற்று கொண்டான்.ஆறரை வயதில் இருந்து கார் ஒட்ட பழகி இப்பொழுது அதி வேகத்தில் கார் ஒட்டுகிறான்"என்றார்.

நவின் குமார் ரோட்டில் கார் ஒட்ட காவல் துறை அனுமதி பெறப்படவில்லை.சிறிய வயதில் சாதனை வேகம் மனதில் இருந்தாலும், கார் ஒட்டுவதற்கு 18 வயதில் தான் உரிமம் வழங்கிறது.அதற்கு குறைவான வயதில் நவின் குமார் கார் ஒட்டியது சட்டப்படி குற்றம்.

தகவல் தினமலர்

ரங்கராஜன்
15-07-2009, 06:26 AM
வாழ்த்துக்கள் வருங்கால michael schumacher,

http://www.vcars.co.uk/news/1dn-images/18701157.jpg

அறிஞர்
24-07-2009, 03:25 PM
சிறுவயதில் ஆர்வத்தில் ஓட்டுவது வேறு...
இதை பொதுவில் அனுமதிப்பது சரியா என்று ஒரு கேள்வி எழும்புகிறது.
இது போன்ற ஆசைகள் பலருக்கு எழும்பி விபரீதமாக இருந்தால் சரிதான்.

பாலகன்
24-07-2009, 04:23 PM
இந்த முறை மன்னித்து இதை அனுமதிக்கலாம்.. இனி வரும் காலங்களில் இதுபோன்று செய்ய அவர்களுக்கு முன் அனுமதி அளித்தும் ஊக்கப்படுத்தலாம்.

இந்த குற்றத்திற்கு சிறு தண்டனை கூட அளிக்கலாம். ஆனால் அது தண்டிக்கும் நோக்கில் இருத்தல் கூடாது

விகடன்
25-07-2009, 11:16 AM
இந்தச் சிறுவனின் அசத்தலான விடயத்தை பாராட்டலாம். ஆனால் இதையே ஓர் அங்கீகாரமாக நினைத்து ஒரு வயதுக்குழந்தைகளுக்கே கார் ஓட்ட கற்பிக்க முற்படலாம் பெற்றோர்.

அந்தவகையில் பார்க்கப்போனால், இப்படியான முயற்சிகளை தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்யலாம்....
சிறுவனைப் பாராட்டி அவன் இவ்வாறு வரக்காரணமாக இருந்தவர்களை கடுமையாகத் தண்டிக்கவேண்டும்.

praveen
26-07-2009, 06:17 AM
இந்த செய்கையினை கண்டித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை தினசரிகளில் பார்த்தேன். இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.

கனரக இயந்திரங்களை (அதாவது பயனிகள் மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மாதிரி) கையாள்வதற்கு பெரியவர்களுக்கு அநேக பரிட்சைகள் தகுதிகள் வைத்தே அனுமதி வழங்கப்படும் போது, இம்மாதிரி சிறார்களை வைத்து அதுவும் சாலையில் ஓட்ட அனுமதித்திருப்பது பெரிய மடத்தனம். இதில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் என்ன ஆவது. மேலும் இம்மாதிரி வாகனத்தில் பெரியவர்கள் உடல் அளவை வைத்தே அந்தந்த இடத்தில் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தாங்கள் செய்யாததை தங்கள் குழந்தையை வைத்து சாதனை செய்ய நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளை ஆபத்தில்லாத வகையிலே இருக்கும் மூளைத்திறன் சார்ந்த விசயத்திலே தான் ஈடுபடுத்த வேண்டும். திருக்குறளை மனப்பாடம் செய்ய வைப்பது, தசவாதானி என்பார்களே (ஒரே நேரத்தில் பத்து விசயங்களை நியாபகம் வைப்பது) அது போல செய்வது யாருக்கும் தீங்கு விளைவிக்காது. அந்த பையனுக்கும் அது பள்ளிப்படிப்பிற்கு மிக்க உறுதுனையாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை பார்த்து ஊரில் அவரவர் பிள்ளையிடம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஓட்ட கற்பித்தால் என்ன ஆவது. ஏற்கெனவே எமன் வலம் வரும் பகுதியே தேசிய நெடுஞ்சாலை தான்.

இந்த செயலை அந்த சிறுவனுக்கு கற்பித்த பெற்றோரை கடுமையாக தண்டித்து, அந்த செய்தி இந்த செய்தி வந்ததை விட பெரிய படத்துடன் வர வேண்டும்.

சிவா.ஜி
26-07-2009, 06:23 AM
பெற்றோர்களின் புகழ்மோகம்தான் இதற்கெல்லாம் காரணம். இதை பாராட்டுவதா கண்டிப்பதா? சிறுவனின் திறமையை பாராட்டினாலும், பெற்றோரைக் கண்டித்தே ஆகவேண்டும்.

பாரதி
26-07-2009, 06:39 AM
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக கேள்வி. பெற்றோரின் ஆசையைத் தவிர இச்செயலுக்கு வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.