PDA

View Full Version : என்னை கவர்ந்தவை( நான் இன்டர்நெட்டில் படித்தவை)அருள்
14-07-2009, 06:57 PM
இந்த திரியில் நான் இன்டர்நெட்டில் படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்.. என்னை உற்சாகபடுத்துங்கள்...
முதலில் ...

மனதைத் தொட்ட உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டிடி, கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனைத்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா"
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.
பின்னர் அந்த குழந்தையைத் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆனால் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன். நமக்கு மூளை இருப்பதனால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

பாரதி
15-07-2009, 01:58 AM
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

இக்கதையை பலமுறை மின்னஞ்சலில் வாசித்திருக்கிறேன். இக்கதையிலேயே கவனித்தீர்களா..? போட்டி மனநலம் குன்றியவர்களானது என்று! ஆனால் அவர்கள்தான் மொத்தமாக சென்று எல்லைக்கோட்டை கடந்து வெற்றி பெற்றவர்கள்!

குழந்தைகளிடம் இருந்து கற்க வேண்டியவை ஏராளமாக இருக்கிறது.

நேசம்
15-07-2009, 05:41 AM
அன்பு மட்டுமே பிரதானம் என்ற விசயத்தில் மட்டுமே அனைவரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.அன்று இந்த போட்டியை நேரடியாக கன்டவர்கள் அனைவரும் பாடம் கற்று இருப்பர்கள்.பகிர்தலுக்கு நன்றி அருள்

கா.ரமேஷ்
15-07-2009, 05:55 AM
ஏற்கனவே இந்த கதையை மின்னஞ்சலில் வாசித்திருக்கிறேன் , நல்லதொரு நிகழ்வு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
.........

பாலகன்
15-07-2009, 05:34 PM
எங்களுக்காக பகி்ர்ந்தமைக்க நன்றி நண்பரே. நெகிழ்ந்து போனேன். நன்றி

TamilPura
04-11-2009, 01:59 PM
குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள்.

தமிழ்புறா.

பா.ராஜேஷ்
04-11-2009, 02:48 PM
பழைய திரியை தேடி கருத்து பதிந்துள்ளீர்களே தமிழ் புறா. நல்ல திரிதான், நான் படித்திருக்கவில்லை.. நன்றி

சுகந்தப்ரீதன்
05-11-2009, 04:48 AM
பற்பல நல்ல விசயங்களை எப்போதும் குழந்தைகள்தான் நமக்கு அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்...!!

நெஞ்சை நெகிழவைக்கும் நல்லதொரு பகிர்வு...!!

நன்றி அருள்..!!

வியாசன்
05-11-2009, 04:51 AM
போற்றப்படவேண்டிய குழந்தைகள் .இணைப்புக்கு நன்றிகள்

சரண்யா
05-11-2009, 04:54 AM
நன்றிகள் அருள் அவர்களே..இன்று தான் நான் படிக்கிறேன்....
அன்பால் உயர்ந்தவர்கள்...வெற்றி என்ன தோல்வி என்ன...

வானதிதேவி
09-11-2009, 10:54 AM
ம்ம்ம் மனது கனத்தது.பகிர்வுக்கு நன்றி சரண்யா.

ஜனகன்
09-11-2009, 03:54 PM
ஏற்கனவே படித்தது என்றாலும், இங்கு இதை படிக்கும்போது சுவை அதிகம். நெஞ்சை நெகிழவைத்து விட்டது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அருள்.

குணமதி
11-11-2009, 01:47 AM
பரவலாகக் கூறப்பட வேண்டிய மாந்த நேயச்செய்தி.

samuthraselvam
11-11-2009, 05:31 AM
அவர்கள் தான் மனநலம் உள்ள குழந்தைகள்.... மனதைத் தொடுக்கிறது... பகிர்ந்தமைக்கு நன்றி அருள்....

hariharans
11-11-2009, 07:35 AM
தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

கலையரசி
20-12-2009, 01:00 PM
இன்று தான் படித்தேன். படித்தவுடன் மனதை நெகிழச் செய்து விட்டது இச்சம்பவம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

மன்மதன்
20-12-2009, 02:51 PM
அவர்கள் மனநலம் குன்றியவர்கள் அல்ல..நல்ல மனம் படைத்தவர்கள்..
பகிர்தலுக்கு நன்றி..

arun
21-12-2009, 05:35 AM
மனதை நெகிழ வைத்த நிகழ்வு பகிர்தலுக்கு நன்றி

அமீனுதீன்
22-12-2009, 06:33 PM
very nice

அறிஞர்
22-12-2009, 08:01 PM
மனநல குன்றியவர்கள்.. செய்யும் காரியங்கள் மெதுவாக இருக்கலாம்... ஆனால் நல்ல மனம் உள்ளவர்கள்.... சொல்லிக்கொடுக்கும் செயல்களை சிறப்பாக செய்பவர்கள்.