PDA

View Full Version : கண்ணாடி தடுப்புக்கு உள்ளே ஒரு பட்டாம்பூச்சி....!



samuthraselvam
14-07-2009, 06:39 AM
http://mapme.canalblog.com/images/sad_butterfly_girl.jpg

கண்ணாடி தடுப்புக்கு உள்ளே ஒரு பட்டாம்பூச்சி

இதோ என் உலகம் என நினைத்து வெளியே போக முயற்சிக்கிறது...

முடியும், முயன்றால் முடியும் என தன பிறப்பிலேயே உலகிற்கு உணர்த்திய அதே பட்டாம்பூச்சி....

முயன்று பார்க்கிறது...
பறந்து பறந்து இறகுகள் ஓய்கிறது....
இதோ அருகிலேயே வெளிச்சம் இருக்கிறது....

பறந்து செல், அதை இலக்காக வைத்துக் கொண்டு....
என்ன முயன்றும் முடியவில்லையே....

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் கீழே.... ஒரு வழி இருக்கிறது....

அதைக்கூட உணர முடியாமல்....
அதன் நோக்கம் மட்டுமே நிறைவேற முட்டி முட்டி பறக்கிறது.....

சிந்திக்காது செய்யும் எந்த முயற்சியும் சாதனையை சந்திக்காது....

பாரதி
14-07-2009, 07:00 AM
சற்று வித்தியாசமான கவிதைதான்...!

உங்கள் கையெழுத்தும் கவிதைப்பொருளைத்தான் பற்றி இருக்கிறது!!

முயன்றால் ஒரு சிறிய பருப்பை தொடர்ந்து ஒரே இடத்தை இலக்காக கொண்டு எறிந்தால் தேம்ஸ் நதி பாலத்தையும் கூட தகர்த்து விட முடியும் என அறிஞர் ஒருவர் கூறி இருந்தது நினைவுக்கு வருகிறது.

சிந்தித்து முயன்றால் வெற்றி எளிதாகும் என கொள்ளலாமா..?

நேசம்
14-07-2009, 07:31 AM
வெறும் முயற்சி மட்டும் பலன் அளிக்காது.திட்டமிடலுடன் முயற்சி செய்யும் போது வெற்றி அடையலாம் என்று சொல்லும் கவிதை.படத்தை போல் கவிதையும் அருமை.வாழ்த்துக்கள் சமுத்ரம் அவர்களே

வசீகரன்
14-07-2009, 12:16 PM
கவிதையின் கருவும்... இணைத்திருக்கும் படமும் எழுத்து வடிவமைப்பும் அருமை சமுத்திரம்.....
நல்ல கரு சொல்லும் கவிதையில் இன்னும் ஆழம் தேவை.....

எழுத்துக்களில் புதுமை தேவை....

நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள் சமுத்திரம்.

சிவா.ஜி
15-07-2009, 06:49 AM
வெறும் முயற்சி மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தராது என சொல்லும் வரிகள்.

உழைப்பத்தனையும் விழலுக்கிரைத்த நீராய் போகாமல் இருக்க சிந்தித்து செயல்பட வேண்டுமென சொல்லும் வரிகள்.

வாழ்த்துகள் லீலும்மா....!!!

அமரன்
26-07-2009, 06:50 PM
நம் ஜார்ஜின் கதை ஒன்றில் கண்ட வாக்கியம் - "பின்வாங்குவதும் ஒரு தந்திரோபாயம்தான்". இந்த வாக்கியத்தை உயிருடன் வைத்திருக்கும் சம்பவங்களும் உள்ளன.

முட்டி முட்டி முட்டி தேய்ந்து நிலத்தில் வீழ்ந்த பிறகு பட்டாம் பூச்சிக்கு பாதை தெரியும்.

முன்பு ரசித்த கண்ணாடிக்கான விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமிருந்து துப்புரவுத் தொழிலாளி தண்ணீர் எத்த.. இந்தப்பக்கமிருப்போர் பதறி எழ... இருப்பதே தெரியாத கண்ணாடியில் தண்ணீர் வழிய.. பதறியோர் அசடு வழிய..

சமுத்திரத்திலிருந்து முதல்துமி.. பாராட்டுகள்.. பெருமையிலும் நனைய ஆசை