PDA

View Full Version : திருமுர்க்தி அனையில் புதைந்த வரலாற்று சின்னங்கள்



நேசம்
13-07-2009, 07:58 AM
http://img.dinamalar.com/data/images_news/tbltopnews_98249018193.jpg


உடுமலை அருகில் உள்ள* திருமுத்தி மலை ஆதி மனிதர்கள், சமணர்கள், துறவிகள் வாழ்ந்தற்கான ஆதாரங்கல் கணப்படுகின்றன.அதிலும் சமணர்களின் முக்கிய வசிப்பிடமாக இருந்து இருக்கிறது.

அதை தொடர்ந்து பாண்டிய மன்னர்கள் அமனலிங்கஸ்வரர் கோவிலுக்கு திருப்பணிகள் செயதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.கோவில் உள்ள மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.மன்னர்களின் ஆள்கையின் கீழ் ஆட்சு செய்து வந்த தளி பாளையாகாரர்களின் கட்டுபாட்டில் திருமுர்த்தி மலை இருந்தற்கான வரலாற்று சான்றுகள் அதிகளவு காணப்படுகின்றன.

கட்டபொம்மனுக்கு தளிபாளையகாரகள் செயல்பட்டதால், ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு ஆளாகி தளி பாளையம் அழிந்தாக வரலாறு கூறுகிறது.அணை 1967 ல் கட்டியபோது ஏராளமான பாளையகாரகள் சிலைகள், அவர்களின் தெய்வ சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இப்பொழுது அணையில் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து, அனையில் புதைந்துள்ள வரலாற்று சின்னங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன.அனைப்பகுதியில் முழ்கி கிடக்கும் சின்னங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கடை ஒதுங்குவது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆய்வு ப்ணிகள் மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.


தகவல் தினமலர்