PDA

View Full Version : மீண்டும் டிராவிட்.....



அருள்
12-07-2009, 03:13 PM
இந்திய அணியில் டிராவிட் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு பிறகு இடத்தை பிடித்துள்ள டிராவிட் என்ன செய்வார் என்று பார்ப்போம்

aren
13-07-2009, 03:54 AM
ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பார்கள், அதுபோல்தான் திராவிடும்.

தன்னுடைய திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என்று நம்புவோம்.

நேசம்
13-07-2009, 04:28 AM
இப்போ உள்ள சுஉழ்நிலைக்கு திராவிட் அல்லது சச்சின் அவசியம் இந்தியா அணிக்கு தேவை

பாரதி
13-07-2009, 04:31 AM
டிராவிட் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. கோப்பைக்கான 30 பேர்கள் கொண்ட உத்தேச பட்டியலில் டிராவிட் இடம் பெற்றிருப்பது சரி. ஆனால் போட்டிக்கு முன்பாக 15 பேர்களாக குறைக்கப்பட்டு, பின்னர் ஆடும் போது இடம்பெறும் 11 வீரர்களிலும் இடம் பெற வேண்டுமே...! தென்னாப்பிரிக்காவில் நன்றாக ஆடியதால் இடம் பெற்றிருக்கிறார்.

அறிஞர்
21-07-2009, 07:01 PM
கடைசியில் என்ன நடக்கிறது எனப்பார்ப்போம்.
புதியவர்களுக்கு ஈடு கொடுப்பாரா..

aren
22-07-2009, 03:01 AM
புதிதாக வந்த வீரர்கள் அனைவரும் பட்டால் பாக்கியம் கேஸ், ஆனால் திராவிட் நிலைமையறிந்து விளையாடுபவர். ஆகையால் திராவிட் டீம் உள்ளே வந்துள்ளதால் இந்தியாவிற்கு அதிகபலம் கிடைத்துள்ளது.

ஓவியன்
22-07-2009, 03:59 AM
ஆரென் அண்ணாவின் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன், திராவிட் உள்ளே வந்தால் தோனி போன்றவர்கள் பொறுப்பாக ஆடுகிறேன் பேர்வழியென பந்துக்களை வீணாக்க வேண்டியதில்லை...

அந்த பொறுப்பான வேலையை திராவிட்டிடம் விட்டு விட்டு இயல்பான ஆட்டத்தினை ஆடலாம்..!!

அய்யா
01-08-2009, 01:37 PM
திராவிடின் பலமே அவருடைய பொறுமையான ஆட்ட முறைதான். ஐந்து நாள் போட்டிகளுக்கு அவரைப்போன்றோர் மிக அவசியம். கட்டை போட்டே வீச்சாளர்களின் மன உறுதியையும், உடல் சக்தியையும் குன்றச்செய்ய திராவிடால் இயலும்.

அதேநேரத்தில், திராவிடின் பொறுமை குலைந்தால் அடுத்த நொடியே ஆட்டமிழப்பதும் உண்டு. அவசரப்பட்டு, பந்தைச் சரியாக கணிக்கத்தவறி, 'வேலியில் போகும் ஓணானை காதில் பிடித்து விட்டுக்கொண்ட' கதையாக அடிக்கடி ப்ளேய்ட் இன் ஆகி வெளியேறுவதைக் கண்டிருக்கலாம்.

ஓவியன்
01-08-2009, 06:23 PM
அதேநேரத்தில், திராவிடின் பொறுமை குலைந்தால் அடுத்த நொடியே ஆட்டமிழப்பதும் உண்டு. அவசரப்பட்டு, பந்தைச் சரியாக கணிக்கத்தவறி, 'வேலியில் போகும் ஓணானை காதில் பிடித்து விட்டுக்கொண்ட' கதையாக அடிக்கடி ப்ளேய்ட் இன் ஆகி வெளியேறுவதைக் கண்டிருக்கலாம்.

திராவிட் அப்படி பொறுமையாக ஆடாது போவதற்கும் கிரிக்கட் சூதாட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ...?? :cool::cool::cool:

பால்ராஜ்
31-08-2009, 11:01 AM
திராவிட்-இன் திறமை 'தாக்கு'ப் பிடிப்பதில்
வெற்றி பெற வாழ்த்துக்கள்..

அன்றைக்கு அவசரப்பட்டு தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஜாக்
05-09-2009, 04:52 AM
ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பார்கள், அதுபோல்தான் திராவிடும்.
தன்னுடைய திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என்று நம்புவோம்.

புதிதாக வந்த வீரர்கள் அனைவரும் பட்டால் பாக்கியம் கேஸ், ஆனால் திராவிட் நிலைமையறிந்து விளையாடுபவர். ஆகையால் திராவிட் டீம் உள்ளே வந்துள்ளதால் இந்தியாவிற்கு அதிகபலம் கிடைத்துள்ளது.
ஆரென் சார் இருந்தாலும் திராவிடுக்கு ரொம்பதான் சப்போர்ட் செய்யுரிங்க:D ஆஸ்த்திரேலியா டெஸ்ட் சீரியசில் அவர் கோட்டை விட்ட காட்ச்சுகளை நீங்கள் பார்க்கவில்லையா:traurig001:

இப்படியே அனுபவம் வேனும் அனுபவம் வேனும்னு சொல்லிக்கிட்டு பழைய வீரர்களை மீண்டும் சேர்த்தால் நம்ம இளம் வீரர்களை எப்போதன் தயார்படுத்துவது.:fragend005:

சரி சேர்த்துட்டாங்க நல்லா விளையாண்டா ரொம்ப சந்தோஷம்:icon_b:. பார்ப்போம் நம்ம டீம் ஜெயிப்பதுக்கு திராவிடின் பங்கு எந்த அளவுக்கு இருக்க போகிறது என்று. பீல்டிங் செய்யும் அட்லீஸ் ஒரு முறையாது பந்தை துரத்தாமல் டைவ்:icon_rollout: அடித்து பிடிக்கிறார்னு பார்ப்போம்

ஓவியன்
05-09-2009, 04:56 AM
ஜாக், அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் திராவிட் ஆடிய ஆட்டங்களையும் நாம் மறக்கக் கூடாது தானே ...

ஜாக்
05-09-2009, 05:08 AM
அதை நான் மறக்கவில்லை ஓவியன் சார் திராவிடன் நுட்ப்பமான ஆட்டத்துக்கு மிக பெரிய ரசிகன் நான் ஆனால் அவர் சொதப்பும் போதும் அதை ஒரு ரசிக என்ற முறையில் சுட்டிக்காட்டனுமில்லையா

இப்போ இருக்கும் சூழ் நிலையில் 2011 உலக கோப்பைக்கு நமது அணியை தயார் செய்யனும் இப்போதிலிருந்தே இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தால்தான் ஒரு மிக சிறந்த அணியை நாம் உருவாக்க முடியும். அதனாலயே திராவிடை மீண்டும் அணியில் சேர்ப்பதில் கொஞ்சமும் உடன்பாடில்லை

அதற்க்காக திராவிடுக்கு எதிரியாக என்னை நினைத்துவிட வேண்டாம் 11 பேர் கொண்ட அணியில் அவர் தேர்ந்தெடுக்க்பட்டு களத்தில் இறங்கும் போது நல்ல படியாக ஆட வேண்டும் என்று நினைக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்

arun
05-09-2009, 08:45 AM
திராவிட் மீண்டு(ம்) வந்துள்ளார் வாழ்த்துக்கள்

இதை சொல்லி தான் போன முறை சீனியர் வீரர்களை புறக்கணித்தனர்(அதிகம் பாதிக்கப்பட்டது கங்குலி)

கடைசியில் 2007 உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டது கிரிக்கெட்டில் திறமை மட்டுமல்ல அதிர்ஷ்டமும் வேண்டும் (எனது அனுபவத்தில் சொல்கிறேன்)

பால்ராஜ்
08-09-2009, 07:33 AM
கங்குலியையும் திராவிட்-ஐயும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது சற்றே துணுக்குற வைக்கிறது...

திராவிட் திறமையினால் முன்னுக்கு வந்தவர்... கங்கு தாதா பெங்காலி லாபியினால் புஷ் ஃபார்வார்ட்...

திராவிடுக்கு பரிந்துரைப்பதில் ....ஒரு காரணம் ....ஒரு விதத்தில் எங்களுக்குள் சில ஒற்றுமைகள் ... (இரண்டு பேரும் "இ.வா".க்கள்)...!
(பல பேருக்கும் இது பொருந்தக் கூடும்...):lachen001: