PDA

View Full Version : நிலவை உடைத்து ஆய்வு???தாமரை
12-07-2009, 02:36 AM
http://ebooks.dinakaran.com/kungumam/2009/jul/02/109.jpg

http://ebooks.dinakaran.com/kungumam/2009/jul/02/108.jpg

http://ebooks.dinakaran.com/kungumam/2009/jul/02/110.jpg

http://ebooks.dinakaran.com/kungumam/2009/jul/02/111.jpg

http://ebooks.dinakaran.com/kungumam/2009/jul/02/112.jpg


நன்றி குங்குமம்..

தாமரை
12-07-2009, 02:52 AM
இன்னும் கொஞ்சம் கொறிக்க....

http://macedoniaonline.eu/content/view/7216/56/

தாமரை
12-07-2009, 04:45 AM
http://video.google.com/videoplay?docid=-6055631735307978494

அப்போலோ 11 - சொல்லாமல் மறைத்த கதை

இன்பா
13-07-2009, 04:07 AM
நிலவை உடைப்பது என்பது கொஞ்சம் ஓவர் கற்பனையாக தெரிகிறது.

நாசாவின் இந்தச் செயல்லின் பின்னனியில் மிகப்பெரிய காரணம் இருக்கக் கூடும், அது நன்மைக்காகவே இருக்கும் என்று சந்தேகிக்கிறேன்.

பிறகும் UFO பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள ஆசைப் படுகிறேன், தாமரை அண்ணா தான் மனசு வைக்க வேண்டும்.

தாமரை
13-07-2009, 05:08 AM
இது ஓவர்தான் என்பது தெரிந்த ஒன்றுதான். நிலவில் அக்டோபர் 9 ஆம் தேதி பறக்கும் தூசு நம் கண்ணுக்கு காணக்கிடைக்குமா என்பது முதல் கேள்வி.

UFO பற்றி நிறைய படிச்சாலும் குழப்பம்தான் மிஞ்சும். யார் சொல்வதை எடுத்துக் கொள்வது? எதை விடுப்பது என்பது குழப்பம்தான்.

நேரம் கிடைக்கும் போது இதற்கு ஒரு திரி ஆரம்பியுங்கள் எழுதலாம்

இன்பா
13-07-2009, 05:53 AM
இது ஓவர்தான் என்பது தெரிந்த ஒன்றுதான். நிலவில் அக்டோபர் 9 ஆம் தேதி பறக்கும் தூசு நம் கண்ணுக்கு காணக்கிடைக்குமா என்பது முதல் கேள்வி.

என்ன செய்வது என்னிடம் டெலஸ்கோப் எதுவும் இல்லை, ஆனால் 60X ஆப்டிகல் ஜூம் கேமரா வைத்திருக்கிறேன். அக்டோபர் 9 ஆம் தேதி மொட்டை மாடிக்குப் போய் ரெகார்டு செய்கிறேன். ஏதாவது தென்பட்டால் இங்கே வைக்கிறேன் :) .UFO பற்றி நிறைய படிச்சாலும் குழப்பம்தான் மிஞ்சும். யார் சொல்வதை எடுத்துக் கொள்வது? எதை விடுப்பது என்பது குழப்பம்தான்.

நேரம் கிடைக்கும் போது இதற்கு ஒரு திரி ஆரம்பியுங்கள் எழுதலாம்

இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று பல நாட்களாக யோசித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது ஆரம்பிக்கிறேன்.

தாமரை
13-07-2009, 10:33 AM
http://www.nasa.gov/mission_pages/LCROSS/main/

நிலவை உரசிப் பார்க்க எவ்வளவு நேரம் இருக்குன்னு இங்கே பார்க்கலாம், நமக்கு மாலை 5: மணி என்பதால் ஒண்ணும் தெரியாது. (அது தேய்பிறை பஞ்சமி எனவே நிலா லேட்டாதான் உதயமாகும்..)

மேகமூட்டம் இல்லாம இருந்தால் நிலா நம்மை நோக்கி காறித் துப்பற மாதிரி தெரிஞ்சாலும் தெரியலாம். :D

அக்டோபர் 9 இரவில் நமக்கு என்ன தெரியப் போகுதுன்னு பார்க்கலாம்..

மன்மதன்
13-07-2009, 02:44 PM
உலக உருண்டையில் அனைத்து இடங்களிலும் அத்துமீறி மோதியவர்கள்
இப்பொழுது நிலாவை குறி வைப்பதில் ஆச்சரியம் இல்லை..

அந்த கட்டம் கட்டிய செய்தி மட்டும் உண்மையென்றால் ‘2012’ உலகம் அழியும்
என்ற ஊகங்களுக்கு இது ஒரு ஊக்கமாக கூட அமையக்கூடும்..

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள்...
ஆனால் பல ஆராய்ச்சிகள் செய்து பல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமெரிக்கா,
உலகம் அழிவதற்கும் காரணமாக அமையுமோ...??!!

இளசு
13-07-2009, 05:02 PM
இருளை விலக்கி சற்றே பார்க்க ஒரு பெரிய தீக்குச்சி கிழிப்பதாய்த்தான் இதைப் பார்க்கிறேன் தாமரை..

குங்ங்ங்குமம் தந்த தலைப்பு ஊடகவியல் அதீதம்!

நமக்கு ( நம் பூமிக்கு) வாய்த்த நிலா... அதிர்ஷ்டம்!

முதலில் அவை இரட்டையராய் இருந்தன.
பின்னர் அதிர்ஷ்டவசமாய் மோதி இணைந்தன.
அதனால் எடை இருபங்காய் கூடிய ஒற்றை நிலா.
அந்த பருமனால் பூமி கண்ட பயன்கள் -
அட்மாஸ்ஃபியர் என்னும் காற்றுமண்டலத்தை தக்கவைக்கும் ஆற்றல்..
சற்றே கோணம் மாறிய சுற்றல் - அதனால் பருவக்காற்று, பருவகாலங்கள்..

நிலாவால்தான் இன்றைய பூமி - ஆக்சிஜன், நீர் கொண்டும்,
சூரிய வெப்பம், புற ஊதா தரும் அழிவை நிறுத்தியும் வாழ்கிறது..

நிலா - ஒரு துணைக்கோள் அன்று..
நிலாதான் நம் இருப்பின் அச்சாணி!

அதைப் பிளப்பது.... நம்மை அழிப்பது..

எனினும் இப்படி சுரண்டிப்பார்ப்பது கூட தேவையா?

ரங்கராஜன்
13-07-2009, 05:49 PM
அமெரிக்கா உடைங்கடா உடைங்க,,,,,,,,, இன்னும் கொஞ்ச நாள் தான், 2012 அப்புறம் பூமாதேவி வாயை பிளப்பா எல்லாரும் உள்ளே போவ வேண்டியது தான்.
சும்மா இருக்குற இயற்கையை ஏண்டா இப்படி நோண்டி விடுறீங்க.

இந்த மாதம் எங்கள் குடியிருப்பில் நான் தான் maintanice பார்க்கிறேன் (சுழற்சி முறையில்) இந்த பாதி மாதத்தில் மட்டும் லாரி தண்ணீர் 15000 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறோம், இன்னும் பாதி மாதம் ஓட்ட வேண்டும். ஒரு லாரி தண்ணீர் 1000 ரூபாய் விற்கிறது. எங்கள் குடியிருப்பில் 16 குடும்பம் தான் இருக்கிறது, இத்தனைக்கு வீட்டிற்கு 2 பேர் தான் பெரும்பாலும்.

இவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோம், இப்படி எத்தனை குடியிருப்புகள், எத்தனை நகரங்கள், எத்தனை மாவட்டங்கள், எத்தனை மாநிலம், எத்தனை நாடுகள்.......... ஆனால் உலகம் மட்டும் ஒன்று.

தயவுசெய்து இயற்கையை மாசுப்படுத்துவதை தவிர்க்கவும், நிலாவை உடைப்பது, பூமிக்குள் ஆராய்ச்சி செய்வது, வானத்தில் மின்காந்த புயலை உருவாக்கி சோதனை செய்வது போன்ற விஷயங்கள் விடும் மக்களே................. என்ன தான் ஆட்டம் போட்டாலும்,,,,,,,,,,,,,, பதிலுக்கு பூமி கொஞ்சம் குலுங்கினாளே நின்று போகும் அனைவரின் ஆட்டமே.

அருள்
13-07-2009, 06:04 PM
மாசில்லா நிலவை உடைத்து கலங்கபடுத்தபோகிறார்களா அல்லது கலங்கபடுகிறார்களா பார்போம்...... :confused:

அறிஞர்
13-07-2009, 07:11 PM
ஆராய்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் இருக்கதான் செய்கிறது.

இந்த மோதலால் நிலாவுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது என்றே நம்புகிறேன்.

ஆராய்ச்சி வெற்றியாக முடிந்தால் அனைவரும் பலமாக பாராட்டுவர்..

விக்ரம்
13-07-2009, 09:42 PM
இயற்கைக்கு மாறுதலாய் யோசித்ததால் தான் இன்றைக்கு, ஒருத்தர் எழுதுறதை இன்னொருத்தர் படிக்கிறோம்.

அமெரிக்காவுக்கு தெரியும் what to do, what not to do.

இனிமே நிலாவக் காமிச்சு சோறு ஊட்ட முடியாதோனு நம்ம பயப்படலாம். அதுக்காக பட்டினி இருக்க முடியுமா?

தண்ணியே இல்லாத வறண்ட பூமியிலே வீட்டை கட்டிட்டு, இயற்கை மாசு படுவதால் தான் லாரி தண்ணிக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம்னு சொன்னா எப்படி? அது விதி, இப்படித்தான் இருக்கும். எதிர்காலத்துல இன்னும் மோசமா இருக்கும்.

பொருளீட்ட எல்லாரும் காஸ்மோ (அ) மெட்ரோ பாலிட்டன் சிட்டியைத் தேடிப் போவதைப் போலத்தான், அறிவைத் தேடி அமெரிக்கா எங்கெங்கயோ போயிட்டிருக்கு. அதை அழிவைத் தேடினு நாம தப்பா புரிஞ்சு இட்டுக் கட்டுறோம்.

நாம காலையில் பல் விளக்குற பொருளில் இருந்து, நைட்டு தூங்குற வரைக்கும் பயன்படுத்துற ஒவ்வொன்றும் இயற்கையை அளித்து உருவாக்கப்பட்டவை.

இயற்கையை அழிக்காமத் தான் வாழுவேன் என்று அடம்பிடிக்கும் நிலையிலா நமது வாழ்க்கை இருக்கு? இயற்கையோடு ஒன்றித்தான் வாழுவேன் என்றால், நீலகிரி மாவட்டத்துல இருக்க காட்டுக்குள்ள போய் தான் நம்மெல்லாம் வாழணும்.

ஒரு சிறிய தொற்று நோய் வந்தா போதும், ஊரே காலியாய்டும். அட நீங்க வேற, பக்கத்து ஊருக்கு போயிடலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க. நான் சொன்ன ஊரே காலியாயிடும்னா ஆல் ஆளும் மர்கையா.

நம்ம இயற்கைக்கு தீங்கு விளைவிக்கிறோம், இல்லேனு சொல்லவே இல்லை. இதெல்லாம் விதி. விதினா fate லேது law.

இந்த உலகம் இது வரை அழிஞ்சு போயிருக்கா? சுனாமி, எரிமலை, நிலநடுக்கம் எல்லாம் பூமி அழிஞ்சு போறதுக்கு உதாரணம் இல்லை. அதெல்லாம் பூமியோட charectaristic.

காடுகளை அழிச்சு வீட்ட கட்றதுக்கு முன்னாடியும் மழை இல்லாம பஞ்சம் வந்திருக்கு. எப்ப சுனாமி வரல? எப்ப நிலநடுக்கம் வரலை?

நானும் சின்ன வயசில இருந்து, உலகம் அழியுற கதையை பல முறை கேட்டுட்டேன்பா. 2000 ல உலகம் அழிஞ்சிடும்னு சொல்லிட்டு ஒரு படத்துல ஒரு கேரக்டர் திரியுமே, அது ஒரு ஜோக்கர் கேரக்டர்பா.

உலகம் அழியுறதைப் பத்தி ஆராய்ச்சி எல்லாம் 40 வயசுக்கு மேல பண்ணிக்கோங்க, அது வரைக்கும் வாழுங்க மக்களே.

மழை வரும் (அ) வராது னு சொல்லலாம். நிலநடுக்கம் வரும்னு முன்னக்கூட்டி சொல்ற அளவுக்கு நமக்கு எப்ப அறிவு வருதோ, அன்னிக்கு சொல்லுங்க உலகத்தில இருக்கவங்க எல்லாம் அழிவாங்க என்று. அப்பவும் உலகம் அழியாது.

இன்பா
14-07-2009, 03:22 AM
நிலவை இரண்டாக பிளக்கிறார்கள் என்று எல்லோரும் தவறாக நினைக்கிறீர்கள்,

இந்த ஆராய்ச்சியின் நோக்கத்தை நாசா நன்றாக விளக்கிவிட்டிருக்கிறது,

இந்த நிலவால் பூமிக்கு என்ன பயன் நிலவை பிளந்தால் பூமியில் ஏற்படும் வினைகளையும் அவர்கள் அறியாமலா இருப்பார்கள், அவர்கள் அறிந்து சொன்னது தானே நமக்கு,

பெரிய சைஸ் ராட்சத விண்கற்கள் போதியதை கம்பேர் செய்யும் போது இது ஒரு சின்ன வெடிப்பே, இதானால் எந்த பாதிப்பும் வருப்போவதில்லை.

இந்த வெடிப்பின் பின்னனியில் வெறுதிட்டம்மும் இருக்கிறது, அதை நாசா சொல்ல மறுக்கிறது என்று வாதிடுவோரின் அனுமானங்களும், மேற்கோள்களும் நம்பும்படியாகவே இருக்கிறது.

தாமரை
14-07-2009, 03:53 AM
2012 ல் உலகம் அழியுமா? விஜய் டி.வில இன்னிக்கு பத்துமணிக்கு இதைப் பற்றி நடந்தது என்ன நிகழ்ச்சியில் காட்டப் போறாங்க..

சந்தேகங்கள் சில இருக்கு..

1. இது அமெரிக்காவின் புதுவகை வெடிகுண்டு தயாரிப்பா? பூமியில் சோதனை செய்தால் பிரச்சனை என்று நிலவில் செய்கிறார்களா?

2. சந்திராயன், ஜப்பான் மற்றும் சீன துணைக்கோள்கள் இதைப் படம் பிடித்து ஆய்வு செய்யுமா?

3. நிலவின் அச்சில் மாறுதல் ஏற்படுமா? இதனால் பூமியின் கடல்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

அந்த நிகழ்வைத் தொடர்ந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் இயற்கை நிகழ்வுகள் ஏற்பட்டாலும் அதை வச்சி 10 சினிமா எடுக்கப்படும்..

தக்ஸிற்கு இப்பவே கை துடிக்கலாம்.. அதாவது நிலாவில் உள்ள ஒரு வெளிக்கிரக தளத்தின் மீது குண்டு போடற மாதிரி கதைன்னா, அதுக்கு அவங்க ரியாக்ஷன் பிரம்மாண்டமான கதையைத் தரும்.

மோதப்போகும் கணை கதிரியக்கம் உண்டாக்குமா?

இதுதான் மிகப் பெரிய கேள்வி..

நிலா நமக்கு இதுவரை கறுப்பு வெள்ளை படமாகவே இருக்கிறது, கலப்படங்கள் நடந்து அது கலர்ப்படமாக ஆகுமா? வாயுக்கள் உருவாகினால் நிலவு வண்ணமாகும்.

அக்டோபர் 9 ஐ ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

2012 ஐப் பற்றி நேற்று அனிருத் பள்ளியில் இருந்து வந்ததும் கேட்டான், அப்பா 2012 ல் பூமி வெடித்துச் சிதறிவிடுமாமே என்று..

இந்த வார இறுதியில் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லி இருக்கிறேன், ஈரோடுக்குச் செல்லும் ஐந்தரை மணிநேரம் இதில்தான் கழியப் போகிறது..

தாமரை
14-07-2009, 11:27 AM
நாசா சொன்னமாதிரி இங்கே தண்ணி இருக்கிறது எனத் தெரிந்தாலும் இன்னும் பலப்பல வேலைகள் இருக்கு..

இது இருண்ட பகுதி எனவே வெளிச்சம் உண்டாக்கணும்.

அப்புறம் போய்ட்டு வர எரிபொருளுக்கு ஏற்பாடு செய்யணும். எரிபொருள் அங்கேயே இருந்தா? டிரில் பண்ணி எடுக்கணும்.

இப்படி ப்ல படிகள் ஏறி போகணும்.. இப்போ இருக்கிற இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேசன் மாதிரி ஒண்ணை நிலாவில் கட்டமுடியுமா என்பது முதல் நடவடிக்கையா இருந்தா அது சரியான அணுகுமுறைன்னு சொல்வேன்.

நிலவின் ஒருபகுதியில் எப்பொழுதுமே வெயில் படுவதில்லை என்பதால் ஆவியான நீர் முழுதும் அங்கதான் போய் உறைந்திருக்கணும் என்பது தியரி.. இதை நிலா மேல இருக்கிற ஸ்பேஸ் ஸ்டேசன்ல இருந்து மனிதர்களே போய் பார்த்து டெஸ்ட் பண்ணிட்டு வரலாம்..

அப்ப அடுத்த ஸ்டெப் விண்வெளியில் குடௌன்களை கட்டுவதாக இருக்கணும் இல்லையா? அப்படிக் கட்டினா அதில் எரிபொருள், உண்வு இப்படி பல ஐட்டங்களை சேர்த்து வைக்கலாம். அதை வைத்து நிலாவைச் சுற்றி ஸ்பேஸ் குடோன் செய்து.. அப்புறம் அதிலிருந்து நிலவின் மீதான தளத்தைக் கட்டலாம்,,

நிலவில் எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் நிலவு நம் விண்வெளித் தளமாக மாறும்.

நாம் எந்த கிரகத்தை நோக்கி அடியெடுத்தாலும் நிலா வழியே போனா நல்லது. அதுக்குத்தான் நிலா மேல நாஸாவுக்கு மறுபடி பாசம் வந்திருக்கு என்று நினைக்கிறேன்..

விண்வெளியில் குடோன் கட்டி வாடகைக்கு விட்டு எதிர்காலத்தில சம்பாதிக்கலாம்.

:D :D :D

விக்ரம்
14-07-2009, 11:30 AM
2012 ஐப் பற்றி நேற்று அனிருத் பள்ளியில் இருந்து வந்ததும் கேட்டான், அப்பா 2012 ல் பூமி வெடித்துச் சிதறிவிடுமாமே என்று..

இந்த வார இறுதியில் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லி இருக்கிறேன், ஈரோடுக்குச் செல்லும் ஐந்தரை மணிநேரம் இதில்தான் கழியப் போகிறது..
அனிருத்தையும் விட்டு வைக்கிறதில்லையா நீங்க.. :traurig001: :traurig001: (ஜோக்கை ஜோக்காத்தான் எடுத்துக்கணும்)

நேத்து நைட் கனவுல அக்டோபர் 9 வந்துதுங்க, இன்பாவும், தக்ஸ் எல்லாம் கனவுல வந்தாங்க. நிலவ யாரோ கைல புடிச்சிட்டு நிக்குற மாதிரி கனவு. உங்கள மாதிரியும் இருக்கு, இல்லாமலும் இருக்கு.

இன்பாவும், தக்ஸும் ஆளுக்கொரு காமிராவைப் பிடிச்சிட்டு, ஒன்ஸ்மோர் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு மேல சரியாத் தெரியலை.

இன்பா
14-07-2009, 11:32 AM
விண்வெளியில் குடோன் கட்டி வாடகைக்கு விட்டு எதிர்காலத்தில சம்பாதிக்கலாம்.

:D :D :D

சந்திராயன்-2 போகும்போது, சத்தமில்லாம் போய் டிக்கியில உக்காந்துர வேண்டியது, டவல் போட்டு இடம் பிடிச்சி வெச்சா... எதிர் காலத்துல நல்ல காசு பாக்கலாம் :D

இன்பா
14-07-2009, 11:35 AM
இன்பாவும், தக்ஸும் ஆளுக்கொரு காமிராவைப் பிடிச்சிட்டு, ஒன்ஸ்மோர் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு மேல சரியாத் தெரியலை.

ஆனா எனக்கு தெளிவா தெரிஞ்சது...!!!

நீங்க பூமியில இருந்து காப்பத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திகிட்டிருந்தீங்க...

நான் தான் பறக்கும் தட்டுல இருந்து வந்து உங்கள் காப்பாத்தினேன் :D

ஆதி
14-07-2009, 11:36 AM
சந்திராயன்-2 போகும்போது, சத்தமில்லாம் போய் டிக்கியில உக்காந்துர வேண்டியது, டவல் போட்டு இடம் பிடிச்சி வெச்சா... எதிர் காலத்துல நல்ல காசு பாக்கலாம் :D


இன்பா டிக்கிலதான் நெருப்பு வரும்.. :)

விக்ரம்
14-07-2009, 11:37 AM
சந்திராயன்-2 போகும்போது, சத்தமில்லாம் போய் டிக்கியில உக்காந்துர வேண்டியது, டவல் போட்டு இடம் பிடிச்சி வெச்சா... எதிர் காலத்துல நல்ல காசு பாக்கலாம் :D
சந்திராயன்-2 டிக்கில தான் எரிப்பான் போக்கி இருக்கு, உட்கார முடியுமா? வெந்திரும்..

கோயமுத்தூர் காரங்க உக்காந்தாலும் உக்காருவீங்கய்யா...

விக்ரம்
14-07-2009, 11:38 AM
ஆதி செம டமிங்.. ரெண்டு பேரும் ஒரே டைம்ல டைப் பண்ணி, பதிவு பண்ணிருக்கோம்.

பரஞ்சோதி
14-07-2009, 11:40 AM
ஆஹா!

என்னப்பா ஆளுக்கு ஆள் வயித்தில புளியை கரைக்கிறீங்க.

அமெரிக்காவின் ஆராய்ச்சியினால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று சொன்ன அறிஞரின் கருத்தையே நானும் சொல்கிறேன்.

தாமரை
14-07-2009, 11:41 AM
அனிருத்தையும் விட்டு வைக்கிறதில்லையா நீங்க.. :traurig001: :traurig001: (ஜோக்கை ஜோக்காத்தான் எடுத்துக்கணும்)

நேத்து நைட் கனவுல அக்டோபர் 9 வந்துதுங்க, இன்பாவும், தக்ஸ் எல்லாம் கனவுல வந்தாங்க. நிலவ யாரோ கைல புடிச்சிட்டு நிக்குற மாதிரி கனவு. உங்கள மாதிரியும் இருக்கு, இல்லாமலும் இருக்கு.

இன்பாவும், தக்ஸும் ஆளுக்கொரு காமிராவைப் பிடிச்சிட்டு, ஒன்ஸ்மோர் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு மேல சரியாத் தெரியலை.

அனிருத்தும் எங்களை விட்டு வைக்கிறதில்லை அப்படின்னு ஸ்டேட்மெண்டை நீங்களே கூடிய சீக்கிரம் மாத்தும்படி செய்திடறேன்..

பின்னாடி நிறைய பேர் கூட்டமா நின்னு கைதட்டினதை பார்க்கலையா?

நாசாவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி காலியாயிருக்குன்னு கேள்விப்பட்டேன்,,, அப்ளை பண்றதுக்குத்தான் இப்படி எல்லாம் ஆராய்ட்சி.. :icon_rollout::icon_rollout::icon_rollout::D:D:D

விக்ரம்
14-07-2009, 11:42 AM
ஆனா எனக்கு தெளிவா தெரிஞ்சது...!!!

நீங்க பூமியில இருந்து காப்பத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திகிட்டிருந்தீங்க...

நான் தான் பறக்கும் தட்டுல இருந்து வந்து உங்கள் காப்பாத்தினேன் :D
காமிரா மேன் -> பறக்கும் தட்டு ஓட்ற டிரைவர் அளவுக்கு புரமோஷன் வாங்கிட்டீங்க, சொல்லவே இல்லை. ஆமா கண்டக்டெர் ஆரு தாமரை அண்ணாவா? தக்ஸா? அதெப்படிங்க, இப்புடியெல்லாம் யோசிக்கிறீங்க..

இன்பா
14-07-2009, 11:43 AM
இன்பா டிக்கிலதான் நெருப்பு வரும்.. :)


சந்திராயன்-2 டிக்கில தான் எரிப்பான் போக்கி இருக்கு, உட்கார முடியுமா? வெந்திரும்..

கோயமுத்தூர் காரங்க உக்காந்தாலும் உக்காருவீங்கய்யா...

சாரி டிக்கி வழியா உள்ளே நுழைஞ்சு... அப்படின்னு எழுத வந்தேன் :)

டிக்கி வழியா உள்ள போயிடுவேன்னு சொல்ல வந்தேன்... :)

ஒரு வழியா சமாளிச்சிட்டேன்... இல்ல

இன்பா
14-07-2009, 11:45 AM
காமிரா மேன் -> பறக்கும் தட்டு ஓட்ற டிரைவர் அளவுக்கு புரமோஷன் வாங்கிட்டீங்க, சொல்லவே இல்லை. ஆமா கண்டக்டெர் ஆரு தாமரை அண்ணாவா? தக்ஸா? அதெப்படிங்க, இப்புடியெல்லாம் யோசிக்கிறீங்க..

நான் ட்ரைவர், நமிதா கண்டக்டெர்... :D

விக்ரம்
14-07-2009, 11:45 AM
ஆஹா!

என்னப்பா ஆளுக்கு ஆள் வயித்தில புளியை கரைக்கிறீங்க.
.
அப்ப இன்னிக்கு சமையலுக்கு புளி வாங்க தேவையில்லையா? அதான் இன்னிக்கு அந்த இந்தியன் ஸ்டோர் பக்கம் புளிவாங்க நீங்க வரலையா?

பரஞ்சோதி
14-07-2009, 11:46 AM
இன்பா டிக்கிலதான் நெருப்பு வரும்.. :)

ஹா! ஹா!

இன்பாவை நினைச்சேன், இன்பமாக சிரிச்சேன்.

- பர்னால் டப்பாவுடன்

தாமரை
14-07-2009, 11:46 AM
ஆஹா!

என்னப்பா ஆளுக்கு ஆள் வயித்தில புளியை கரைக்கிறீங்க.

அமெரிக்காவின் ஆராய்ச்சியினால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று சொன்ன அறிஞரின் கருத்தையே நானும் சொல்கிறேன்.

இங்க எங்க பீதியைக் கிளப்பறோம்? பீதியைக் கிளப்ப 2012 தானே...

நம்மைச் சுற்றி நடக்கிற சில ஆய்வுகளையும் அது சம்பந்தப்பட்ட தகவலகளை சொல்றோம் அவ்வளவுதானே..

பீதி கிளம்பினா பேதி புடுங்கி பாதியா இளைச்சற மாட்டமா என்ன?

விக்ரம்
14-07-2009, 11:48 AM
நான் ட்ரைவர், நமிதா கண்டக்டெர்... :D
அதான் உங்க பஸ்ல தாமரை, தக்ஸ் எல்லாம் வர்றாங்களா?

பரஞ்சோதி
14-07-2009, 11:49 AM
அப்ப இன்னிக்கு சமையலுக்கு புளி வாங்க தேவையில்லையா? அதான் இன்னிக்கு அந்த இந்தியன் ஸ்டோர் பக்கம் புளிவாங்க நீங்க வரலையா?

ஆஹா! புளியை கரைச்சி ரசமாக செய்திட்டா ஆச்சுது.

வீட்டுக்கு வாங்கப்பூ, வந்து வயிற்றில் புளிக்கரைச்சல் ஊத்திக்கீங்க.:aetsch013:

இன்பா
14-07-2009, 11:50 AM
அதான் உங்க பஸ்ல தாமரை, தக்ஸ் எல்லாம் வர்றாங்களா?

அய்யோ அய்யோ அது பஸ் இல்லைங்கள் ஒளி வேகத்தில் செல்லும் வாகனம்...

ஒளி வேகத்துல போனா வயசாகாதாமே ? அதான் எப்பவும் பறந்துகிட்டே இருப்போம் :D

விக்ரம்
14-07-2009, 11:55 AM
அய்யோ அய்யோ அது பஸ் இல்லைங்கள் ஒளி வேகத்தில் செல்லும் வாகனம்...

ஒளி வேகத்துல போனா வயசாகாதாமே ? அதான் எப்பவும் பறந்துகிட்டே இருப்போம் :D
நான் 2012 திரிலயே நினைச்சேன், உங்க தலைக்கு மேல ஒரு ஓளிவட்டம் தெரியும்னு, இப்ப அதை நிரூபிச்சிட்டீங்க.

தக்ஸோட நண்பரோட அப்பாக்கும் ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சதை சொல்லிருப்பாரே. அப்ப உங்க வீட்டு சீலிங்ல கூடிய சீக்கிரம் வானம், நிலா, நட்சத்திரம், ஓளி வாகனம், அப்புறம் நமீதா படம் எல்லாம் வரையணுமே..

இன்பா
14-07-2009, 12:05 PM
அப்ப உங்க வீட்டு சீலிங்ல கூடிய சீக்கிரம் வானம், நிலா, நட்சத்திரம், ஓளி வாகனம், அப்புறம் நமீதா படம் எல்லாம் வரையணுமே..

அப்படி வரைஞ்சா நல்ல பலன் இருக்குங்களா ?

தாமரை
14-07-2009, 12:16 PM
கல்யாணமாகாதவங்க நமீதா ப்டம் வரையலாம்..

ஒளிரும் படங்களில் இன்னொரு வசதி. அதை உத்துப்பாத்துட்டு கண்ணை மூடினா அதன் எதிரான கலரில் உருவம் தெரியும்...

கல்யாணமானவங்களுக்கு இதை நேரடியா செய்ய முடியாது. அதுக்கு ஓவியத்தில் நுணுக்கங்கள் உள்ளன... ஹாலோகிராம் உபயோகிக்கணும்.

அம்மணி பக்கம் இருந்து பார்த்தா அஸ்ட்ராநாட் மாதிரி தெரியும்.. நம்ம பக்கம் இருந்து பார்த்தா நமீதா தெரிவாங்க...

தாமரை
14-07-2009, 12:28 PM
அய்யோ அய்யோ அது பஸ் இல்லைங்கள் ஒளி வேகத்தில் செல்லும் வாகனம்...

ஒளி வேகத்துல போனா வயசாகாதாமே ? அதான் எப்பவும் பறந்துகிட்டே இருப்போம் :D

ஒளியின் வேகத்தில் சென்றால் வயசாகாதா? இது என்ன் கூத்து?

இது ஒரு கற்பனை மாத்திரமே...

நாம் என்ன வேகத்தில் இப்போ போய்கிட்டு இருக்கிறோம் என்று 2012 திரியில் ஒரு கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=422706#post422706

அண்டவெளி முழுதிலும் சுற்றுகின்ற வேகத்தை எடுத்தால்....

நாம ஏறக்குறைய ஒளியின் வேகத்தில்தான் போய்கிட்டு இருப்போம்.

நமக்கு வயசாகலியா என்ன?

இன்பா
14-07-2009, 12:56 PM
ஆமாம் அண்ணா நான் படித்திருக்கிறேன், "பிரபஞ்சத்தின் 70 புதிர்கள்" என்ற தலைப்பில் இருஙள் அந்த கட்டுரையை தேடித்தருகிறேன்.

தாமரை
14-07-2009, 01:47 PM
நீங்க வயசைப் பற்றிச் சொன்னது இதானுங்களே

http://en.wikipedia.org/wiki/Time_dilation

but that is only true in the context of the observer's frame of reference.

ஆனால் நாம தொடங்கிய இடத்திற்கு திரும்ப வரும்போது பிராஸஸ் ரிவர்ஸ் ஆகிடுமே கண்ணா...

அதாவது நீ பூமியில் இருந்து கிளம்பற... நம்மோட வயசு 41.. சரியான வயசு,

ஒளியோட வேகத்தில நீ போயிடற.. 10 வருஷம் கழிச்சு நீ பூமிக்கு திரும்ப வர்ர..

உனக்கு 41 எனக்கு 51 இருக்கும்னு சொன்னா தவறு... இந்த தியரியை வச்சு அதை நிரூபி பார்க்கலாம்...

தாமரை
14-07-2009, 02:37 PM
நிலவிற்கு 1972க்குப் பிறகு வேற யாரும் போகவில்லை.. ஆனால் சில ஆண்டுகளாக நிலாவிற்கு போகும் திட்டம் அதிகரிக்கிறது என்றால் இரண்டு காரணங்களே இருக்க முடியும்..

பறக்கும் தட்டுகள் அதில் ஒரு காரணமா இருக்கலாம், விண்வெளி நிலையங்கள் மூலம் நிலாவிற்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்திருக்கலாம்.

அல்லது நிலவில் எரிபொருள்.. இராக்கெட் டெக்னாலஜிக்குத் தேவையான சில எரிபொருட்கள் நிலவில் இருப்பதாக கருதலாம். அப்படி இருந்தா நிலவில் தளம் அமைத்து வான்வெளி ஆராய்ட்சிக்கு ஒரு இடைத் தளமாக பயன்படுத்தலாம்,

நீர் இருந்தால் அதை ஆக்சிஜனாக்கி திரவ ஆக்சிஜனாக இருள் பகுதிகளில் சேமித்தால் மிகப்பயனுள்ளதாக இருக்கும். இப்படி எதையோ ஒண்ணைக் கணக்கில் வச்சுதான் இருள் பகுதியை தோண்டறாங்க.

சந்திரனில் பகல் நேர வெப்பநிலை 107 டிகிரி செல்சியஸ். இரவு வெப்பநிலை -153 டிகிரி செல்சியஸ். சந்திரனில் வளி மண்டலம் இல்லை.. ஏனென்றால் சந்திரனின் ஈர்ப்பு விசை குறைவு. அதனால் வெயில் படும் இடங்களில் இருக்கும் திரவங்கள் ஆவியாகி இருக்கும். வெயிலபடாத இடங்களில் திரவங்களும் வாயுக்களும் உறைந்திருக்கலாம் என்ற கணிப்பு மட்டுமே இந்தச் சோதனைக்குக் காரணம். ஏனென்றால் இதை தொலைநோக்கியில் கணிக்க முடியாது..

நிலவின் ஈர்ப்ப்பு விசை குறைவு என்பதால் பூமியில் நிகழும் வெடிப்பை விட இங்கு சற்று பெரிய பள்ளமே தோன்றும். , இந்த வெடிகள் ஏற்படுத்தும் உஷ்ணத்தினால் அங்கே உறைந்திருக்கும் சில பல வாயுக்கள் வெடிப்பை அதிகப்படுத்தினால் என்னாகும் என்ற அச்சம் இலேசாக மனசில இருக்கத்தான் செய்யுது..


இதைப்பார்த்து ஒரு அரசியல்வாதி, இந்தியா ஒரு மனிதனை ஒரு கவட்டைக் குச்சியுடன் நிலாவிற்கு அனுப்பும், அந்தக் கவட்டைக் குச்சி மூலம் நிலாவில் தண்ணி இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடிப்போம்னு சொல்லி இருப்பதா வதந்தி...

அருள்
14-07-2009, 02:44 PM
அரசியல்வாதி மூளை? ...... ரொம்ப அதிகம்....

ரங்கராஜன்
14-07-2009, 04:45 PM
இந்த வார இறுதியில் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லி இருக்கிறேன், ஈரோடுக்குச் செல்லும் ஐந்தரை மணிநேரம் இதில்தான் கழியப் போகிறது..

கொடுத்து வைத்த பையன் அனிருத்............... அனிருத்தாக நான் அன்று இருக்க கூடாதா???????

தாமரை
11-08-2009, 07:05 AM
http://www.space.com/common/media/video/player.php?videoRef=SP_090622_lro_orbit


இந்த அனிமேஷன் விளக்கமாக உள்ளது.

தாமரை
28-08-2009, 03:46 AM
இந்தச் செய்தியைப் படியுங்கள்..

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கத் தூதுவர் அப்போதைய ஜெர்மன் பிரதம மந்திரிக்கு அளித்த சந்திரக் கல் போலியா?

http://www.projo.com/news/content/MOON_ROCK_08-28-09_INFHIKT_v7.353e501.html

தாமரை
09-10-2009, 11:13 AM
இன்னும் ஒரு மணிநேரத்தில் மோதப் போகுது.. யாஹூவிலும் நாசா டிவி யிலும் ஒளிபரப்பறாங்க..

நான் பார்த்துகிட்டு இருக்கேன் மக்கா...

தாமரை
09-10-2009, 11:24 AM
இன்னும் 10 நிமிஷம்

aren
09-10-2009, 01:16 PM
எங்கே வருகிறது

அறிஞர்
09-10-2009, 01:53 PM
இன்று மோதியதின் விளைவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என செய்திகள் கசிய தொடங்கியுள்ளது.

aren
09-10-2009, 01:58 PM
இல்லை, பெரியதாக புழுதியைக் கிளப்பியதாகத் தகவல்

எந்த இணையத்தில் நேரடி ஒலிபரப்பு வருகிறது

பாலகன்
09-10-2009, 02:29 PM
மோதியது இந்த இடத்திலா? Stellarium ல் பார்த்துக்கொன்டிருந்தேன்.. அதான்

http://img207.imageshack.us/img207/9089/nilla.jpg

இந்த பக்கத்தில் நிலவில் ராக்கெட் இடிக்கும் வீடியோ உள்ளது. தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்கள்.

http://www.telegraph.co.uk/science/space/6271089/Nasa-bombs-to-reveal-water-on-moon.html#

தாமரை அண்ணாவுடைய விவரமான பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

aren
09-10-2009, 03:46 PM
எதோ அனிமேஷம் வீடியோ பார்த்தது போலிருந்தது.

தாமரை
13-10-2009, 09:12 AM
அங்கு இருப்பது அசல் இல்லை.. அது அனிமேஷன் வீடியோ ஆகும்.

நான் நாசா டீ.வி வழியாக ஒளிபரப்பட்ட நேரடி ஓளிபரப்பைப் பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போல பெரிய புழுதிப் படலம் உருவாகவில்லை.

http://www.nasa.gov/mission_pages/LCROSS/multimedia/index.html

இந்தப் பக்கத்தில் ஒரிஜினல் வீடியோவும், அனிமேஷன் வீடியோவும் உள்ளது..

எதிர்பார்த்த அளவிற்கு தூள் பறக்காததால் பல வானியல் வல்லுனர்கள் ஏமாற்றமே அடைந்தார்கள். 66 அடி பள்ளம் ஏற்பட்டாலும் ஏமாற்றம் அதிகம்


பூமியில் இருந்து எடுத்த ஃபோட்டோ

http://www.nasa.gov/images/content/390086main_earth_view_4x3_946-710.jpg

மேலுள்ள படத்தில் உள்ள புள்ளிகளைப் பார்த்து ஏமாந்திடாதீங்க. அவை காஸ்மிக் கதிர்களால் உண்டானவை... பூமியில் இருந்து பார்த்த எந்த தொலை நோக்கியிலும் ஒண்ணும் தெரியலை..


செண்டார் மோதியதை எல்கிராஸ் எடுத்த அகச்சிவப்புப் படம்.

http://www.nasa.gov/images/content/392968main_LCROSS_9_516-387.jpg

செண்டார், எல்கிராஸ் என்ற இரண்டும் மோதிய பின்னர் லூனார் ரிகன்னைசன்ஸ் ஆர்பிடர் மோதல் நடந்த இடத்தை பல அகச்சிவப்புக் கதிர் படங்களை எடுத்தது..

அவை இங்கே

http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/091012-temp-map-02.jpg

எந்த இடம்னு இன்பா கேட்டாரு... Expected plume area அப்படின்னு இங்க குறிச்சிருக்கே அதுதான்...

http://www.nasa.gov/images/content/392732main_cabeus1_946-710.jpg


அந்த குழி வறண்ட குழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.. நம்ம அரசிய்ய்ல்வாதிங்க மாதிரி நாசாவும் நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. அதையெல்லாம் ஆராய்ட்சி பண்ண பல மாதங்கள் ஆகும். எங்களைப் பொறுத்த வரை இந்த முயற்சி வெற்றிதான் என்று அறிக்கை விட்டிருக்காங்க..

ஆனால் முக்கிய நோக்கம் நிறைவேறலை என்பதுதான் உண்மை.

aren
13-10-2009, 03:02 PM
கவலைவேண்டாம் தாமரை. இது வெறும் ஆரம்பம். இதை வைத்து இன்னும் பல கண்டுபிடிப்புகள் வரும் என்பது நிச்சயம். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

தாமரை
17-11-2009, 03:36 AM
ஆய்வு நடந்து பல நாட்களுக்குப் பிறகு தற்போது நாசா சில தகவல்களை வெளியிட்டு உள்ளது...

இந்த மோதலால் ஏற்பட்ட 66லிருந்து 100 அடி அகலமான பள்ளத்தில் 25 காலன்கல் வரை உறைந்த் நீர் இருந்திருக்கலாம் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. ஒரு காலன் என்பது 3.75 லிட்டர் என்பதால் ஏறக்குறைய 94 லிட்டர் தண்ணீர் என எடுத்துக் கொள்ளலாம்.

இது திருப்தி அளிக்கக் கூடிய செய்தி அல்லதான் என்றாலும்... எதோ கொஞ்சம் இருக்கு என்ற அளவிற்கு ஓகேதான். இந்த நீரும் வால் நட்சத்திரத் துண்டுகள் விழுந்ததால் உண்டாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது..