PDA

View Full Version : ஒரு வார்த்தை - 49



ரங்கராஜன்
10-07-2009, 06:07 PM
vwewgw

கா.ரமேஷ்
11-07-2009, 04:48 AM
வழக்கம்போல அருமை...

samuthraselvam
11-07-2009, 05:08 AM
சூப்பரான கதை அண்ணா......

ஒரே ஒரு வார்த்தை மனதில் என்ன மாதிரியான வலியை உண்டாக்கும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்....

ஆனால் இந்த மாதிரியான சண்டை ஒரு எல்லைக்குள் தான் இருக்க வேண்டும்.... இல்லையேல் விபரீதம் தான்...

பாராட்டுக்கள்....

அந்த வயசான பாட்டி தாத்தா அன்பு அருமை...

பாரதி
11-07-2009, 01:45 PM
கதையைப்படித்தேன் மூர்த்தி.

எந்த நேரம்; எந்த வார்த்தை; எப்படித்தாக்கும் என்பதையறியாமல் நாவினால் சுட்டால் ஆயுளுக்கும் அது மறக்காது. அந்த வார்த்தைகளின் வலிமை அனைவரும் அறிந்ததே.

கதைகளில் உரையாடல்கள் இயல்பாக இருப்பதாக அமைந்திருப்பது நன்றாக இருக்கிறது.

முதலிரண்டு வாக்கியங்களைப் படிக்கும் போது கதை நடைபெறும் நேரம் காலையா, மாலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கதையை எந்தவிதத்திலும் இது பாதிக்காது என்றாலும் கதையை நகர்த்தும் போது சரியாக நன்றாக இருக்கும். எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே.

ஐம்பதாவது கதைக்கு முன்கூட்டிய நல் வாழ்த்து மூர்த்தி!

த.ஜார்ஜ்
13-07-2009, 02:08 PM
சிறு சிறு பிணக்குகளும், செல்ல கோபமும் ,பரிதவித்தலும் ஆழ்ந்த பெருமூச்சிற்கிடையே பச்சாதாபம் கொள்தலும், பிறகு எல்லாம் கலைந்து பாசத்தின் பெருக்கு அதிகரித்தலும்..... எல்லாம் வாழ்வை சுவாரசியப்படுத்துகிற புள்ளிகள்.

வார்த்தைகளால் ஆறுதலும் தர முடிகிறது. சில வேளைகளில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்திவிட முடிகிறது.

வார்த்தைகளின் வலி இருபக்கமுமே காயப்படுத்தி விடுகிறது.

அதுவும் பாசப்பிணப்புள்ளோரிடம் தவறான ஒரு வார்த்தையே போதும் தண்டித்துவிட...

நுட்பமாய் பதிவு செய்திருக்கிறாய் தோழா... பாராட்டுக்கள்.

மன்மதன்
13-07-2009, 02:25 PM
ஒரு எதார்த்தமான கருவில் கற்பனை கலந்து
அருமையாக கொடுத்துள்ளீர்கள்..

இது மாதிரியான கோபமான வார்த்தைகள் வந்து விழும்போது
அதை சொல்ல விருப்பம் இருக்காது..கோபத்தில் சொல்லாமலும்
இருக்க முடியாது.. கதையை ஒரே மூச்சில் படிக்கும்போது
அந்த வலி சத்யாவிற்கு இருப்பதை உணர்ந்தேன்.

கொஞ்சும் வார்த்தைகளை கையாண்டது போல கொஞ்சம் வார்த்தைகளையும்
நல்லவிதமாக கையாண்டிருக்கலாம்.. (உதா : அ.. செ.. நா......)

அலைபாயுதே போல அருமையான முடிவு...பாராட்டுகள் ..!!!

ரங்கராஜன்
13-07-2009, 02:48 PM
நன்றி பாரதி அண்ணா

இரவில் அரை தூக்கத்தில் எழுதியதால் எழுத்துபிழையுடன் பதித்து விட்டேன், மன்னிக்கவும். (எத்தனை முறை தான் மன்னிப்பது என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது). அப்புறம் காலையா இல்லை மாலையா என்ற குழப்பம் வரவேண்டிய அவசியமே இல்லையே, கதையின் முதல் வார்த்தையே மாலை என்று தானே ஆரம்பிக்கிறது. உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.

நன்றி ரமேஷ்

எந்த கதையாக இருந்தாலும் எப்பொழுதும் போல படித்துவிட்டு என்னை ஊக்கப்படுத்து உங்களுக்கு கோடான கோடி நன்றி

ரங்கராஜன்
13-07-2009, 02:55 PM
நன்றி லீலுமா

கதை உனக்கு பிடித்து இருந்ததா? சந்தோஷம். உனக்கு கண்டிப்பாக இந்த மாதிரி சண்டைகள் போட்டு பழக்கம் இருக்கும் என்று நம்புகிறேன். ஊடல்கள் இல்லாத கணவன் மனைவி வாழ்க்கை என்பது காது இல்லாதவன் இசையை ரசிப்பது போல இருக்கும். ஒவ்வொரு ஆரோக்கியமான ஊடலுக்கு பிறகும் தாங்கள் வைத்து இருக்கும் அன்பு அதிகமாகும் என்பது மனோதத்துவம்.

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் வரும் கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் பல பல புது புது விஷயங்களை கற்றுத்தரும், ஆனால் இருவரும் அதை கற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில் தான் அவை கற்றுத்தரும். காதுகளையும், மனதையும், ஈகோ என்னும் மூடியால் அடைத்துக் கொண்டு இருந்தால் கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

ஒவ்வொரு பிரிவும் தங்களுக்குள் உள்ள உண்மையான அன்பை உணர்த்தும் என்பது தான் கதையின் அடித்தளம். கணவன் தன் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறான், என்று மனைவிக்கும், மனைவி எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்று கணவனுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களின். அவை அன்பை அதிகப்படுத்தும்.

உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி பாசமலரே

ரங்கராஜன்
13-07-2009, 02:59 PM
நன்றி ஜார்ஜ்

கதையில் இருக்கும் ஆழமான விஷயங்களை, கதையின் ஆழத்திற்கே சென்று படித்து இருக்கிறாய் என்று என்னும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி

நன்றி மன்மதன்

சத்யாவின் கதாபாத்திரத்தில் தான் பலர் இருக்கிறார்கள் இந்த உலகில், அதுவும் புதுசாக கல்யாணம் ஆன பக்குவப்படாத ஆண்களின் பிரதிநிதியாக தான் சத்யா இருப்பதாக எனக்கு படுகிறது. குடும்பம் என்பது என்ன என்று தெரிவதற்கு முன்பே திருமணம் செய்துக் கொண்டு, எல்லாரையும் எல்லரும் வெறுக்கும் நிலைக்கு அவர்களாகவே தன்னை உட்படுத்திக் கொள்கிறார்கள் இந்த சத்யாகள். ஆணின் திருமண வயதை 21 ல் இருந்து 26 உயர்த்தலாமோ?

பாரதி
13-07-2009, 03:11 PM
அப்புறம் காலையா இல்லை மாலையா என்ற குழப்பம் வரவேண்டிய அவசியமே இல்லையே, கதையின் முதல் வார்த்தையே மாலை என்று தானே ஆரம்பிக்கிறது.


மாலை ஐந்து மணி இருக்கும், மோட்டர் பைக்கில் கட்டிக் கொண்டு ஒரு ஜோடி ஏர்காடு மலைப்பகுதியில் போய் கொண்டு இருந்தது. இது ஜூலை மாதம் என்பதால் குளிரும் இல்லை, வெளிச்சமும் இல்லை எப்பொழுதும் அதிகாலையில் இருக்கும் ஒரு மிதமான இருள் சூழ்ந்தே இருந்தது.

அதிகாலையிலும் இருள் இருக்கும், மாலையிலும் இருள் இருக்கும். மாலை இருளுக்கு அதிகாலை இருளை ஒப்பிடுகிறீர்களா..? அதில் வந்த சிறிய மயக்கம்தான். விளக்கத்திற்கு நன்றி மூர்த்தி.

ரங்கராஜன்
13-07-2009, 03:36 PM
அதிகாலையிலும் இருள் இருக்கும், மாலையிலும் இருள் இருக்கும். மாலை இருளுக்கு அதிகாலை இருளை ஒப்பிடுகிறீர்களா..? அதில் வந்த சிறிய மயக்கம்தான். விளக்கத்திற்கு நன்றி மூர்த்தி.

ஆமாம் அண்ணா, அப்படி ஒப்பிட்ட காரணம், அந்த மலைப்பகுதியில் நாள் முழுவதும் அதிகாலை பொழுதில் இருக்கும் மிதமான குளிரும், அழகான அமைதியான இருளும் இருக்கும் என்று கூறி இருந்தேன் அண்ணா. மாலை இருளில் இந்த விஷயங்கள் இருப்பது கொஞ்சம் கடினம் அண்ணா. காலை இருளில் இருக்கும் அந்த ஆன்மா மாலை இருளில் இருக்காது என்பது என்னுடைய திண்ணமான கருத்து.

நன்றி அண்ணா

MURALINITHISH
24-09-2009, 07:53 AM
உண்மைதான் வார்த்தைகள் பல நேரங்களில் மனதை வருத்துகிறது அதனால் வார்த்தையில் கவனம் தேவை இருந்தாலும் முடியவில்லையே

மஞ்சுபாஷிணி
24-09-2009, 08:32 AM
எத்தனை சத்தியாமான வார்த்தைகள் தக்ஸ்....

மனம் நோகச்செய்யும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டால் காலத்துக்கும் மறக்காமல் அந்த வலியை நாம் நினைத்து நினைத்து வேதனைப்படுவோம். திட்டும்போது கூட தித்திக்கும் சொற்களால் திட்டினால் கோபம் கூட செல்லக்கோபமாகிவிடும்...

முதிய தம்பதிகளின் சின்ன சின்ன கோபமும் கூட ரசிக்க வைத்தது. நன்றி தக்ஸ்....

ரங்கராஜன்
01-10-2012, 12:20 PM
இன்று திடீரென என் நண்பன் ஒருவன் எனக்கு போன் செய்தான்....

ஹலோ...

நான் பிரகாஷ் எப்படி இருக்க....

நல்லா இருக்கேன் டா, இது யாரு நம்பர்....

என்னுது தான்டா மச்சி, நீ இப்படியெல்லாம் எழுதுவியா டானு கேட்டான்....

"புரியல மச்சினு சொன்னேன்"

இல்லடா நல்லா எழுதி இருக்க.

தாங்கஸ் டா, எத்தன மணி நியூஸ்ஸ பாத்த, எந்த ஸ்டோரிய சொல்ற

நியூஸா, என்ன நியூஸு புரியலையே...

புரியலையா, அப்புறம் என் எழுத்து நல்லா இருக்குனு சொன்ன

ஆமா, கதையை படிச்சேன் சொன்னேன்....

கதையா, எந்த கத..

ஒரு வார்த்தை, சிறுகதை..

அந்த தலைப்புல நான் எழுதினதே இல்லையே...

டேய் நீ தான் எழுதி இருக்க, நான் படிச்சேனே....

தெரியல மச்சி, நீ நியூஸ்ல என்னுடைய ஸ்பெஷல் ஸ்டோரியை சொல்றனு நனைச்சேன்.

என்ன நியூஸ் டா....

நான் வேலை செய்ற இடம் டா....

ஆமா மச்சி நான் கேட்கவே மறந்துட்டேன், நீ எங்க வேலை செய்ற.....

டேய் சனியனே, உங்க சேனலை விட்டு வந்தா என்ன மறந்துடுவியா, பேர்வல் பார்ட்டியில சரக்கை டேஷ் செய்து சாப்டியே அப்போ நியாபகம் இல்லையா.... பரதேசி...

நான் எங்கடா வந்தேன் உன் பேர்வல் பார்ட்டிக்கு, சரி நீ எங்க வேலை செய்யுற சொல்லு....

நீங்க யாரு பேசறது...

பிரகாஷ்டா உன் கூட டென்த் படிச்சேனே.......

அடப்பாவி நீயாடா, சாரிடா இவ்வளவு நேரம் என் கோளீக் ஒருத்தர் பிரகாஷ்னு இருக்காரு அவருனு நினைச்சேன்.

மச்சி, நம்ம பிரண்டு ஒருத்தன் மூலியமா உன் ஒரு வார்த்தை கதைய படிச்சேன் எனக்கு பிரமிச்சு போச்சு டா....

ஏ மச்சி,....

இல்லடா மூணு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஹனிமூன் போகும் போது இப்படியே ஒரு சம்பவம் நடந்துச்சுடா, சும்மா படிக்கலாம்னு படிச்சேன், அதிர்ந்துட்டேன்...சரி யாராவது இந்த விஷயத்த உன் கிட்ட சொன்னாங்களா டா (ஹனிமூன் என்று சொன்னவுடன் அந்த கத நியாபகம் வந்துச்சு டா)

எந்த விஷயம் டா

எங்களுக்குள் நடந்த சண்டய....

நீ யாருக்காவது சொன்னியா டா

இல்ல...

உங்க வீட்ல யாருக்கிட்டவாவது சொல்லி இருப்பாங்களா டா

கண்டிப்பா இருக்காது டா..

அப்புறம் எப்படிடா எனக்கு தெரியும்.... சும்மா கற்பன மச்சி....

எனக்கு நம்பிக்க இல்ல.....

டேய் இது உனக்கு மட்டுமில்ல, பல தம்பதிகள் வாழ்க்கையில நடக்குறது தான் டா, ஊட்டிக்கு போகும் போது, பஸ்ல ஜன்னல் வழியா பாத்தேன் டா, ஒரு தம்பதி டூவீலர ஓரமா நிறுத்திட்டு சண்ட போட்டுட்டு இருந்தாங்க,.... சும்மா அத வச்சி எழுதுன கத மச்சி இது......

உனக்கு எப்படி டா தெரியும்... உனக்கு கல்யாணம் ஆச்சா....

சரி மச்சி நான் அப்புறம் பேசறேன், எனக்கு முக்கியமான ஒரு கால் வருது........பாய்.... அவசர அவசரமாக போனை வைத்தேன்....

சிவா.ஜி
01-10-2012, 12:28 PM
கதைக்கும் நிஜத்துக்கும் உள்ள நெருக்கம் பளிச்சுன்னு தெரியுது தக்ஸ். நீ சொல்ற மாதிரி...இந்த மாதிரி சம்பவம் எல்லா கல்யாணமானவங்களுக்கும் ஏற்படறதுதான். உன்னோட கதைகளோட சிறப்பே அது நிஜத்துக்கு ரொம்ப பக்கத்துல இருக்கறதுதான்.

அடிக்கடி எழுதுப்பா தம்பி.

ஆதவா
01-10-2012, 02:45 PM
படிச்சேன் மாப்பி..

”ஒரு வார்த்தை”யில சொல்லணுனா .,,,, மார்வலஸ்!!

ரொம்ப ஓவரா சொல்றேன்னு நினைக்காதே. உரையாடல்கள் தொய்வில்லாமல் அருமையா இருக்கு. இனிமையான முடிவு. அவ எங்க போயிருப்பா என்று நானும் பதட்டப்பட்டேன். ஒரு சுவாரஸ்யமான திடுக் இல்லாத டிவ்ஸ்ட். அருமை.

Keelai Naadaan
16-10-2012, 03:53 PM
யாகாவாராயினும் நா காக்க என்பதை மனதில் பதியும் விதமாய் சொல்லும் கதை.
பாராட்டுக்கள் ரங்கராஜன்.
முதியவர்களின் கதாபாத்திரங்கள் புதுப்புது அர்த்தங்கள் படத்தை நினைவு படுத்துகின்றன.

கீதம்
20-10-2012, 12:08 AM
இந்தக் கதையை இதுவரை பலமுறை படித்துவிட்டேன். ஏனோ தெரியவில்லை, பின்னூட்டமிட வார்த்தைகளே வரவில்லை.

வேண்டுமென்று செய்யாத எத்தனையோ செயல்கள், விபரீதத்தை உண்டுபண்ணியபின்புதான் அதன் பாதிப்பை நமக்கு உணர்த்துகின்றன. பாதிப்பை உணர்ந்தாலும் அதை சரிசெய்துவிட பல சமயங்களில் ஈகோ ஒத்துழைப்பதில்லை. வார்த்தை என்றில்லை, சின்னதொரு முகச்சுழிப்பே போதும், மனத்தில் தேவையற்ற எண்ணங்களை உருவாக்கி, கீழ்த்தரமான வார்த்தைகளை வெளிப்படுத்திவிட.

கதையின் கருவை மிகவும் அழகாய் விரித்து எழுத்தாக்கியமை அழகு. சண்டையோ, ஊடலோ வராத தம்பதிகள் இல்லை. ஆனால் அதன் பாதிப்பு அப்போதே மறந்துபோகக் கூடியதாய் இருக்கவேண்டும். பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டால் காலத்துக்கும் அதன் வடு நினைவிலிருந்து படுத்திக்கொண்டே இருக்கும்.

வாசிப்பவர்களை தனக்குள் நிறுத்தி சிந்திக்கவைத்த கதை. பாராட்டுகள் தக்ஸ்.

arun
26-10-2012, 09:36 PM
இதை விட அவனுக்கு பெரிய தண்டனை இல்லை !

ஒரு வார்த்தையாக இருந்தாலும் பார்த்து பேச வேண்டும் என்பதை உணர வைத்த கதை பாராட்டுக்கள்