PDA

View Full Version : விண்டோஸ் கைபேசிகளில் தமிழ்மன்றம்!



பாரதி
10-07-2009, 04:55 PM
அன்பு நண்பர்களே,

கைபேசியில் தமிழ் குறித்த பயனுள்ள பதிவுகள் மன்றத்தில் இருக்கின்றன. அங்குமிங்கும் இருக்கும் அவற்றை ஒருங்கிணைப்பதும், புதிய கைபேசி உலாவி ஒன்றினை தமிழ்மன்றத்திற்கு அறிமுகப்படுத்தவுமே இத்திரி.

சாதாரண கைபேசிகளில் தமிழ்தளங்களை வாசிக்க புதியவன் அவர்களின் திரியில் கூறப்பட்டிருந்த வழிமுறை :

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று "ஒபேரா மினி" உலாவியை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

--------------------------------------------------------------------------

ஆனால் இந்த வழிமுறை விண்டோஸில் இயங்கும் சில கைபேசிகளில் உதாரணமாக "ஐமேட்" போன்ற பாக்கெட்பிசி என அழைக்கப்படுபவற்றில் ஒத்துழைக்கவில்லை. பல முறை நிறுவி, முயன்றும் பலனில்லை.

இதைக்குறித்து மேலும் தேடும் போதுதான் ஸ்கைஃபயர் எனப்படும் உலாவியைக்குறித்து அறிய நேர்ந்தது. மேற்கூறிய வழிமுறையில் "ஓபரா உலாவி" மூலம் தமிழ்த்தளங்களை சரியாக காண முடியவில்லை என்றால் ஸ்கைஃபயர் உலாவியை பதிவிறக்கி, நிறுவிப்பாருங்கள்.

இன்று என் கைபேசியில் (ஐமேட் - அல்ட்டிமேட் 8150) நிறுவிப்பார்த்ததில் தமிழ்மொழி தெளிவாக, எந்தப்பிரச்சினையும் இன்றி தெரிந்தது. தமிழ்மன்றமும் மிக அழகாக காணப்பட்டது. எழுத்துக்கள் சற்று சிறியதாக காணப்பட்டன. சற்று பெரிதாக்கி வாசிப்பதற்கு தேவையான வசதிகள் இருப்பதால் நன்றாகவே இருக்கிறது.

வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். உங்கள் கைபேசி சேவைக் கட்டணத்தை கவனத்தில் கொண்டு, மன்றத்தில் உலாவுங்கள்.

ஸ்கைஃபயர் உலாவி ஒரு இலவச மென்பொருள்தான்! எனவே தேவையுள்ள அனைவரும் தாராளமாக பயன்படுத்தலாம்.

பதிவிறக்க சுட்டி:
http://get.skyfire.com/

=========================================================

மன்றத்தில் இருக்கும் இத்திரிக்கு தொடர்புடைய பிற திரிகள் உங்கள் பார்வைக்கு:

1. புதியவன் அவர்களின் - கைபேசியில் தமிழ்தளங்களை வாசிக்க.... http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20489

2. ஷீ -நிசி அவர்களின் - தமிழ்மன்றம் அழகாகத்தெரிகிறது தமிழில்.... http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20697

3. ஷீ -நிசி அவர்களின் - தமிழ் புத்தகங்கள் மொபைலில்! http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15119

4. ஸ்ரீதர் அவர்களின் - தமிழில் கைபேசிக்கான மின்புத்தகங்கள் செய்வதற்கான வழிமுறை http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19248

வேறு பயனுள்ள திரிகளை இத்துடன் இணைக்க விரும்பினால் குறிப்பிடுங்கள் நண்பர்களே. நன்றி.