PDA

View Full Version : திறமைகள்



ரங்கராஜன்
09-07-2009, 04:40 PM
திறமைகள்

இந்த திறமை என்கிற விஷயம் இருக்கிறதே, அது பல பல விந்தைகளை செய்து காட்டும், தெருவில் இருக்கும் மனிதனை உச்சாணிக் கொம்பில் உக்கார வைக்கும். இந்த திறமை என்பது எதில் இருக்கிறது ரத்தத்திலா?, ஞானத்திலா? அல்லது பெற்றோர்கள் பரிமாறிக் கொள்ளும் உயிர் அணுக்களிலா?? என்று தெரியவில்லை. அந்த காலத்தில் குலத்தொழில்களையும், திறமைகளையும் வைத்து ஜாதிகளை பிரித்தார்கள். இவன் மறவன், இவன் கொசவன், இவன் பிராமணன், இவன் சக்கிலி (செருப்பு தைப்பவன்), இவன் பொற்கொல்லன் என்று. ஆனால் காலம் மாற மாற மறவன் குலத்தில் கோழைகள் பிறந்தார்கள், கொசவன் குலத்து பிள்ளைகள் மருத்துவர்கள் ஆனார்கள், பிராமணன் குலத்தில் இருந்து பல மறவர்கள் பிறந்தார்கள், சக்கிலி குலத்தில் இருந்து பல குழந்தைகள் நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்றார்கள். அப்போ திறமை என்பது எங்கு இருந்து வருகிறது, எதில் இருந்து வருகிறது. நம்முடைய நிகழ்கால வாழ்க்கையிலே அதற்கு நிறைய எடுத்துக் காட்டுகள் இருக்கிறது. இளையராஜாவின் பிள்ளைகள் எல்லாம் இசைத்துறையில் இருக்கிறார்கள், ஆனால் எல்லா இசையமைப்பாளர்களின்
வாரிசுகள் எல்லாம் இசைத்துறையில் இருக்கிறார்களா??? என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வருகிறது. மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாக ஆவது பெற்றவர்களும் அதே துறையில்
இருக்கிறார்கள், அவர்கள் வழிநடத்துவார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்கள் எல்லாராலும் ஜொலிக்க முடியவில்லையே ஏன்????. அப்போ திறமை என்பது எங்கு இருக்கிறது, எதில் இருக்கிறது.
பீத்தோவன் தன்னுடைய கடைசிகாலத்தில் தன்னுடைய கேட்கும் திறனையும் இழந்துவிட்டு பல அருமையான சிம்போனிகளை அமைத்தாராம். அது எப்படி???? இசை என்பதற்கு முக்கியமானது காது, அது மட்டும் முக்கியம் என்று சொல்லவில்லை, ஆனால் அதுவும் முக்கியம். அப்படி இருக்க தான் என்ன இசையமைக்கிறேன் என்று தெரியாமல் அதை ஒரு அனுமானத்திலே எழுதி இசையமைத்து இன்று உலக புகழில் இருக்கிறார் அவர். அப்போ திறமை என்பது அறிவில் இருக்கிறதா??? மூளையில் இருக்கிறதா??? ஆம் என்பவர்கள் மேலும் இந்த கட்டுரையை படிக்கலாம். நானும் உங்கள் கட்சி தான் இத்தனை நாட்களாக ஆனால் இன்று மாலை நான் ஒரு நிகழ்வை பார்த்தேன், அது தான் இந்த கட்டுரையின் ஊந்துசக்தி.

இன்று மாலை நான் வேலையை முடித்துவிட்டு வந்துக் கொண்டு இருந்தேன், என்னுடைய வீடு ரயில் நிலையம் பக்கத்தில் இருப்பதால் அங்கு நிமிடத்திற்கு ஒரு ரயில் போய்க் கொண்டு இருக்கும், பயங்கர
சத்தத்துடன். நான் என்னுடைய வீட்டை நோக்கி நடக்கும் பொழுது, தூரத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. நான் அதை பார்த்துக் கொண்டே நடந்து வந்துக் கொண்டு இருந்தேன், என்னுடன் நடந்து வந்த
சக நடையாளர்களும் அதை பார்த்துக் கொண்டே வந்தனர். என் பின்னாடி இருந்த பள்ளி மாணவர்கள் சிலர் அவர்களுக்குள்

“டேய் மச்சீ எதோ ஆக்ஸிடேன் போல டா, சீக்கிரம் வா பார்ப்போம்” என்று முன்னாடி ஓடினார்கள். எனக்கும் ஓட வேண்டும் என்பது போல தான் இருந்தது, ஆனால் ஓடவில்லை. எருமைமாடு உடம்பை
வைத்துக் கொண்டு ஓடக்கூடாது என்பதால் தான், இருந்தாலும் சில நாட்களுக்கு முன் பஸ்ஸை பிடிக்க நான் ஓட, ரொம்ப நாட்கள் பிறகு ஓடுகிறேன். நான் ஓடி வரும் வேகத்தில் எனக்கு முன்னாடி பஸ்ஸை பிடிக்க ஓடியவர்கள் எல்லாம் என்னை பார்த்து பயந்து போய் ஒதுங்க, ஐஸ்வரியா ராய் திருப்பதி கோயிலுக்குள் கெடுபிடி இல்லாமல் நுழைவது போல நான் பஸ்ஸில் ஏறினேன். எனக்கே வெட்கமாகி விட்டது, இனி ஓடக்கூடாது உடம்பை குறைத்து விட்டு தான் ஓடவேண்டும், உடம்பை குறைக்க வேண்டுமா? வேண்டாம் வேண்டாம் யானை குண்டாக இருந்தால் தான் அழகு என்று நினைத்துக் கொண்டேன். அதனால் நான் அப்பொழுது ஓடவில்லை. ஆனால் எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருக்கும் அந்த ரயில் தண்டவாளத்தை பற்றி நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும், நான் சின்ன வயதில் இந்த வீட்டில் தான் இருந்தேன். அப்பொழுது எல்லாம் சரியாக ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் அந்த இடத்தில் ஒருவர் ரயில் இடித்து இறந்து போவார். இது பொய் இல்லை உண்மை தான், சரியாக ஒவ்வொரு வெள்ளிகிழமை மாலையில் ஒருவர் இறந்து போவார். நீங்க நம்ப மாட்டீர்கள், நாங்கள் இதற்காவே (1992 ஆம் ஆண்டு நாங்கள் சிறுவர்கள்) எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் போய் பார்த்துக் கொண்டு இருப்போம். அப்படி நிறைய விபத்துக்களை கண் எதிரிலே பார்த்து இருக்கிறேன், இப்பொழுது நினைத்தால் கஷ்டமாக தான் இருக்கிறது, எப்படி டிவியில் தோனி சிக்ஸ் அடிப்பானா? என்று ஆவலுடன் பார்ப்போமோ? அப்படி விபத்து நடக்கும் ஒவ்வொரு நொடியும் நகத்தை கடித்துக் கொண்டு பார்ப்போம்.
பெண்கள், குழந்தைகள், குடிகாரர்கள், விபச்சாரிகள், குப்பத்து மக்கள், அவசரத்திற்கு ஒதுக்குபவர்கள் என்று பல மக்கள் வாரம் வாரம் அந்த இடத்தில் பலி ஆகினார்கள். பின்பு விஷயம் அறிந்த ரயில்வே துறையினர் அங்கு வந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பூஜை செய்து, எதோ ஒரு கல்லை நட்டு வைத்து சென்றனர். அதன் பின் விபத்துகள் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் நடக்கவில்லை.

என்னுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் என்னுடைய கண்முன்னே நிழலாடியது, இத்தனை நாள் வரை விபத்து இல்லை, ஆனால் இன்று அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சஸ்பன்ஸ் தாங்காமல் அந்த இடத்திற்கு சென்றேன். அங்கு சென்ற எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. நான் என்னுடைய 12 ஆம் வகுப்பை பண்ருட்டியில் படித்தேன், அப்பொழுது ஒரு நாள் டியூஷனுக்கு போய் விட்டு வீடு திரும்பும் பொழுது இதே போல அங்கு ஒரு கூட்டம், எனக்கு இந்த கூட்டம் என்றால் ரொம்ப பிடிக்கும், அதை விட வேடிக்கை பார்ப்பது ரொம்ப பிடிக்கும். எங்கு கூட்டமாக இருந்தாலும் நின்று வேடிக்கை பார்த்துவிடுவேன். கீறிக்கும் பாம்புக்கும் சண்டையா அங்கு கூட்டத்தில் மோடி மஸ்தான் சொல்வது போல கையை நீட்டிக் கொண்டு நிற்பேன், ஆக்ஸிடேண்டா பாடியை தூக்கிக் கொண்டு போகும் வரை நிற்பேன், நடுரோட்டில் புருஷன் பொண்டாட்டியை போட்டு அடிக்கிறானா,
அந்த பொண்டாட்டின் திரும்பி புருஷனை அடிக்கும் வரை நின்று பார்ப்பேன், பஸ்ஸில் போய்க் கொண்டு இருக்கும் பொழுது வெளியே எதாவது சண்டையை பார்த்தால் இறங்கி அதை பார்த்துவிட்டு தான் அடுத்த பஸ்ஸை பிடித்து போவேன். அடுத்தவர்கள் விஷயங்கள் என்றால் ஏண்டா இப்படி நாக்கை தொங்கப்போட்டுனு அலையுற நாயே என்று நான் ரோட்டில் நிற்பதை பார்த்து என்னுடைய நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் இதில் இருக்கும் அந்த திரில்லை பற்றி. அப்படி பண்ருட்டியில் நடந்த அந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு போய் பார்த்தேன், ஒருத்தன் பழுப்பு நிற உடையில் வேஷ்டி அதே கலரில் சட்டை போட்டு கொண்டு தன்னுடைய கையில் இருக்கும் சில இலைகளையும், கரி துண்டுகளையும், தயார் செய்துக் கொண்டு இருந்தான். முகத்தை பார்த்தேன், ஒரே அழுக்கு பல நாட்கள் ஆகி இருக்கும் போல அவன் குளித்து, எழுந்து நின்றான் அழுக்கான ஒரு சுவரில் தன்னுடைய கையை வைத்து தேய்க்க ஆரம்பித்தான், அந்த சுவரில் இருக்கும் சுண்ணாம்பு மறைந்தது, இவன் அந்த இலையை கசக்கி அந்த சாறை பிழிந்து சுவரில் தேய்த்தான். எனக்கு கடுப்பாகி விட்டது. இது எதோ பைத்தியக்காரன், அவனை சுற்றி இவ்வளவு பைத்தியக்கார்கள் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பி விட்டேன். அடுத்த நாள் காலை அந்த வழியாக செல்லும் பொழுது அந்த இடத்தை பார்த்தேன் ஒரு நிமிடம் என்னுடைய கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை, மிக மிக அழகான ஒரு ஓவியன், இயற்கையை பறை சாற்றும் விதமான ஒரு ஓவியம். இது சாதாரண ஓவியங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது, அதில் இருக்கும் படங்கள் எல்லாம் பன்முக வடிவங்களை கொண்டதாக இருந்தது. அவ்வளவு தத்ரூபமாக இதுவரை நான் ஒரு ஓவியத்தையும் பார்த்தது இல்லை, இதில் என்ன விஷேசம் என்றால், அந்த பைத்தியக்கார ஓவியன் உபயோகித்தது, வேறும் பச்சை இலைகள், சில கறிதுண்டுகள், கொஞ்சம் சிகப்பு கலர் செங்கல் தூள் தான். அன்று பல டிவியில் இருந்து வந்து அந்த ஓவியத்தை படம் பிடித்துக் கொண்டு போனார்கள். அடுத்த நாள் டிவி பேப்பர் எல்லாவற்றிலும் இந்த ஓவியம் வந்தது.

என் மனதிற்குள் ச்ச் எப்படி பட்ட ஒரு கலைஞனை மதிக்காமல் சென்று விட்டோமே என்று நினைத்துக் கொண்டு பல நாட்களாக இருந்தேன். ஆனால் இப்பொழுது என்னுடைய வீட்டு பக்கத்தில் அதே பைத்தியக்காரன் சாரி சாரி அந்த ஞான ஓவியன் நின்றுக் கொண்டு இருந்தான், அதே பழுப்பு நிற வேஷ்டி சட்டை தான், கொஞ்சம் அவனின் உடையை பார்த்தால் பைத்தியக்காரன் மாதிரி தெரியாது, ஆனால் முகத்தை பார்த்தால் தெரியும், தனக்குள் எதோ ஒன்றை சொல்லிக் கொண்டே அவன் அந்த சுவரை தயார் படுத்தினான். இப்பொழுது வெளிச்சத்தில் கிட்டே சென்று பார்த்தேன், அதே இலை, என்ன இலை என்று பார்த்தேன் விளக்குக்கு ஊற்று எண்ணை எடுப்போமே, ஒரு கொட்டையில் இருந்து ஆமனக்கு செடி என்று சொல்வோம். அந்த இலை நிறைய இருந்தது, கொஞ்சம் கரிகள், கொஞ்சம் செங்கல் பொடி, அதையெல்லாம் வைத்துக் கொள்ள ஒரு கறுப்பு பை. எனக்கு ஒரே ஆச்சர்யமாக போனது, ஆஹா இந்த முறை இந்த ஞானஓவியனிடம் பேசியே ஆகவேண்டும் என்று அருகில் சென்று

http://img151.imageshack.us/img151/411/43636689.gif

“தலைவா சூப்பரு தலைவா உன்னுடைய ஓவியங்கள்” என்றேன். அவன் சட்டென்று திரும்பி பார்த்தான், ஒரு நிமிடம் எனக்கு பயமாகிவிட்டது, முறைத்தான். அதன் பின் தான் ஞாபகம் வந்தது அவன் இன்னும் இங்கு படமே வரைய ஆரம்பிக்கவில்லை என்று. ஆனால் நான் அவனுடைய ஓவியத்தை 8 வருஷங்களுக்கு முன் பண்ருட்டியில் பார்த்து இருக்கேனே அதை வைத்து சொன்னேன். அதை போய் எப்படி இவனுக்கு புரியவைப்பது. அவன் கோபத்தில் எகிறி வந்து என் தொண்டையை கடித்து கிடித்து விட்டால் என்ன செய்வது என்று பயம் வேறு, பல்லு வேற விளக்கி இருக்கமாட்டான். விளக்கி இருந்தாலாவது கடிக்க விடலாம். கொஞ்சம் பாதுகாப்பாக தூரமாக நின்று பார்த்தேன், சுவரை சுத்தபடுத்துவதிலே அவன் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டான். கூட்டம் சேர ஆரம்பித்தது, எல்லாம் எனக்கு தெரிந்து முகங்கள், நிற்பதற்கு வெட்கமாக இருந்தது. போவதற்கும் மனம் இல்லை. என்ன செய்வது என்று கொஞ்சம் யோசித்து போய் எதிர் கடையில் டி குடித்து விட்டு வந்து விடலாம் என்று போனேன். கடையில் பால் இல்லையாம், சரி என்று பக்கத்து தெருவில் இருக்கும்
கடையில் டி குடித்துவிட்டு வந்து பார்த்தேன். நான் சரியாக ஐந்து நிமிடம் தான் எடுத்து கொண்டேன் போய் வர, வந்து பார்த்தால் மிக மிக அழகான ஒரு ஓவியத்தை வரைந்துக் கொண்டு இருந்தான், ரொம்ப அழகாக இருந்தது.

http://img151.imageshack.us/img151/2910/85836991.gif

எல்லாரும் வாயை பிளந்துக் கொண்டு பார்த்தார்கள், நானும் தான். சிலர் கையை தட்டினார்கள், ஆனால் அந்த ஞான ஓவியன் எதையும் கண்டுக்கொள்ளவில்லை, யாரிடமும் பேசவும் இல்லை. கொஞ்ச நேரத்தில் தூரல் போட ஆரம்பித்து. எல்லாரும் நகர ஆரம்பித்தார்கள், ஆனால் மும்முரமாக வரைந்து கொண்டு இருந்த அந்த ஞான ஓவியன் ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, வானத்தை அன்னார்ந்து பார்த்தான். நானும் மழையின் தீவிரத்தால் வீட்டுக்கு போக முடிவு செய்தேன், பெரிய பெரிய மழைத்துளிகளாக விழத்துவங்கியது. என்னுடைய வீட்டு பத்து அடிதூரம் தான் இருந்தது, மனமே இல்லாமல் வீட்டை நோக்கி சென்றேன். மேகம் கறுப்பாக மாறி மழை கொட்டும் போல இருந்தது.
நான் வீட்டுக்குள் நுழைந்து உடைகளை கலைந்து ஜன்னலை திறந்தேன், மறுபடியும் வெயில் அடிக்க ஆரம்பித்தது. அந்த ஞான ஓவியன் அன்னார்ந்து பார்த்ததின் அர்த்தம் இதுவாக தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன். காபி குடித்து விட்டு போய் அந்த இடத்தை பார்த்தால் அந்த ஞான ஓவியனை காணவில்லை. அந்த சுவற்றை பார்த்தேன் இன்னொறு ஆச்சரியம் காத்துக் கொண்டு இருந்தது, அதே போல இன்னொரு படத்தையும் அவன் வரைந்து விட்டு
போய் இருந்தான். அவ்வளவு சீக்கிரமாக் யாரும் அவ்வளவு அழகாக வரைய முடியாது. நான் அனிமேட்டர் தொழிலில் இருப்பதால் எனக்கு அந்த வரைகலையை பற்றி ஒரு அளவு தெரியும். நாங்களே ஒரு பாலத்தையோ, அல்லது கட்டிடத்தையோ உருவாக்கும் பொழுது பல அளவுகளை வைத்து தான் வரைவோம். அதுவும் முப்பரிமாண ஓவியம் என்றால் கொஞ்ச நாட்கள் எடுக்கும் எங்களுக்கு. ஆனால் இந்த ஆளு எப்படி சில நிமிடங்களில் இந்த மாதிரி ஒரு ஓவியங்களை வரைந்தான் என்று. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அவனை தேடினேன், இந்த முறையும் அவனை கோட்டை விட்டு விட்டேன். அந்த ஓவியங்களின் புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் போய் பாருங்கள்.

http://img196.imageshack.us/img196/245/both.gif

http://img34.imageshack.us/img34/4500/1close.gif

http://img200.imageshack.us/img200/5449/c22o.gif

உண்மையிலே இவன் ஞான ஓவியன் தான். நான் மேலே சொன்ன திறமை இவனுக்கு எப்படி வந்து இருக்கும்??????? திறமைகள் ஒருவனை தெருவில் இருந்து உச்சாணிக் கொம்பி உக்கார வைக்கும் பொழுது இவன் மட்டும் இன்னும் தெருவிலே இருக்கிறானே
ஏன்????????????

பாரதி
09-07-2009, 05:07 PM
அன்பு மூர்த்தி,

இதே போன்ற ஒரு கலைஞரை குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் மாவட்டத்து செய்தித்தாள்களில் பரபரப்பாக செய்தி வந்தது. அந்தக்கலைஞரும் யாருடனும் எதுவும் பேசுவதில்லை என்றும், படத்தை வரைந்ததும் அந்த ஊரை விட்டு சென்று விடுவதாகவும் செய்தியில் கூறி இருந்தது.

ஓவியத்தில் நடந்து செல்பவர்களின் நிழல் கூட தத்ரூபமாக வரையப்பட்டிருப்பது அவருடைய கணிக்கவியலா திறமைக்கு எடுத்துக்காட்டு!
ஓவியம் மிக மிக அழகு...! இன்னும் தெளிவாக நீங்கள் படத்தை தந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

திறமைசாலிகளை அவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே இனங்கண்டு, வாழ்க்கையில் உயர்த்துவது சற்று அரிதான காரியமோ..? ஓவியம் என்றால் இரவிவர்மா..வையும், பிற நாட்டு கலைஞர்களையுமே நாம் பொதுவாக நினைவில் கொள்ளுவோம். இக்கலைஞரும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை.

இங்கு செய்தி அளித்த மூர்த்திக்கு நன்றி.

நேசம்
09-07-2009, 05:26 PM
சத்தியமாக நம்பமுடியவில்லை.இவ்வளவு திறமை இருந்தும் என் இவரது மனநிலையை இப்படி இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட துறையில் திறமை என்பது பிறவியிலே இருக்குமா என்ற வினாக்கள் எழும்புகின்றன. பகிர்தலுக்கு ரொம்ப நன்றி தக் அவர்களே

ரங்கராஜன்
10-07-2009, 04:16 AM
அன்பு மூர்த்தி,

இதே போன்ற ஒரு கலைஞரை குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் மாவட்டத்து செய்தித்தாள்களில் பரபரப்பாக செய்தி வந்தது. அந்தக்கலைஞரும் யாருடனும் எதுவும் பேசுவதில்லை என்றும், படத்தை வரைந்ததும் அந்த ஊரை விட்டு சென்று விடுவதாகவும் செய்தியில் கூறி இருந்தது.

ஓவியத்தில் நடந்து செல்பவர்களின் நிழல் கூட தத்ரூபமாக வரையப்பட்டிருப்பது அவருடைய கணிக்கவியலா திறமைக்கு எடுத்துக்காட்டு!
ஓவியம் மிக மிக அழகு...! இன்னும் தெளிவாக நீங்கள் படத்தை தந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

திறமைசாலிகளை அவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே இனங்கண்டு, வாழ்க்கையில் உயர்த்துவது சற்று அரிதான காரியமோ..? ஓவியம் என்றால் இரவிவர்மா..வையும், பிற நாட்டு கலைஞர்களையுமே நாம் பொதுவாக நினைவில் கொள்ளுவோம். இக்கலைஞரும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை.

இங்கு செய்தி அளித்த மூர்த்திக்கு நன்றி.

நன்றி பாரதி அண்ணா

உண்மையில் இந்த ஆள் ஊர் ஊராக சென்று, அந்த ஊர்களில் படங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்துபவர் என்று நினைக்கிறேன், உண்மையில் இது ஒரு அசாத்திய திறமை தான், அவர் உபயோகித்த இலை தழைகளை வைத்து இப்படி ஒரு அருமையான ஓவியம் வருகிறது என்றால், மற்ற ஓவியர்கள் பயன்படுத்தும் பெயிண்ட்களை உபயோகப்படுத்தினால் எப்படி இருக்கும்.

உண்மையில் இந்த போட்டோக்கள் எல்லாம் சரியாக எடுக்கவில்லை தான். காரணம் இவை அனைத்தையும் நான் என்னுடைய மொபைல் கேமிராவில் எடுத்தேன், என்னிடம் காமிரா இல்லாததால் என்னால் இந்த படங்களை ஒழுங்கா எடுக்க முடியவில்லை.......... சாரி

ரங்கராஜன்
10-07-2009, 04:20 AM
சத்தியமாக நம்பமுடியவில்லை.இவ்வளவு திறமை இருந்தும் என் இவரது மனநிலையை இப்படி இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட துறையில் திறமை என்பது பிறவியிலே இருக்குமா என்ற வினாக்கள் எழும்புகின்றன. பகிர்தலுக்கு ரொம்ப நன்றி தக் அவர்களே

நன்றி நேசம்

உண்மையில் எனக்கும் அதே சந்தேகம் தான், பிறவியிலே ஒருவனின் தலைவிதி எழுதப்படுவது உண்மை தான் போல. ஒரே குழப்பமா இருக்கு?????????

இளசு
11-07-2009, 07:20 AM
நேர்த்தியான பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் தக்ஸ்..

முதலில் பதிவில் ஊடாடும் நேர்மையான சுயக்கிண்டல் கலந்த நகைச்சுவை + பார்வைத் தெளிவு + சமூக அக்கறைக்கு - பெரிய சபாஷ்!

பின்னர் பதிவு நாயகன் + மையக்கேள்வி ..

எந்த இனம், வர்ணம் - பிறப்பாய் இருப்பினும்
0.000001 சத ஜீன்கள் கலந்து மாறி, மறைந்து, விழித்தெழுந்து
என அளவிலா விளையாட்டு செய்வதால்.....

கடைநிலைத் தொழில் புரிவோரிலிருந்து, கவிஞர் வரை
அவரவர் வாரிசுகள் பலவேறு சாத்தியங்களுடன் பிறக்கிறார்கள்...

உயிர்களின் உச்சக்கட்ட பரிமளிப்பான இவ்வகை அநாசயத் திறமைகள்
எவரிலும் எங்கும் இயற்கையால் எதேச்சையாய் தூவப்படும்.

Random probability - எனலாம்.

இந்த இனம், இந்த நிறம், இந்த தேசம் என்றில்லை - எங்கும் இது நிகழலாம்.



இப்படி அசாத்திய திறன் வாய்த்தவர்கள்
அந்த அசாத்திய திறனே ஒரு liability -ஆக மாறி அவர்களை
உலகப்பந்தயத்தில் தோற்கவும் வைக்குமா?


உச்சக்கட்ட பரிமளிப்புக்குமுன் உயிர்கள் சாதா தளத்தில் தரித்திருக்க வேண்டிய
அவசியமும் இயற்கை விதித்த கட்டளையே!

பிறழா மனநிலை, சமூகப் பிணைப்பு, பிற உயிர்களின் கூட்டு ஆதரவு -
அசாத்திய திறனாளர்களைப் பாதுகாத்து, அத்திறன் சொலிக்க உதவினால் மட்டுமே
மேதைகள் ஆகிறார்கள்..

இல்லையெனில் ?


பாரதியார் ஏன் பலநாள் பசியில்?
பாஸ்கர் இல்லையெனின் டேவிட்ராஜா இன்று இளையராஜா?

ராமானுஜம் ஏன் அகால மரணம்?
டயானா ராஸ் இல்லையெனில் மைக்கேல் ஜாக்ஸன்?



கொஞ்சம் அடிப்படை தரித்திருத்தலை சுயமாகவோ, சார்பாகவோ வேரிட்டுக்கொண்டால் மட்டுமே,
அசாத்திய உச்சாணிக்கொம்பு தழைக்கும்...

வேரில்லா, வேரரிக்கப்பட்டவை?



-----------------------------------------------

ரங்கராஜன்
11-07-2009, 07:26 AM
இளசு அண்ணா

மிக மிக அருமையான விளக்கும் அண்ணா, ஒரு தெளிவு பிறந்தது