PDA

View Full Version : தாயே, நினைத்துப் பார்க்கிறேன்



ambulimama
09-07-2009, 02:18 PM
என்னுள் இந்த கவிதை தோன்ற காரணமாக இருந்த என் தாய்க்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

(அன்று)

உன்னுடன் கைக்கோர்த்து நடந்த நாட்கள்,
என் பின்னால் நீ ஓடித்திரிந்த பொழுதுகள்,
நான் உறங்குவதற்காக நீ விழித்த இரவுகள்,
எனக்கு முன் கண் விழித்த பகல்கள்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
கண்கள் வியர்க்கிறேன் !

விழுப்புண் வலி நான் அறிவதற்குள்
உனது கைகள் என்னை அணைக்கும்,
உனது முந்தானை என் கண்ணை துடைக்கும்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
வியப்பில் மூழ்கிறேன் !


(இன்று)

அலுப்பின்றி நீ சமைத்த உணவை
குற்றம் சொல்லி அலுத்தது ஒரு காலம்,
அலுப்போடு நான் சமைக்கும் உணவை
அலுப்பின்றி உண்ண வேண்டிய கட்டாயம்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
யாரும் பார்த்துவிடாது
எனக்குள் சிரிக்கிறேன் !


(என்றும்)

இறந்த பின் மண்ணில்
போவது சுகமில்லை,
இருக்கும் பொழுது
உன் மடியில் கிடப்பதே
பெறும் சுகம்
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
இறைவனிடம் வேண்டி நிற்கிறேன் !

அமரன்
26-07-2009, 07:25 PM
அம்மா..
பஞ்சுப் பொதி போல் உறுதியான மெல்லின ஆன்மா.

அம்மாவின் பக்குவத்தை அலுக்காத நாட்களில்லை அன்று..
அம்மாவின் பக்குவத்தால் அலுக்காத நாட்களில்லை இன்று..

என்னையே நான் கண்டேன்..

விதிவசத்தால் சொந்தங்களை விட்டு வந்து வாடும் நிலவோ தாங்கள்.

கண்கள் வியர்க்கிறேனால் நான் வியக்கிறேன்..

சிவா.ஜி
27-07-2009, 06:24 AM
தாயெனும் தேவதை, நிஜத்திலும், நினைவிலும் சுமை சுமந்து, பிள்ளைகளின் நலம் விரும்புவாள்.

தாய்க்கென்று எத்தனை ஆயிரம் கவிதைகள் வந்தாலும், ‘தாய்' என்ற ஈரெழுத்துக்கவிதைக்கு அவையெல்லாம் சமர்ப்பணம்.

வாழ்த்துகள் அம்புலிமாமா.

கா.ரமேஷ்
27-07-2009, 08:31 AM
வலிகள் பெற்றாலும் * நம்மை
வலிமையுற செய்தவர் தாய்...
அவருக்கு சமர்பித்த கவிதைக்கு பாராட்டுக்கள்..
அருமையான வரிகளுக்கு வாழ்த்துக்கள் தோழரே...

அருள்
27-07-2009, 02:08 PM
அருமை.....
தாய் தந்தையை அரவணைப்போம்.... முதியோர் காப்பகம் இல்லாமல் செய்வோம்

இளசு
27-07-2009, 11:02 PM
கண்களின் வியர்வை -
அமரனைப் போலவே என்னையும் வியக்கவைத்த சொல்லாடல்..


அம்மா..
எத்தனை எழுதினாலும் தகும் -
அந்த வாழும் தெய்வத்துக்கு!

வாழ்த்துகள் அம்புலியாரே!