PDA

View Full Version : இதயத்துடிப்பு



ambulimama
08-07-2009, 12:23 PM
முன்பெல்லாம் என் இதயம்
உன்னை நினைத்து
துடித்துக்கொண்டிருந்தது;
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கிறது
உன்னை நினைத்து விடுமோ என்று!

அன்புடன்,
அம்புலிமாமா

ஆதி
08-07-2009, 12:57 PM
வாழ்த்துக்கள் அம்புலிமாமா அவர்களே..

கவிதை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமோ ?

முன்பெல்லாம் என் இதயம்
துடித்துக் கொண்டிருந்தது
உன்னை நினைத்து
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கிறது
உன்னை இழந்துவிடுமோ என்று..

தொடர்ந்து எழுதுங்கள்..

ambulimama
08-07-2009, 01:05 PM
நன்றி ஆதி அவர்களே. நீங்கள் முன் வைத்த கவிதையும் நன்றாக உள்ளது. பொருள் மற்றும் வேறு.

சிவா.ஜி
08-07-2009, 01:25 PM
காதலியை நினைத்து துடித்த இதயம்...இன்று, நினைத்துவிடுவோமோ என துடிக்கிறது. நினைத்தால் வலிக்கும் என்றா இல்லை நினைத்தால் தவறு என்றா?

நிரந்தரமாய் பிரிந்த காதலியா அல்லது தற்காலிக இடமாற்றப் பிரிவா என கேட்கத் தோன்றுகிறது.

எப்படியோ யோசிக்க வைத்த கவிதை. வாழ்த்துகள் அம்புலிமாமா.

ambulimama
08-07-2009, 02:54 PM
நன்றி சிவா அவர்களே.

அமரன்
09-07-2009, 09:57 AM
உன்னாலே உயிர்வாழ்கிறேன்
என்ற
பாக்கிய வாக்கியத்துக்குத்தான்
எத்தனை நிறப்பிரிகை
இந்தக் கவிதை மாதிரி..

பிறன்மனை நினைதலே பாவமெ*னும் கவிதையின் நிறம் மிகவும் பிடித்தது.

பாராட்டுகள் அம்புலிமாமா.

ambulimama
09-07-2009, 02:11 PM
நன்றிகள் பல அமரன் அவர்களே.