PDA

View Full Version : வீர்சிங் பெட்டிக்கடை!!poo
28-09-2003, 11:25 AM
வீர்சிங் ஒரு சின்ன பெட்டிக்கடை வச்சிருந்தார். பல்லி மிட்டாய் பாட்டில் மேல்தட்டில் இருந்துச்சு. கடைக்கு வந்த சிறுவன் ஒருத்தன் "நாலணாவிற்கு பல்லிமிட்டாய் வேணும்"னான். வீர்சிங் ஏணியபோட்டு ஏறி பத்திரமா பாட்டிலை கீழ கொண்டுவந்து அவனுக்கு மிட்டாய் கொடுத்துட்டு மறுபடியும் ஏறி மேல வைச்சிட்டாரு.

கொஞ்ச நேரத்துல இன்னொரு பையன் வந்தான். "நாலணாவுக்கு பல்லி மிட்டாய் வேணும்"-னான் மறுபடியும் ஏணியில ஏறி இறக்கி தந்துட்டு மறுபடியும் ஏறி மேல வைச்சிட்டாரு.

இன்னும் கொஞ்ச நேரம் போச்சு.. இன்னொரு பையன் வந்தான்.. நாலணாவுக்கு பல்லி மிட்டாய்- ன்னு கேட்டான். வீர்சிங் கோபத்தோட மேல ஏறி பாட்டிலை கொண்டுவந்து அவன்கிட்ட நாலணாவுக்கு பல்லி மிட்டாய் கொடுத்துட்டு கீழயே வைச்சிட்டாரு பாட்டிலை..

இன்னொரு பையன் வந்தான்.
"உனக்கும் நாலணாவுக்கு பல்லி மிட்டாயா" ன்னு கேட்டார்.
அவன் "இல்லை"ன்னு சொன்னான். உடனே ஏணியை போட்டு மேல ஏறி பாட்டிலை வைச்சுட்டு கீழ இறங்கிவந்து..

" இப்போ சொல்லு உனக்கு என்ன வேணும்"னு கேட்டார். அதுக்கு அவன் " எனக்கு பத்து பைசாவுக்கு பல்லி மிட்டாய் வேணும்-ன்னு சொன்னான்.. !!..

mania
29-09-2003, 05:18 AM
நல்ல வேளை மளிகை கடை என்று போட்டு என்னை வம்புக்கு இழுக்கவில்லை!! ஏன் பூ அது அணாக்களும் நயா பைசாக்களும் சேர்ந்து இருந்த காலமோ ?!! சிறு வயதில் இது மாதிரி ஒரு செட்டியார் கடையில் வம்புக்கு இழுத்தது நினைவுக்கு வந்தது. பல்லி மிட்டாயை கீழே தான் வைத்திருந்தார் . அபோது ஒரு மூன்று பசங்க அவரிடம் பேச்சு கொடுத்து திசை திருப்ப ஒரு பையன் பல்லி மிட்டாய் ஒரு கை நிறைய அள்ளிக்கொண்டு பிறகு பங்கு போட்டுக்கொள்வோம் !!!அன்று முதல் தான் பல்லி மிட்டய் எங்களுக்கு எட்டாத உயரத்துக்கு போனது !!!
நன்றி பூ (மலரும் நினைவுகளுக்கு !!!)
அன்புடன்
மணீயா

அறிஞர்
29-09-2003, 05:29 AM
மளிகை கடை மணியாவின்.. நல்ல மலரும் நினைவுகள்..

வாழ்த்துக்கள்..... பூ

சேரன்கயல்
29-09-2003, 05:51 PM
பல்லிமிட்டாயில் எனக்கும் மலர்ந்தன நினைவுகள்...
பூ சொன்ன நகைச்சுவையைப்போல் நான் இப்போதும் கிண்டலாக வீட்டில் செய்வதுண்டு...அம்மாவிடமும், மனைவியிடமும்...
சாப்பிடும்போது அதிக நேரம் எடுத்துக்கொண்டு...எல்லாம் எடுத்துபோய் வைக்கவா என்று கேட்டு அவர்கள் ஏறக்கட்டியபின்னர் வேண்டுமென்றே...கொஞ்சம் ஊறுகாய் தயிர் ரசம் என்று எதையாவது கேட்டு முனுமுனுக்க வைத்துவிடுவேன்...
(இப்போ இங்கே ஒண்டிக்கட்டையாக இருக்கிறேன்...ஹ்ம்ம்ம்...)

Nanban
30-09-2003, 05:14 PM
பல்லி மிட்டாயை படித்ததும், நான் முன்னர் வேலை பார்த்த இடத்தில் - சென்னையின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் (பெயர் வேண்டாம்...) - நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது.....

House Keeping Departmentல் ஒரு இளம்பெண் மேற்பார்வையாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆங்கிலத்தில் புலமை என்பது தான் தகுதி. தமிழும் பேசக் கூடியவர் தான். வேலையோ, அறையை மேற்பார்வையிட்டு, அடுத்த நபருக்கு வழங்குவதற்கு தகுதியானதாக்கி, Front Officeல் ஒப்படைக்க வேண்டும். மேற்பார்வையிட்டவர், சுவற்றில் தொங்கிய ஓவியம் சற்று சரிந்திருப்பதாக எண்ணி, அதை சரி செய்ய முயற்சித்தார். பின்னால் மறைந்து கொண்டிருந்த பல்லி ஒன்று விருட்டென்று, வெளிக் கிளம்பி ஓட, பல்லியுடன் அத்தனை பழக்கமில்லாத அந்த இளம்பெண் அலறிக் கொண்டே படுக்கையின் மீது விழுந்து விட்டார். பெண்களின் அலறல் சத்தம் கேட்டால், உடனே ஓடிச் சென்று உதவ வேண்டும் என்பது நட்சத்திர ஹோட்டல்களின் எழுதப்படாத விதி - தவறு நடப்பதற்கு அதிகபட்ச சாத்தியக் கூறுகள் உள்ள இடமாயிற்றே!

பக்கத்து அறையின் Air conditionerஐச் சரி செய்து கொண்டிருந்த நானும் எனது நண்பர்களும் ஓடிச் சென்று அவரிடம் என்ன, என்ன? என்று கேட்டோம். பயத்தில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணோ எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். நாங்கள் மேலும் கவலையோடு, 'தயங்காமல் சொல்லுங்கள். சொன்னால் தானே புரியும்' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். பல்லி என்ற வார்த்தையை அறியாத அந்தப் பெண், அதற்குச் சரியான ஆங்கில வார்த்தையும் பிடிபடாமல், கடைசியாகச் சொன்னாரே பார்க்கலாம் - 'Look over there - CROCODILE'

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 06:38 PM
அட கொய்யால.. அதுக்கு அப்புறமும் அந்த பாட்டில் மேலதான் இருந்துச்சா..

aren
28-01-2009, 06:53 AM
வீர்சிங் பாவம். மறுபடியும் மேலே ஏறினாரா?

நல்ல நகைச்சுவை.

loshan
28-01-2009, 06:27 PM
நாங்களும் முன்பு இப்படியான ஒரு கடையில் இருந்தவரை மேலே ஏற்றி ஏற்றி அவர் பார்க்காத நேரம் சில மிட்டைகளை லவட்டி விடுவது உண்டு..

அது சரி வீர்சிங்கிடம் தமிழ் மொழியில் கேட்டது தான் தப்பாப் போச்சோ?

poornima
29-01-2009, 08:01 AM
ஹா ஹா நல்ல நகைச்சுவை.. வீர்சிங் ரகளை சள்ளைப்பா...

நண்பன் சொன்ன சம்பவமும் அருமை.. சில நேரங்களில் இயல்பு ஜோக்கை விட அதிக சுவாரஸ்யத்தை தருகிறது

இளசு
02-02-2009, 09:25 PM
முன்பு தவறவிட்டது.. இன்று கண்ணில் பட்டது!

அபாரம் பூ! ( இது இப்போது அசத்தப்போவது யாரு-விலும் வந்திருக்கணுமே...)

நண்பன் சொன்ன சம்பவமும் நச்!

ஒரு மின்னஞ்சல் நினைவாடலில் -

ஒரு ஆண்மனச் சந்தேகம் -

உருகிய கொதிமெழுகை முன்கை மென்தோலில் ஊற்றி
துணிபோர்த்தி சரக்கென உருவி ரோமமகற்றும் வீரப்பெண்ணுக்கு
கரப்பான், பல்லி கண்டுவிட்டால் மட்டும்
கடலளவு அச்சம்..நடுக்கம்..!

----------------------------

ஒருங்குறி மாற்றப்பணிக்கு நன்றி பூர்ணிமா!

loshan
03-02-2009, 05:58 AM
உருகிய கொதிமெழுகை முன்கை மென்தோலில் ஊற்றி
துணிபோர்த்தி சரக்கென உருவி ரோமமகற்றும் வீரப்பெண்ணுக்கு
கரப்பான், பல்லி கண்டுவிட்டால் மட்டும்
கடலளவு அச்சம்..நடுக்கம்..!

அருமை இளசு.. கவிதையிலே கடியான கேள்வி..
எனக்குத் தெரிந்த பதில்..

அழகாக்க,தம்மை அம்சமாக்க எந்த ஒரு வேதனையையும் பெண் பொறுப்பாள்.. (யாரோ சொன்னது)

அறிஞர்
04-02-2009, 07:30 PM
பல்லி மிட்டாய் கதை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி.. நன்றி செல்வா..
நண்பன் அவர்களின் சம்பவமும் அருமை..
இளசு-லோஷன் கலாய்ப்புகளும் சிறப்பு..