PDA

View Full Version : வரட்சி!



நாகரா
08-07-2009, 09:43 AM
மண்ணில் மரங்களில்லை
விண்ணும் வரந்தரவில்லை

நெஞ்சில் ஈரமில்லை
கண்ணிலுந் தயவில்லை

உயிர்நல நாட்டமில்லை
மனித நேயமுமில்லை

மெய்ஞ்ஞான வேட்கையில்லை
விஞ்ஞான நோக்குமில்லை

மனிதம் அறவே இல்லை
எனவே கடவுளும் இல்லவே இல்லை

இளசு
16-07-2009, 05:52 PM
வறட்சிகள் நிரந்தரமல்ல..
காட்சிகள் மாறி மாறி வருவதும்...
ஆவியான அனைத்து நீரும் மழையாய் மாறுவதும்
யுகயுகமாய் நிகழ்வதே!

எ(இ)துவும் கடந்துபோகும்..

வாழ்த்துகள் நாகரா அவர்களே!

நாகரா
17-07-2009, 02:22 AM
வரட்சியிலும் பசுமை பூசும் உம் அழகுப் பின்னூட்டத்துக்கு நன்றி இளசு