PDA

View Full Version : இலங்கைக்கு நிவாரண பொருட்களுடன் கப்பல் புறப்பட்டது



நேசம்
08-07-2009, 07:10 AM
சென்னை துறைமுகத்தில் இருந்து தேவையான நிவரான பொருட்களுடன் கப்பல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.

ஐரொப்பிய தமிழர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில் ஐரொப்பிய தமிழர்கள் பலர் ஒன்று சேர்ந்து, மருந்து, உணவு பொருட்களை "கேப்டன் அலி" என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பினர். வணங்கமான் என்று அழைக்கப்பட்ட இந்த கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க வில்லை.அதனால் கடந்த மாதம் ஜூன் 12 தேதி சென்னை அருகே வந்தது

சென்னை துறைமுகத்துக்கு உள்ளே நுழைய அனும*தி இல்லதால் தொலைவில் நங்கூரம பாய்ச்சி நின்றது. எனவே, நிவரான பொருட்கள் அனைத்தும் அங்குள்ள தமிழர்களூக்கு சேர வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதை தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கையால் இலங்கை அரசு வேறு கப்பல முலம் கொண்டு வர அனுமதி அளித்தது.

சென்னை துறைமுகத்துக்குள் வணங்காமண் கப்பல் வர அனுமதிக்கப்பட்டது.அதில் இருந்து பொருட்கள் அனைத்தும் கேப் கொலாரடா என்ற கப்பலில் ஏற்றி நேற்று இலங்கைக்கு அனுப்பபட்டது.

இன்னும் இர*ண்டு நாட்களில் இலங்கையை அடைந்து விடும் என்று துறைமுக ஊழியர்கள் கூறினர்.நிவராண பொருட்களை இலங்கை தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் செஞ்சிலுவை சங்கத்தினர் முயற்சி எடுத்துள்ளனர்

தகவல் : தினந்தந்தி

ராஜா
08-07-2009, 01:54 PM
நன்றி இந்தியா & தமிழ்நாடு..

நல்லது நடந்தால் பாராட்டவும் வேண்டுமன்றோ..!