PDA

View Full Version : உயிர் போகுங் கேள்வி?!



நாகரா
08-07-2009, 06:50 AM
"யாதும் ஊரே யாவருங் கேளிர்"
பூங்குன்றன் சொன்ன இருதயத் திரு பூமி
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
திருமூலர் சொன்ன சர்வ சமய சமரசம்
அன்னை பூமியிலே மலர்வதெக்காலம்?!
பரஞ்ஜோதி அல்லாப் பரப்பிரம்ம பிதாவே!
அருள் புரிய வேணும் எமக்கின்றே நீயே

lenram80
08-07-2009, 02:41 PM
அமைதிப் பற்றி பேசுகின்றன அணு ஆயு்த நாடுகள். மனித இனம் வாழும் வரை இந்த கேள்விகளுக்கு பதில் கிடையாது...

வாழ்த்துகள் நாகரா!!!

நாகரா
09-07-2009, 09:58 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி லெனின், சூழல் அமைதிக்குச் சாதகமாக இல்லை என்றாலும், அமைதி வெல்லும் என்ற நம்பிக்கையில் நம்மால் இயன்றதைச் செய்வோம் நண்பரே

அமரன்
09-07-2009, 10:04 AM
அவரவர் வகுக்கும் எல்லைக் கோடுகளே நிகழ் உலக நிலைக்கு முழுக்காரணம். நிலம், மதம், இனம் என இந்தக் கோடுகள் நீண்டு கொண்டே போகின்றன.

லெனின் சொன்னதைப் போல் அமைதியின் பங்கம் வல்லரசுக் கனவுகள் என்பதும் உண்மை.

உலக அமைதி மலரும் வரை உள்ளம் அமைதி கொண்டு மலர்வதில்லை.

பாராட்டுகள் அய்யா.

நாகரா
09-07-2009, 10:45 AM
உம் பாராட்டுகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி அமரன்.

உள்ளத்தில் அமைதி உண்டாக
உலகில் அமைதி உண்டாகும்

இது உணர்வு முதல் வாதம்(Spiritualism)

உலகில் அமைதி உண்டாக
உள்ளத்தில் அமைதி உண்டாகும்

இது பொருள் முதல் வாதம்(Materialism)

உலகம் மெய்
உள்ளம் உயிர்

உள்ளம் இன்றேல் உலகம் பிணம்
உலகம் இன்றேல் உள்ளம் பேய்

உயிர்மெய் ஒருமையாம்
உள்ள - உலக ஒருமையோ
அமைதி!

சிந்திக்க வைக்கும் உம் பின்னூட்டக் கடைசி வரிகள்

அமைதியில் அமர உள்ளம்
அமைதியில் அமர உலகம்
அமரராவோம் மனிதம் யாம்!

நாகரா
09-07-2009, 11:05 AM
அடக்கம் அமரருள் உய்க்கும் - திருவள்ளுவ சூத்திரம்

உள்ளம் உலகத்தை உதாசீனம் செய்யும் மாயாவாதம் வேண்டாம்.
உள்ளம் உலகத்தை அரவணைக்கும் தயாவாதமே வேண்டும்.

உள்ளோம் என்ற உணர்வைத் தரும் உள்ளம்
உள்ளோம் என்ற இருப்பை உணர இடந்தரும் உலகம்

எதைக் கொள்ளுவது, எதைத் தள்ளுவது
இரண்டையும் ஏற்பதே அடக்கமோ!

உலகைப் பாராமல் கண் மூடி இருத்தலோ தவம்
உலகில் வேரோடிக் கண்ணில் தயவோட இருப்பதன்றோ தவம்

ஒன்றைக் கொண்டு, மற்றொன்றைத் தள்ளுவதோ அடங்காமை

அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் - திருவள்ளுவ எச்சரிக்கை

சிந்திப்போம், உள்ளமும் உலகமும் ஒருங்கே அமைதியில் அமர வழி வகுப்போம்! அமர நிலை மண் மீதே எய்துவோம்! திருவள்ளுவ சூத்திரமும், எச்சரிக்கையும் மாயாவாதத்தை முறியடிக்கும் மாயா(சாகாத) வாதம்!

நாகத்துக்குத் தீனி தந்த அமரனுக்கு மீண்டும் நன்றி