PDA

View Full Version : அன்போ பிரபாகரம்!????



நாகரா
07-07-2009, 12:38 PM
மறத்திற்குந் துணையாகும் அன்பே அறங்காக்கப்
பிறந்ததுவோ பிரபாகர னாய்

அமரன்
07-07-2009, 05:18 PM
உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது அய்யா.

பிரபாகரனைப் போற்றிப் பாடியதாலல்ல. குறளடியின் பின்னால் தெரியும் உங்கள் அகவழகினால்..

நாகரா
08-07-2009, 03:07 AM
எல்லாப் புகழும் நம் வள்ளுவப் பெருந்தகைக்கே,

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்று மறத்தையும் அன்போடு இணைத்துப் பாடியவரன்றோ அவர்!
அன்பு நெறி நழுவி அறம் பிழறும் போது தான் மறம் தோன்றுகிறது, தோற்றக் காரணம் சிங்கத்தை விட்டு விட்டு, காரியப் புலியை ஓயாது பழிப்பதில் பயனில்லை. பிரபாகரன் நல்லவரோ கெட்டவரோ என்ற விவாதந் தாண்டி, நம்மைப் போன்ற மனிதனாகவே நான் பார்க்கிறேன், அவர் இருந்த சூழலில் நாம் இருந்திருந்தோமானால், நாமும் புலியாகித் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப் பட்டிருக்கலாம், அவரது ஈழக் கனவு நிறைவேற, அன்பு நெறி விட்டு நழுவாத அற வழியில் நிற்போம், ஈழம் காண்போம், உம் அன்புக்கு நன்றி அமரன்.