PDA

View Full Version : வாழாவெட்டியும் வாழாவெட்டனும்...



rambal
05-04-2003, 03:44 PM
வாழாவெட்டி..

(இது என் நெருங்கிய தோழியின் கதை.. விவாகரத்திற்கு அவர் சொன்ன காரணங்கள்..)


நேற்றோடு
முடிந்தன சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்ட நம் பந்தங்கள்..

இனி நீ யாரோ..
நான் யாரோ..

மூன்று முடிச்சு
என்பது
வெறும் கயிறுதான் எனக்கு..

அதையும் உனக்கு
பத்திரமாக
தபாலில் அனுப்பி வைக்கிறேன்...

விடுதலை கிடைத்த
சந்தோசத்தில்
ஆனந்தமாயிருக்கிறேன்...

இனி என் வாழ்வு
எனக்கே
எனக்கு மட்டும்..

இதில் பங்கு
போட யாருக்கும்
உரிமை கிடையாது..

மாரியம்மன் கோவில்
திருவிழாவில் வெட்டப்படும்
ஆடாகத்தான் அழைத்து
வரப்பட்டு வெட்டப் பட்டேன்...

இளமையிலேயே
முதுமை அடைந்த
கிழவன் நீ...
முதலிரவிலேயே
தெரிந்து கொண்டேன்..

சந்தேகத்தில்
ராமனுக்கு
தம்பி நீ..
என் நண்பன் வந்து போனதும்
புரிந்து கொண்டேன்..

நீ சுட்டது
என் கனவுகளை
மட்டுமல்ல..
என் உடலையும்தான்..

என் வேலைக்கு
தடை உத்தரவு..
வீட்டோடு காவல்..


போதும் இந்தக் கொடுமைகள்
என்று விவாகரத்திற்கு
விண்ணப்பம் கொடுத்த பொழுதும்
நடத்தை கெட்டவள்
பட்டம் கொடுத்துதான்
எனக்கு சுதந்திரம் கொடுத்தாய்...

இனி,
இந்தக் குயில் கூவும்..
கூண்டிலிருந்தல்ல..
அடர்ந்த பச்சை மரங்களில் இருந்து..

rambal
05-04-2003, 03:45 PM
வாழாவெட்டன்

(இது என் மற்றொரு நெருங்கிய நண்பரின் கதை.. விவாகரத்திற்கு அவர் சொன்ன காரணங்கள்..)


நீ வாசம் செய்த வீட்டில்
தனிமையோடுதான்
வாசம் செய்ய வேண்டும்
என்கிற தண்டனை எனக்கு..
என்னைப் பிரிந்த சந்தோஷம்
உனக்கு..

என் பொருளாதரம்
தெரிந்துதான்
காதலித்தாய்..
பின் எப்படி மாறினாய்?

இருப்பதைக் கொண்டு
மகிழ்ச்சியாய் இருப்பதே
சிறந்த வாழ்வு..
பட்டாம்பூச்சியாய் பறக்க நினைத்தால்?

ஒன்றை விட
மற்றொன்று
சிறந்ததாகத்தான்
தெரியும் எப்பொழுதும்..

கனவுகளில்
சஞ்சரித்தால்
எதார்த்த முள் குத்திவிடும்
என்பதை எந்தப் பாடமும்
சொல்லிக் கொடுக்கவில்லையா?

நமக்காக வாழ்வதை விட்டு
அடுத்தவருக்காக
வாழ ஆரம்பித்தால்
நிம்மதி போய்விடும்
என்பது தெரியாதா?

இன்னும் நீ
குழந்தைதான்..
அதனால் தான்
நீ கெட்டு எல்லாவற்றையும்
வாங்கிக் கொடுத்திருக்கிறேன்..
இந்த விவாகரத்து உட்பட..

இராசகுமாரன்
05-04-2003, 03:50 PM
இரண்டு பக்கத்தையும் அலசியது வித்தியாசமாக உள்ளது.
இருந்தாலும் வாழாவெட்டி எளிமையில் அருமை.
இதை விட சிறப்பாக எளிமையாக சொல்ல முடியாது.

poo
05-04-2003, 05:06 PM
அருமை ராம்... அந்த சினேகிதர்களின் மன உணர்வை படம் பிடித்த உன் மனச் சிந்தனை அருமை!!!

chezhian
05-04-2003, 08:21 PM
இருபக்க நியாயம் (வேறு வேறுதானே...???)
நல்ல அலசல்.
அருமை ராம்ஜி.

discreteplague
06-04-2003, 03:07 AM
ஹ்ம்ம் நல்லாவே இருக்கு.

விஷ்ணு

rambal
06-04-2003, 12:54 PM
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

lavanya
06-04-2003, 01:43 PM
அருமை ராம்பால்ஜி அருமை. உங்கள் கவிதை மிக யதார்த்தமாக அமைந்துள்ளது.பாராட்டுகள்

( எனக்கு உங்கள் பெயரில் ஒரு நண்பர் இருந்தார். )

இளசு
06-04-2003, 02:30 PM
ராம்,
வெட்டியும் வெட்டனும் வேறுவேறு ஜோடியில் வெட்டி விடப்பட்டவரா?

நல்ல கவிதை. தலைவர் சொன்னதுபோல் வெட்டி எளிமையில் அருமை.

எனக்கும் ஒரு வெட்டி நண்பி... அவர் கதையைக் கதையாகவே தருவேன்
விரைவில்.

rambal
06-04-2003, 04:39 PM
அருமை ராம்பால்ஜி அருமை. உங்கள் கவிதை மிக யதார்த்தமாக அமைந்துள்ளது.பாராட்டுகள்

( எனக்கு உங்கள் பெயரில் ஒரு நண்பர் இருந்தார். )

என் பெயரில் நண்பர் இருந்தார் என்றால்?
எனக்கு விளங்கவில்லை..
கொஞ்சம் விளக்கவும்..

rambal
06-04-2003, 04:40 PM
ராம்,
வெட்டியும் வெட்டனும் வேறுவேறு ஜோடியில் வெட்டி விடப்பட்டவரா?

நல்ல கவிதை. தலைவர் சொன்னதுபோல் வெட்டி எளிமையில் அருமை.

எனக்கும் ஒரு வெட்டி நண்பி... அவர் கதையைக் கதையாகவே தருவேன்
விரைவில்.

ஆம் இது வேறு வெறு ஜோடிகளின் இரண்டு கதைகள் தான்..

Narathar
07-04-2003, 05:08 AM
எனக்கு உங்கள் பெயரில் ஒரு நண்பர் இருந்தார்.


அப்போ நீங்க சொன்னவரிகள்தான் அவர் கவிதையா????.....நாராயனா!!!!
அப்போ அந்த நண்பர் யாரு?

மனுஷன் நல்லாத்தான் எழுதுராரு

gankrish
07-04-2003, 10:46 AM
ராம் சூப்பர்ப். வாழவெட்டான் என்னை ரொம்ப பாதித்தது. சில பெண்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை போல் வாழ வேண்டும் என்று விரும்பி. இருப்பதை கை விடுகிறார்கள். அதனால் எத்தனை இழப்பு.