PDA

View Full Version : பிரபுதேவா யூடியுப் பென்னி லாவா (Benny lava) ஆன கதைHoneytamil
07-07-2009, 06:58 AM
http://i26.tinypic.com/2947alv.jpg

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் என்று பதிவுலகம் களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசைத்துறையில் பரபரப்புடன் வெளிவர ஆரம்பித்த கால கட்டத்தில் அதே பரபரப்புடன் நடன துறையில் வந்தவர் பிரபுதேவா. ஏ. ஆர். ரஹ்மான் இன்று இருக்கும் உயரம் வேறு. ஆனால் பிரபுதேவா இன்று முடங்கியுள்ள இடம் வேறு.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஏ. ஆர் ரஹ்மான் இந்தி திரை, உலக இசை இன்று மாபெரும் நதி போல் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். ஆனால் பிரபுதேவா தமிழ் சினிமா , மொக்கை படங்கள் என்று தன் நடன திறமையை உலக அளவில் கொண்டு செல்லாமல் சிறு குட்டை போல் தேங்கி விட்டார்.

பிரபு தேவா சினிமா என்று தன்னை சுருக்கி இருக்காமல் நடனத்தில் தனி கவனம் செலுத்தி வருடத்திற்கு ஒன்றிரண்டு ஆல்பம் போட்டு இருக்கலாம்.

பிரபுதேவா உண்மையில் திறமைசாலிதானா? உலக அளவில் புகழ் பெறும் அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறதா? வெறும் கை கால்களை அசைப்பது மட்டும் நடனம் ஆகி விடாது. நளினமும், குறும்பு, கோமாளித்தனங்களுடன் செய்யும் அசைவுகளே விருப்பமான நடனமாக மக்களிடம் கொண்டு சென்று இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலக அளவிலும் ரசிக்கப்படும் விசயமாகவே இருக்கிறது.

இதற்கு உதாரணமாக ஒரு பாட்டு வீடியோ உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் யூடுப் தளத்தில் மிக பிரபலம் ஆகி உள்ளது. அது 'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் பிரபுதேவா ஆட்டத்தில் இடம் பெற்ற 'கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ' பாடல்தான். இன்று வரை 12 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பாடலை பார்த்து ரசித்து உள்ளனர்.

வீடியோ : 12 கோடிக்கும் மேல பார்வையிடப்பட்டுள்ள வீடியோ (http://www.youtube.com/watch?v=ZA1NoOOoaNw)

பார்த்து ரசிக்கும் சில வெளிநாட்டவர் "Funny" , "கோமாளி" இன்று பின்னூட்டத்தில் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அந்த பாடலை பார்த்து ரசிக்கிறார்கள் என்பது உண்மை. அந்த பாடலில் பிரபுதேவாவிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களை கவர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாது. பிரபு தேவா அவர்களால் ரசிக்க பட கூடிய ஒருவராகி விட்டார்.

இதை விட வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த பாடல் போன்று அவர் நடன அசைவுகளை காப்பி அடித்து ரீமிக்ஸ் வீடியோக்கள் யூடுபில் நூற்று கணக்கில் பட்டையை கிளப்புகின்றன. உதாரணத்திற்கு சில வீடியோக்களை பாருங்கள்.

வீடியோ 1 : கிரேசி இந்தியன் வீடியோ மைமோ ஸ்டைல் (http://www.youtube.com/watch?v=NK19JBzmN9I)

வீடியோ 2 : பென்னி லாவா ரீமிக்ஸ் (http://www.youtube.com/watch?v=laxTK7lHkww)

வீடியோ 3 : மெக்கைன் அன்ட் பாலின் கிரேசி இந்தியன் டான்ஸ் பீஸ்ட் (http://www.youtube.com/watch?v=CBZej5qSIwU)

Benny Lava இன்று யூடுபில் தேடி பாருங்கள் (http://www.youtube.com/results?search_type=&search_query=benny+lava&aq=f) . அவருக்கு உள்ள புகழ் உங்களுக்கு தெரியும். யூடுபில் அவர் பெயர் "Benny Lava" . "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடலின் "காய்ந்த நிலாவோ" என்ற வார்த்தைகளை எடுத்து கொண்டு பிரபுதேவாவுக்கு பென்னி லாவா என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

போகிற போக்கில் வெளிநாடுகளில் நீங்கள் எந்த ஊரு இன்று யாரும் கேட்டால் தமிழ் நாடு என்று சொல்லுவதற்கு பதிலாக பென்னி லாவாவோட ஊரு என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார்கள் போல.

நான் முன்பு கூறியது போல பிரபு தேவா சினிமா என்று மட்டும் இராமல் நடனத்தில் முழு கவனம் செலுத்தி ஆல்பம் வெளியிட்டால் உலக அளவில் நல்ல இடத்தை சென்றடைய வாய்ப்புண்டு.

நன்றி ; டி.வி.எஸ் 50

நேசம்
07-07-2009, 07:24 AM
ஆனால் அவர் எதிர்பாக்கிற இடம் வேற ஆக இருக்கிறது.நிச்சயமாக அதை தாண்டி அவரிடம் எதோ இருப்பதுனால் தான் அவரை நாம் கூட ரசிக்கிறொம்.

Honeytamil
07-07-2009, 12:38 PM
ஆனால் அவர் எதிர்பாக்கிற இடம் வேற ஆக இருக்கிறது.நிச்சயமாக அதை தாண்டி அவரிடம் எதோ இருப்பதுனால் தான் அவரை நாம் கூட ரசிக்கிறொம்.

எந்த இடம்?????

இளசு
07-07-2009, 08:09 PM
நம்மூர்க் கலைஞருக்கு இத்தனை வரவேற்பு இருக்கும் செய்தியைப்
பகிர்ந்தமைக்கு நன்றி - ''தேன் தமிழ் '' அவர்களே!


சின்னக்குயில் சித்ரா, மாஸ்டர் பிரபுதேவா போன்றோர் -
இன்றைய தலைமுறைக் கலைஞர்களிடம்
வணக்கத்துக்குரிய மரியாதை பெறும் இடத்தில் இருக்கிறார்கள்..

இளைய கலைஞர்கள் இவர்கள் பெயரை உச்சரிக்கும்போதே தெரியும் ...

பிரபுதேவா -இன்னும் உயரம் போயிருக்கலாம் என்ற எண்ணம் எழுவது சரியே!