PDA

View Full Version : நன்னம்பிக்கை முனையாம் ஈழம்!



நாகரா
06-07-2009, 02:22 PM
என்புந் தோலுஞ் சதையும் பிய்ந்த
வன்பின் இரண களச் சேறாய்ச் சிதைந்த எம்மை
அன்பின் திரு பூமி ஈழச் சோலையில்
எம் மெய் உயிர்க்க எழுப்பினார் வள்ளல்!
மாயா நிலையினில்
ஓங்கியே வளர்கிறோம்!
உருமும் நேரெதிர் வெறிகள் தாண்டி
அருளாம் நேர்மையில் குறியாய் நிற்கிறோம்!
கரும வினைச் சுழலைத் தாண்டி
தரும நெறி தயவாய் இருக்கிறோம்!

நாகரா
10-07-2009, 11:21 AM
ஆச்சிங்கே ஈழம் போச்சிங்கே பேதம்
நோக்கிங்கே ஒன்றே குலம்

ஆச்சிங்கே ஈழம் மூச்சிங்கே நேசம்
நோக்கிங்கே ஒருவனே தேவன்

நாகரா
10-07-2009, 11:34 AM
ஆச்சிங்கே ஈழம் ஈங்கின்றே யாதும்
ஊர்என்றே கூடும் ஞாலம்

ஆச்சிங்கே ஈழம் ஈங்கின்றே யாரும்நம்
ஆள்என்றே ஆன்ம போதம்

நாகரா
10-07-2009, 11:44 AM
தீபவொளியில் புலியுஞ் சிங்கமுங் கற்பூரமாய்த்
தாங்கரைய மணக்கும் ஈழம்

நாகரா
10-07-2009, 12:31 PM
இனவாதம் முடிந்தது புலிநெஞ்ச ஆழக்
கனவீழம் விடிந்தது இன்று

நாகரா
10-07-2009, 12:37 PM
விதைகளாய் விழுந்த புலிகள் பசுமை
விளைவதாய் எழுகிற ஈழம்

நாகரா
10-07-2009, 12:41 PM
மாயாப் பிரபாகரம் மரண மாயை
மாய்த்தே எழுமாநிலம் ஈழம்

நாகரா
10-07-2009, 12:43 PM
மாயச் சபித்தீர் ஈனரே மாயா
போதி விருட்சம் ஈழம்

நாகரா
10-07-2009, 12:49 PM
அறம்பிறழ்ன்ற அரசெதிர்த்து நலிந்தோரைக் காக்க
மறப்புலியாய் அவதரித்த தன்பே

நாகரா
10-07-2009, 12:53 PM
எல்லாம் இழந்தோம் எம்இருதய ஆழத்தீழம்
வென்றே எழுகிறோம் இன்றே

நாகரா
10-07-2009, 12:57 PM
தன்னம்பிக்கை முனைப்போடுப் போராடி வென்றோம்யாம்
நன்னம்பிக்கை முனையாம் ஈழம்

நாகரா
10-07-2009, 01:00 PM
மெய்கள் அறுந்தும் உயிர்கள் பிரிந்தும்
நெஞ்சம் மறக்கா ஈழம்

நாகரா
10-07-2009, 01:03 PM
இழியுந் தமிழின் அமிழ்தம் ஈழம்அது
அழியா இருதய ஆழம்

நாகரா
10-07-2009, 01:09 PM
ஊனவிழி பிடுங்கியும் குருட்டு மூடரேஎம்
ஞானவிழி படும்வழி ஈழம்

நாகரா
11-07-2009, 02:16 AM
சுதந்திர வேள்விக்கு அவியான உயிர்மெய்கள்
சுகம்பெற மேலோங்கும் ஈழம்