PDA

View Full Version : வாழ்க்கை வாழ்ந்ததில்லை...



சசிதரன்
06-07-2009, 02:08 PM
அதிகாலை நேரம் எழுந்து
பூவும் பனித்துளியும் முத்தமிடுவதை
பார்த்து ரசித்த நினைவில்லை...

அழுது கொண்டிருந்த..
பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு..
பட்டாம்பூச்சி பிடித்து தந்ததில்லை.

தேடி அலைந்து கிடைக்காமல்...
திருட்டுத்தனமாய் இலைபறித்து...
தங்கை கைக்கு மருதாணி இட்டதில்லை.

தெரியாத ஊர் சென்று...
புரியாத மொழி பேசி...
யாரென்று தெரியாத மனிதனிடம்...
சிநேகம் கொண்டு சிரித்ததில்லை.

கண்களில் கண்ணீருடன்...
தேடி வந்த நண்பனுக்கு...
சாய்வதற்கு தோள் கொடுத்து...
உறங்க மடி தந்து...
நான் விழித்திருந்ததாய் ஓர் இரவில்லை.

மொட்டை மாடி நிலவொளியில்...
கவிதை கேட்ட காதலியின்...
கைப்பிடித்து முத்தமிட்டு...
கவிதை ஏதும் சொன்னதில்லை.

எனது இயல்பை...
முற்றிலும் தொலைத்துவிட்டு..
இயல்பாய் இருப்பதாய்...
பாவனை செய்கிறேன்.

சீக்கிரம் யாரவது எனக்கு உணர்த்துங்கள்...
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைத்து...
தவற விட்டுக் கொண்டிருக்கிறேன்...
வாழ்க்கையை.

இளசு
06-07-2009, 06:52 PM
நாளை.... அல்லது அடுத்தநாள்
இவையெல்லாம் நான் செய்ய வாய்க்கும் என
இன்றுகளை நழுவவிடுவது
இக்கவி நாயகன் மட்டுமல்லன்..

நாம் அனைவருமே!

நானும் ஒரு ''நாளைப் போவான் - நந்தனே!''

வாசிப்பவன் மனதை உரசும் கவிதை எதுவுமே வெற்றிக்கவிதைதான்..

வாழ்த்துகள் சசீ..

கீதம்
06-07-2009, 11:04 PM
எதையும் செய்யவில்லை என்பதினும், எதையெல்லாம் செய்யத் தவறினோமென்பதை உணர்ந்து அதற்காக வருந்துவதும் வாழ்வதன் அறிகுறியே. அருமையான கவிதை. வாழ்த்துகள்.

நாகரா
07-07-2009, 02:09 AM
இயந்திரப் பிழைப்பில்
தொலைந்த மனித வாழ்வின் கூறுகளைப்
படம் பிடிக்கும் அருங் கவிதைக்கு
வாழ்த்துக்கள் சசிதரன்

இதய இரத்த இயந்திரத் துடிப்பும்
இருதய சமரச நாத உயிர்ப்பே
இதைக் கவனிக்க நேரமின்றி மனமுமின்றி
இதத்தை இழந்த மனிதத்தின்
நகர நரக நகர்வில்
கை விட்டுப் போகும் வாழ்க்கை!
தயவின் இருப்பாய்
இருதயம் இருந்தும்
தாழிட முடியா
அன்பு இருந்தும்
அறிவில் விளங்கா அன்பு
ஆற்றலாய் இயங்கா தயவு!
மனித இயற்கை மாண்டு போனது!
இயந்திர செயற்கை தாண்டவம் ஆடுது!

போலி நாகரீக அவலத்தைத் தோலுரித்து
மனத்தைச் சங்கடப்படுத்தும் கவிதைக்கு நன்றி சசிதரன்

நேசம்
07-07-2009, 05:04 AM
வாழ்க்கையில் சிலவற்றை செய்ய தவறவிட்ட அனுபவம் எல்லாரிடத்திலும் இருக்கும்.செய்தவைகள் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும்,அதை நினைக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கும்.எப்பொழுதும் இயல்பாக இருக்கனும் என்று உணர்த்தும் கவிதை

கா.ரமேஷ்
07-07-2009, 05:32 AM
உள்ளம் ஏங்கும் ஏக்கங்கள்...
உணர்வுகளில் கலந்திட வேண்டும்...

உணர்வீர்கள் கண்டிப்பாய்
ஏக்கங்கள் தீர்ந்திட கண்டும்...

எதிர்பார்ப்பதுதான் வாழ்க்கை...
நிறைவேறிடும் உங்கள் வேட்க்கை.....

சசிதரன்
08-07-2009, 03:47 PM
நாளை.... அல்லது அடுத்தநாள்
இவையெல்லாம் நான் செய்ய வாய்க்கும் என
இன்றுகளை நழுவவிடுவது
இக்கவி நாயகன் மட்டுமல்லன்..

நாம் அனைவருமே!

நானும் ஒரு ''நாளைப் போவான் - நந்தனே!''

வாசிப்பவன் மனதை உரசும் கவிதை எதுவுமே வெற்றிக்கவிதைதான்..

வாழ்த்துகள் சசீ..

நல்லதொரு பின்னூட்டம் தந்து வாழ்த்தியமைக்கு நன்றி இளசு அண்ணா...:)

சசிதரன்
08-07-2009, 03:48 PM
எதையும் செய்யவில்லை என்பதினும், எதையெல்லாம் செய்யத் தவறினோமென்பதை உணர்ந்து அதற்காக வருந்துவதும் வாழ்வதன் அறிகுறியே. அருமையான கவிதை. வாழ்த்துகள்.

நன்றி கீதம்...:)

சசிதரன்
08-07-2009, 03:49 PM
இயந்திரப் பிழைப்பில்
தொலைந்த மனித வாழ்வின் கூறுகளைப்
படம் பிடிக்கும் அருங் கவிதைக்கு
வாழ்த்துக்கள் சசிதரன்

இதய இரத்த இயந்திரத் துடிப்பும்
இருதய சமரச நாத உயிர்ப்பே
இதைக் கவனிக்க நேரமின்றி மனமுமின்றி
இதத்தை இழந்த மனிதத்தின்
நகர நரக நகர்வில்
கை விட்டுப் போகும் வாழ்க்கை!
தயவின் இருப்பாய்
இருதயம் இருந்தும்
தாழிட முடியா
அன்பு இருந்தும்
அறிவில் விளங்கா அன்பு
ஆற்றலாய் இயங்கா தயவு!
மனித இயற்கை மாண்டு போனது!
இயந்திர செயற்கை தாண்டவம் ஆடுது!

போலி நாகரீக அவலத்தைத் தோலுரித்து
மனத்தைச் சங்கடப்படுத்தும் கவிதைக்கு நன்றி சசிதரன்

நல்ல ஒரு கவிதையை பின்னூட்டமாய் தந்து வாழ்த்தியதற்கு நன்றி திரு நாகரா அவர்களே...:)

சசிதரன்
08-07-2009, 03:49 PM
வாழ்க்கையில் சிலவற்றை செய்ய தவறவிட்ட அனுபவம் எல்லாரிடத்திலும் இருக்கும்.செய்தவைகள் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும்,அதை நினைக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கும்.எப்பொழுதும் இயல்பாக இருக்கனும் என்று உணர்த்தும் கவிதை

மிக்க நன்றி நேசம் அவர்களே...:)

சசிதரன்
08-07-2009, 03:50 PM
உள்ளம் ஏங்கும் ஏக்கங்கள்...
உணர்வுகளில் கலந்திட வேண்டும்...

உணர்வீர்கள் கண்டிப்பாய்
ஏக்கங்கள் தீர்ந்திட கண்டும்...

எதிர்பார்ப்பதுதான் வாழ்க்கை...
நிறைவேறிடும் உங்கள் வேட்க்கை.....

நன்பிக்கை தரும் உங்கள் வரிகளுக்கு நன்றி ரமேஷ்... :)

கண்ணன்
11-05-2010, 02:27 PM
சீக்கிரம் யாரவது எனக்கு உணர்த்துங்கள்...
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைத்து...
தவற விட்டுக் கொண்டிருக்கிறேன்...
வாழ்க்கையை.

அருமை...சசிதரன்.
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழவைப்பதற்கும்தான்!!

செல்வா
11-05-2010, 02:53 PM
ரொம்ப நாளாச்சு சசி கவிதைகள் வாசிச்சு....

இளசு அண்ணா சொன்னமாதிரி....

வெற்றிக் கவிதைதான் சந்தேகமில்லாமல்.

வாழ்த்துக்கள் சசி...