PDA

View Full Version : ஒரு இனத்தின் அழிவில் உருவானதுRavee
05-07-2009, 08:09 PM
ஒரு இனத்தின் அழிவில் உருவானது

உங்களுக்கு தெரியுமா ஒரு சேதி
ஒரு இனத்தின் அழிவில் உருவானது தான்
இன்றைய ஜனநாயக காவலர்கள் தேசம்
எங்களை பற்றி எத்தனை பேர் அறிவார்
என்று எனக்கு தெரியாது
சொல்கிறேன் எங்கள் கதையை

இயற்கையே எங்கள் கடவுள்
எங்களை ஈன்றவர்களே எங்கள் வழிகாட்டிகள்
நாளை தேவையை
இன்று சேர்த்து வைக்கும
ஈனப்பிறவிகள் இல்லை நாங்கள்.
எங்கள் மண்ணின் மேல்
எமக்கு நம்பிக்கை இருந்தது.

கோடையிலே விவசாயம் ,
பனியிலே வேட்டை
இதுவே எங்கள் உணவுக்கான ஆதாரம்
தன்னலம் இல்லாத காரணத்தால்
தங்கத்தை பெரிதாய் நினைக்கவில்லை

கருப்பு இந்தியரை தேடி வந்த வெள்ளையர்
எங்களை பார்த்து சிவப்பு இந்தியர் என்று அழைத்தனர்
இதனால் தானோ தெரியாது
எங்கள் வாழ்கையில்
இரத்தம் நிரந்தரம் ஆனது.

பொய் முகம் காட்டி புன்னகைத்தார்
புரியவில்லை அன்று
இருக்க இடம் கேட்டார்கள் தந்தோம்
இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் சோகம்
கண்ணாடிகளும் பாசிமணிகளும் தந்து
பரிசாய் பெற்றனர் தங்கத்தை

ஆசை பேராசையாய் கொழுந்து விட்டு எரிந்தது
பரிசாய் எத்தனை நாள்தான் பெறுவது என்று
சுரங்கத்தை தேடும்
சூழ்ச்சி வலை விரித்தனர்
போதை பொருட்கள் , மின்னல் வேக குதிரைகள்
வெடி பொருட்கள், துப்பாகிகள் என்று ....
விலை போனார்கள் எம் மக்கள்

ஊர் இரண்டுபட்டதும் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்
கண்ணுக்கு எட்டா தூரம் வரை
கை மாறியது நிலங்கள்.
சகோதரத்துவம் பேசிய கைகள்
சண்டைக்கு வந்தது.

எங்கள் தாய் மண் எமக்கு இல்லை
என்றபோது
விளை நிலம் இல்லை
வேட்டையாட எருதுகள் இல்லை.
கண்ணில் பட்ட எல்லாவற்றையும்
கொன்றார்கள் குவித்தார்கள் எரித்தார்கள்
நாடோடியாய் மாறிப்போனோம்

காடும் மலையும் வீடாய் போனது
குல வேர் அறுபட குடிபெயர்ந்தோம்
கூடி சிரித்தன குள்ள நரிகள்
சில நாள் போனது சிகரத்துக்கும் வந்தார்கள் சிப்பாய்கள்,
இது வளம் கொழிக்கும் உன்னத தேசம்
வாழ வந்தவர் மட்டும் வாழும் தேசம்

நகரத்தின் எல்லை விரியும் போது
நாடோடிகளுக்கு இடம் இல்லை
நண்பர்களாய் பார்த்த நாங்கள்
நாடோடிகளாக போனோம் ,
காலம் சிறிதே உமக்கு
காலி செய்யும் இந்த தேசத்தை என்றனர்.

கை நீட்டி நின்றோம்
கதறி அழுதோம்
கருணை இல்லையா
உமக்கு என்றோம்.
சொந்த மண்ணிலே
அன்னியமாய் போன
சூழ்நிலை கைதிகள் நாங்கள்

தலைவர்கள் தலைக்கு விலை வைத்து
தனிமை படுத்தினர் எங்களை
ஒருவழியும் இல்லா நிலையில்
மரணம் தவிர்க்க மண்டியிடோம்
மதம் மாறுதல் ஒன்றே மார்க்கம் என்றார்கள்

இயற்க்கை வழிதானே இறைவழி என்றோம்
ஏற்றுக்கொள்ளவில்லை இறைமறை நூல் எங்கள் கையில்
உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் சொல்வதை என்றார்கள்

நான் இறைவனுக்கு உண்மையாய் இருப்பேன்
இந்த மண்ணுக்கு உண்மையாய் இருப்பேன்
இந்த மக்களுக்கு உண்மையாய் இருப்பேன் .......

விளங்கவில்லை எங்களுக்கு விளங்கவில்லை

உண்மை என்றால் என்ன ?
அன்பு என்றால் என்ன ?

கொடுத்த வாக்கை மீறுவது உண்மையா ?
குரல்வளை அறுத்து கொல்வது அன்பா ?

மதம் மாறினாலும் மாற்றம் இல்லை எம் வாழ்வில்

இனத்தின் சரித்திரம் அறியா
இளைய தலைமுறை
இன்றுவரை தேறவில்லை ,
அழுக்கு படிந்த ஆடையுடன் தெரு ஓரங்களில்

வாழ்க ஜன நாயகம் ,
வாழ்க ஜன நாயக காவலர்கள்.

Ravee
05-07-2009, 08:25 PM
:traurig001: :traurig001: :traurig001:

அமரன்
06-07-2009, 07:40 AM
ஆம்.. அந்தச் சுதேசிகள் வரலாறு ஈரமானது.

தேசவாதி, இனவாதி, மதவாதி, நிறவாதி என நம்மில் பலர் வசதியான முகமூடியை அணிந்துகொள்கிறோம்.

இந்த நடத்தை உள்ளவரை இரத்ததால் எழுதப்பட்டுக் கறுத்த வரலாறுகள் என்றும் தோன்றும்.

பாராட்டுகள் ரவீ.

கா.ரமேஷ்
06-07-2009, 08:13 AM
அருமையான வரிகள் ரவீ...தொடருஙகள் ...!

நாகரா
06-07-2009, 10:02 AM
வெள்ளையரின் தோலுரிக்கும்
செவ்விந்தியர் பற்றிய
செவ்விய கவிதை
வாழ்த்துக்கள் ரவீ

Ravee
10-07-2009, 11:01 AM
நன்றி ஏன் நண்பர்களே ,சிறு வயது முதல் எனக்கு ஏன் என்று தெரியாமல் செவிந்தியர் மேல் ஒரு வருத்தம் தோன்றும்.உலகத்தில் இது போல பல பாவப்பட்ட குடிமக்கள் தங்களின் உண்மையான வாழ்கை தடத்தை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள் பாவம்.

இதற்க்கு எல்லாம் நம் மக்கள் விஞ்ஞானம் , நாகரிகம் என்று எதனை சொன்னாலும் நடந்த உயிர் கொலைக்கு யார் பொறுப்பு ஏற்றுக்கொள்வது