PDA

View Full Version : சரித்திர நாயகனை வாழ்த்துவோம் வாங்கபரஞ்சோதி
05-07-2009, 06:36 PM
டென்னிஸ் உலகின் மகா சக்ரவர்த்தியான ரோஜர் பெடரர் இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக்கை அவர்களை வென்று 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சரித்திர சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

இத்திரியில் நாம் அனைவரும் அவருக்கு நம் வாழ்த்துகளை அள்ளி அள்ளி கொடுப்போம்.

அவரைப் பற்றி செய்திகள், படங்கள் இங்கே பகிர்வோம்.

பரஞ்சோதி
06-07-2009, 06:10 AM
விம்பிள்டன் டென்னிஸ்
இமாலய போராட்டத்திற்கு பின் சாம்பியன் ஆனார், பெடரர்
பீட்சாம்ப்ராசின் சாதனையும் முறியடிப்பு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இமாலய போராட்டத்திற்கு பிறகு மகுடம் சூடிய பெடரர், பீட்சாம்ப்ராசின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார்.

விம்பிள்டன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கவுரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் `கிளைமேக்ஸ்` அரங்கேறியது. கோப்பைக்கான இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 6-ம் நிலை வீரர் அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக்கும் சந்தித்தனர்.

சாம்ப்ராசின் சாதனையை முறியடிக்கும் கனவுடன் களம் கண்ட பெடரருக்கு, ரோட்டிக் கடுமையான சவால் அளித்தார். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி தங்களது சர்வீஸ்களிலேயே புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். இதனால் சமநிலை நீடித்து கொண்டே வந்த நிலையில், 12-வது கேமை அதாவது பெடரரின் சர்வீசை முதல் முறையாக தகர்த்தது மட்டுமின்றி, அந்த செட்டையும் ரோட்டிக் தனதாக்கினார்.

கடும் சவால்

2-வது செட்டிலும் பலத்த போட்டி காணப்பட்டது. சாதுர்யமாக ஏஸ் சர்வீஸ் போடுவது, ஷாட்கள் விளாசுவது என்று இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மல்லுக்கட்டினர். இதனால் இந்த செட்டிலும் சமநிலையே (6-6) கடைசி வரை நீடித்தது. இதையடுத்து டை-பிரேக்கர் கொண்டு வரப்பட்டது. டைபிரேக்கரில் ரோட்டிக் 6-2 என்று முன்னிலை வகித்து 2-வது செட்டை கைப்பற்ற மயிரிழையில் இருந்த போது, சரிவில் இருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுந்த பெடரர் தொடர்ந்து புள்ளிகளை சேர்த்து டைபிரேக்கரை 8-6 என்ற கணக்கில் தனக்கு சாதகமாக்கி, செட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன் பின்னர் 3-வது செட்டிலும் இதே போன்று டைபிரேக்கர் நெருக்கடிக்கு மத்தியில் பெடரர் அதனை தன்வசப்படுத்தினார். ஆனால், 4-வது செட்டில் பெடரரிடம் தடுமாற்றம் காணப்பட்டது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ரோட்டிக் அதனை 6-3 என்ற கணக்கில் சுலபமாக சுவைத்தார்.

நீண்டு கொண்டே போன செட்

இதனால் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் செட்டாக 5-வது மற்றும் கடைசி செட் அமைந்தது. ஒவ்வொரு நிமிடங்களிலும் அனல் பறந்ததால் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது.

பரபரப்பான கடைசி செட்டிலும் முதல் இரு செட்டில் இருந்த நிலைமையே காணப்பட்டது. அதாவது தங்களது சர்வீசை எடுப்பதும், எதிராளி செர்வ் செய்யும் போது அதில் திணறும் தொடர் கதையானது. அட்டகாசமாக போடும் ஏஸ் சர்வீஸ்களும் அவரவருக்கு கேமை தக்க வைத்துக் கொள்ள உதவின. கடைசி செட்டில் டை-பிரேக்கர் முறை கொண்டு வரப்படாது என்பதால், இந்த செட் அனுமார் வால் போல் நீண்ட கொண்டே போனது. 4 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் நீடித்த போதிலும் இருவரும் சளைக்காமல் போராடிக் கொண்டிருந்தனர். கிட்டதட்ட 3 செட்டிற்கு நிகரான ஆட்டத்தை கடைசி செட்டில் வெளிப்படுத்த வேண்டி இருந்தது.

வாகை சூடினார்

இப்படியே 14-14 வரை சமனமாக இருந்தது. 29-வது கேமை அதாவது தனது சர்வீசை பெடரர் வென்று 15-14 என்ற முன்னிலை வகித்தார். 30-வது கேமை ரோட்டிக் சர்வீஸ் செய்தார். இதில் சற்று ஆதிக்கம் காட்டிய பெடரர், ரோட்டிக் வாய்ப்புகளை முறியடித்தார். இறுதியில் ரோட்டிக் பந்தை அடித்த போது அது லைனுக்கு வெளியே பறந்ததால், 30-வது கேம் பெடரர் வசம் ஆனது மட்டுமின்றி, வெற்றிக்கனியும் பெடரருக்கு கிட்டியது.

4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6 (8-6), 7-6 (7-5), 3-6, 16-14 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதில் கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரோட்டிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர். ஏற்கனவே இரண்டு முறை விம்பிள்டன் இறுதியில் பெடரரிடம் மண்ணை கவ்வி இருந்த ரோட்டிக்கின் கனவு இந்த முறையும் கரைந்து போய் விட்டது.

சாம்ப்ராஸ் சாதனை முறியடிப்பு

27 வயதான பெடரர் 6-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க ஜாம்பவான் பீட்சாம்ப்ராசின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம் பெற்றார்.

ஓய்வு பெற்ற பீட்சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 5 முறையும், ஆஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால் பிரெஞ்சு ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த பீட் சாம்ப்ராஸ் தனது 9 ஆண்டு கால தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெடரரை கைகுலுக்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற பெடரருக்கு ரூ.6 கோடியே 75 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

நன்றி: தினத்தந்தி

பரஞ்சோதி
06-07-2009, 06:11 AM
புதிய வரலாறு படைத்த பெடரர்


விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்து விட்டது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பீட்சாம்ப்ராசின் 14 கிராண்ட்ஸ்லாம் சாதனையை முறியடித்து பெடரர் புதிய வரலாறு நிகழ்த்தி இருக்கிறார். மேலும் கடந்த 40 ஆண்டுகளில் ஒரே சீசனில் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனை வென்ற 3-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

பெடரர் இதுவரை கைப்பற்றிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வருமாறு:-

ஆஸ்திரேலிய ஓபன் (3)-2004, 2006, 2007

பிரெஞ்ச் ஓபன் (1)-2009

விம்பிள்டன் (6)-2003, 2004, 2005, 2006, 2007, 2009

அமெரிக்க ஓபன் (5)-2004, 2005, 2006, 2007, 2008

பெடரர் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம் பின்வருமாறு:-

*1981-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் பிறந்த பெடரர் தனது 8-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கினார்.

*விம்பிள்டன் உள்ளிட்ட சில ஜுனியர் பட்டங்களை வென்ற அவர் 1998-ம் ஆண்டு சர்வதேச சீனியர் போட்டியில் காலடி எடுத்து வைத்தார். 1999-ம் ஆண்டு, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அறிமுகம் ஆனார்.

*2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ந்து 237 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.

*கடந்த 21 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதுவும் யாரும் செய்யாத ஒரு சாதனையாகும்.

*அனைத்து கிராண்ட்ஸ்லாமும் வென்ற 6 வீரர்களில் பெடரரும் ஒருவர்.

*டென்னிஸ் விளையாட்டு மூலம் அவர் சம்பாதித்த மொத்த பரிசுத்தொகை ரூ.240 கோடியாகும்.

*பெடரருக்கு 2009-ம் ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத பொற்கால ஆண்டாக அமைந்திருக்கிறது. 11 ஆண்டு கால ஏக்கமான பிரெஞ்ச் ஓபனை முதல் முறையாக முகர்ந்தது இந்த ஆண்டில் தான். பீட்சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது மட்டுமின்றி, மீண்டும் முதலிட அரியணையில் ஏறியதும் இந்த ஆண்டில் தான்.

நன்றி: தினத்தந்தி

கா.ரமேஷ்
06-07-2009, 07:00 AM
போட்டியை நானும் கண்டு ரசித்தேன்.... ஒரு கட்டத்தில் வெறுப்பை தந்தாலும்... பலமான போட்டியாகவே இருந்தது...
வாழ்த்துக்கள் ரோசர்..!

நேசம்
06-07-2009, 07:05 AM
இந்த ஆண்டு ரோசர் பெடரருக்கு இனிதாக அமைந்துள்ளது.போட்டியை சுவராஸ்யமாக்கிய ரோசருகும் ஆன்டிக்கும் வாழ்த்துகள்

அமரன்
06-07-2009, 07:10 AM
வெற்றி நாயகனுக்கு வாழ்த்துகள்.
தகவல்களைத் தரும் பரஞ்சோதி அண்ணனுக்கு நன்றிகள்.

mania
06-07-2009, 07:19 AM
நல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. ஃபெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
06-07-2009, 11:49 AM
நல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. பெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)
அன்புடன்
மணியா...

என்ன தலை, உங்க பதிவில் கட்டம் கட்டி ஓடியிருக்கீங்க?

மன்மதன்
06-07-2009, 01:27 PM
உலக சாதனை படைத்த ஃபெடரருக்கு பாராட்டுகள்..

அதை பகிர்ந்து கொண்ட பரம்ஸுக்கு நன்றிகள்...

Mathu
07-07-2009, 09:45 AM
போட்டியின் முதல் இரண்டு செட்களையும் பார்த்தேன், பின்னர் நம்ம ஊரு மல்யுத்த போட்டி(சுவிங்கர், சுவிஸ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு) ஒன்று பக்கத்தில் நடந்ததால் பார்க்க போய்விட்டேன் முடிந்து வந்து பார்த்தால் இறுதி செட் நடைபெற்றுக்கொண்டிருந்தது மிக சுவார்ஸ்யமான போட்டி கடுமையான மோதல்.
ரொஜர் பெடரருக்கு 2009 நிச்சயம் அதிஸ்டமான ஆண்டுதான். அவரின் கனவான பிரெஞ்சு ஓப்பிணை வென்றார், 15 கிறான் ஸ்லாம் கோப்பைகள் கைவசம் மீண்டும் உலக தரவரிசியில் முதல் இடம்.
எல்லாவற்றையும் விட மேல் இந்த ஆண்டு தந்தையாக இருபப்து.
:icon_b: :icon_b: :icon_rollout:

பரஞ்சோதி
07-07-2009, 04:52 PM
தோழர் மதுவின் கூடுதல் தகவல் அருமையாக இருக்குது.

தந்தையாக இருக்கும் ரோஜர் பெடரருக்கு என் வாழ்த்துகள்.

aren
08-07-2009, 09:23 AM
நல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. ஃபெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)
அன்புடன்
மணியா...

நல்லகாலம் மழைபெய்ததால் நாம் தப்பித்தோம்.

mania
08-07-2009, 09:42 AM
என்ன தலை, உங்க பதிவில் கட்டம் கட்டி ஓடியிருக்கீங்க?

புரியலையே பரம்ஸ்....????:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா..

ராஜா
08-07-2009, 02:00 PM
வாழ்த்துகள் ரோஜர் ஃபெடரர்..!