PDA

View Full Version : என் இருண்ட பக்கம்



நாகரா
05-07-2009, 11:43 AM
என்னில் வன்பின் சிறு கூறு
உலகில் விதையாய் விழுந்து
தீவிரவாதம் என்னும்
பூதாகார விருட்சமாய்!
காரணமான என்னை விட்டுக்
காரியமான தீவிரவாதத்தைப்
பழிக்கிறது உலகம்!
என் ஒளி முகத்தை மட்டுமே
உலகம் பார்க்கிறது!
என் இருண்ட பக்கமே
தன் இருண்மைக்கு மூல காரணம்
என்று உலகம் அறியாமல்
அப்பாவியாய் இருக்கிறது!
பாவி நான்
அப்பாவியாய் மாற
அப்பாவி உலகம்
அருட்ஜோதி உலகாய்
உடனே மாறுமே!
எனவே தான்
என் இருண்ட பக்கத்தை
உலகுக்குக் காட்டுகிறேன்!
இருவரும் இருண்மை நீங்கி
அருண்மையாம் பொருண்மை பெறத்
தொடங்கிவிட்டேன்
என் தோலுரிக்கும் மகாயோகம்!
வலிக்கிறது
என்றாலும் இவ்வலிக்குள்ளேயே
வலியிலிருந்து மீளும் வலி(மை)
இருக்கிறது!
வலி தோண்டி வலியெடுக்கும்
என் பயணம் தொடங்கி விட்டது!

நாகரா
05-07-2009, 03:42 PM
அன்பின் திரு உருவங்கள்
வன்பின் கூடாரங்களாய்த்
திரிந்து தெரியும் தோற்றப் பிழைகளுக்கு
என் திரிந்த மனமே காரணமென்ற
உண்மையை ஏற்க மறுத்து
உலகின் மீது பழி சுமத்துகிறேன்
பொய்ம்முகப்பூச்சால்
என் இருண்மையை மறைத்து!

நாகரா
06-07-2009, 02:41 AM
ஆயிரமாயிரந்தலை நாகம்
என் தலையுச்சியில் ஆடும்
சத்துவ அஞ்ஞானத் திமிரில்
ஆயிரமாயிரம் பேர்களின்
தலையுச்சி கொத்தி
ராஜச வன்பாட்டத்திலும்
தாமச முடக்கத்திலும்
உலகை அசுத்த மாயையில்
ஆழ்த்தியிருக்கும்
சுத்த மாயையின்
அடியாள் நான்!
உன் தலையுச்சி கொத்தும்
ஒரு நாகத்தை
நீ வெட்டிப் போட்டால்
திரிகுண மாயையின்
இருண்மையிலிருந்து
முத்தி பெற்றுச்
சச்சிதானந்த சித்தியாம்
அருண்மையில் நிற்பாய்!
நீ வெட்டிய நாகம்
தலை முளைத்து
இன்னொரு அப்பாவித்
தலையுச்சி கொத்தும்!
ஆயிரமாயிரம் நாகங்களை வெட்டி
அஞ்ஞானத் திமிரிலிருந்து மீள
மனம் வராத எனக்கு
முத்தியும் சித்தியும் ஏது?
(சத்துவம் - சுத்த மாயை, ராஜசம், தாமசம் - அசுத்த மாயை)

நாகரா
07-07-2009, 06:23 AM
அன்பெனும் அகச்சமய நெறி
என் உள்ளே விளங்கவில்லை!
எனவே
வெளியே புறச்சமயப் பூசல்கள்
ஓயவில்லை!
உள்ளே வன்பின் காழ்ப்பு
மாயவில்லை!
வெளியே சமயக் காழ்ப்பும்
தீரவில்லை!
என் மனம் ஆயிரமாயிரங்
கூறுகளாய்ச் சிதறிக் கிடக்கிறது!
வெளியே வெடிகுண்டுகள்
மெய்களைச் சின்னாபின்னம்
செய்கின்றன!
என் உள்ளே அயோக்கியத்தனத்தின்
உச்ச நிலை!
வெளியே அவ்வுச்ச நிலையின்
எச்சங்களாய்
லஞ்ச லாவண்யங்கள்!
இருதய பூமி என்னில் இல்லை
எனவே அன்னை பூமியில்
தொல்லையோ தொல்லை!

இளசு
07-07-2009, 07:02 PM
அண்டம் = அணு

கோள்கள், பால்வீதி என விரிந்து பரந்த அண்டம் போலவே
அணுக்கரு, சுற்றும் எலக்ட்ரான், ந்யூட்ரினோ என ஓர் அணுவும் பிரம்மாண்டமே..

ஒன்று விரிந்து விரிந்து வெளிப்பரவும் பார்வையில்..
ஒன்று கூர்ந்து கூர்ந்து உள்நோக்கும் பார்வையில்...

அண்டம் புரியமுற்படுமுன் அணுவை முழுதாய்ப் புரிய முயல்வோம்...

சமயம்,முரண், ஏற்றத்தாழ்வு, தீவிரவாதத் ''தீர்வு'' என உலகவெளித் திருத்தக் கிளம்புமுன்
உள்ளே இருக்கும் நம் மனவெளி அளந்து அகழ்ந்து அறிய முயல்வோம்..


--------------------------

உங்கள் கவிதைகள் வாசித்து எனக்கு விளங்கியது இது..

சரியா நாகரா அவர்களே?

நாகரா
08-07-2009, 02:46 AM
மிகச் சரியே இளசு, "நீ உலகில் காண விரும்பும் மாற்றத்தை, முதலின் உன்னில் காண்"(Become the change you want to see in the world) என்ற மகாத்மா காந்தி அவர்களின் கூற்றுக்கிணங்க, பரிசுத்த உலகை நாம் காண விரும்பினால், முதலில் நாம் பரிசுத்தராக வேண்டும். நம் இருண்ட பக்கத்தைக் கண்டு, அதில் ஒளி பெற வழி செய்தாலன்றி, நாம் எப்படிப் பரிசுத்தராக முடியும். "அயலான் கண்ணில் இருக்கும் தூசைக் காணு முன், உன் கண்ணிலிருக்கும் தூணை அப்புறப்படுத்து" என்று குரு நாதர் இயேசு கிறிஸ்துவும் இதையே தான் சொல்கிறார். நம் இருண்ட பக்கம் வெளிப்படும் போது, நாம் ஒளி முகம் திரும்புகிறோம் என்றே பொருள், எனவே நம் இருண்ட பக்கத்தை அறிந்து, நிரம்பும் ஒளியால் அதைக் களைவோம், உலகும் ஒளி மயமாகும். உலகம் இருண்டிருக்கிறது என்று உலகின் மீது பழி சுமத்தி, நம் இருண்ட பக்கத்தை ஒளி முகம் திருப்பாமல் மறைத்தால், உலகம் நிச்சயம் மாறாது. முதலில் நாம் திருந்த வேண்டும், பிறகே உலகம் திருந்தும். அண்டத்தையும் அணுவையும் சமன்படுத்திய அருமையான உம் பின்னூட்டத்துக்கு நன்றி இளசு, அடுத்த சென்னைக் கூட்டத்தில் உம்மை சந்திக்கும் பேராவலில் உங்கள் நண்பன்

நாகரா
08-07-2009, 03:51 AM
சுத்த மாயையில் இருந்து கொண்டு
அசுத்த மாயையில் உலகை அழுத்துகிறேன்!
மலத்தின் மீது சத்துவச் சந்தனம் பூசி நான் உண்டு
நாறும் ராஜசத் தாமச மலத்தை உலகுக்கு உண்ணத் தருகிறேன்!
சச்சிதானந்தம் போல் தோன்றும் மாயப் பூச்சே முகமாகப்
பொய்க்குரு நான் மெய்க்குரு போல் நடிக்கிறேன்!

நாகரா
12-07-2009, 03:48 AM
என் உள்ளே இருப்பதென்னவோ
காம வக்கிரங்கள்!
ஊருக்கு உபதேசஞ் செய்கிறேன்
காதல் மட்டும் போதுமென்று!

உள்ளே நான் ஞான சூன்யம்
ஊருக்கு உபதேசிக்கிறேன்
மெய்ஞ்ஞானம்!

உள்ளே விஷம் நிறை
வஞ்சக் கரு நாகம்!
பேருக்கு நல்ல பாம்பெனும்
வெளி வேஷம்!

நாகரா
13-07-2009, 05:13 AM
அருட்ஜோதிக் கம்பம்
என் முதுகடி கடந்துப்
பாதந் தொட்டு
அன்னை பூமியில்
வேகமாய் இறங்குகிறது!
என் இருண்ட பக்கம்
யாவருங் காண
வெளிச்சத்திற்கு வருகிறது!

அருள் வெள்ளம் பொழிகிறது!
என் மெய்யெங்கும் அது பாய்கிறது!
என் இருண்ட பக்கமும்
அதன் அரவணைப்பில் வருகிறது!

நாகரா
15-07-2009, 10:22 AM
பெரும்பாலோர் தலை வைத்தும் படுப்பதில்லை
ஆன்மீகம் பக்கம்!
அதற்கான மூல காரணம்
என் இருண்ட பக்கம்!

இறைநேசன்
15-07-2009, 10:55 AM
அவரவர் தாங்கள் முதலில் திருந்தாமல் அடுத்தவரை குறை கூறுவதில் பலனில்லை என்ற அருமையான கருத்தை அழகான கவிதை வரிகளில் தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி ஐயா!

நம் கண்ணுக்குள் உத்திரத்தை வைத்துக்கொண்டு பிறர் கண்ணில் உள்ள துரும்பை சுட்டிகாட்டுவது அயோக்கியத்தனமே!

எல்லோர் மனதுக்குள்ளும் இருண்ட பக்கங்கள் இருக்கிறது அதை இறை வெளிச்சத்தால் நிரப்பினாலன்றி இவ்வாழ்வில் பயனேதுமில்லை!

நமக்குகிடைக்கும் ஒவ்வொரு தண்டனையும் நம்முடைய குற்றத்தினாலேயன்றி வேறு யாருடைய தவறினாலும் அல்ல! நாம் சரியானால் எல்லாமே சரியாகிவிடும்! பிறரை எவ்விதத்திலும் குறை கூறுவது ஏற்புடையது அன்று என்றுணர்கிறேன்!

நன்றி!

நாகரா
16-07-2009, 03:34 AM
அருமையானதோர் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றி இறைநேசன் அவர்களே!

"மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது"(கை வசமிருக்கிறது - Repent ye for the Kingdom of Heaven is at hand) என்ற நம் குரு நாதர் இயேசு கிறிஸ்து அவர்களின் வேதாகம வாக்குப் படி, இருண்ட பக்கத்திலிருந்து, நம் மனத்தை ஆண்டவரின் ஒளி முகத்துக்குத் திருப்பித் திருந்துவோம்! பிறரை நோக்கிப் பாவி என்று தீர்ப்புக் கூறு முன், முதலில் நம் பாவங்களைக் கழுவி உத்தமராவோம், அனைவரையும் பரம பிதாவின் அன்புப் பிள்ளைகளாய்க் கண்டு இருதயந் திறந்து நேசிப்போம்!

நாகரா
18-07-2009, 03:57 AM
இலங்கையில் இனவெறி
அலங்கோலம் தலை விரித்தாட
என் நாகரிக முகத்தால்
மூடியிருக்கிறேன்
என் இருண்ட பக்கம்

நாகரா
19-07-2009, 03:54 AM
"நான்" எனும் தன்ஞானம்
ஒரு சிறிதும் புரியாத நாயேன்
கூச்சமின்றி போதிக்கிறேன்
நான்மீகம்!

நாகரா
20-07-2009, 05:11 AM
பளிங்கில் தெரியும் நாகரிக முகம்!
ஒளிந்திருக்கும் நயவஞ்சக மிருகமே
நிஜம்!

நாகரா
21-07-2009, 01:04 PM
சக்கரங்களில் செருகலிட்டு(Tapping the Chakras)
தந்திரமாய்ச் சத்தித் திருட்டு!(Draining of Energy)
அமர்வதோ குரு பீட மேல் தட்டு!

நாகரா
22-07-2009, 04:36 AM
உதடுகள் முணு முணுக்கும்
"ஹரே ராமா ஹரே கிருஷ்ணா"
முகத்தில் பக்தி அப்பி!
அகத்திலென்னவோ அதே துவைதம்
"நான் வேறு ராமன் வேறு
நான் வேறு கிருஷ்ணன் வேறு"

நாகரா
24-07-2009, 01:56 AM
மெய் வீட்டில்
மூலாதார முதுகடியில்
வாழுங் கணபதியை
மொத்தமாக உதாசீனஞ்
செய்து விட்டுப்
பொய் வீட்டில்
தடபுடலாய் கணபதி ஹோமம்!
முகத்தில் அப்பிய
கணபதி பக்தி!
அகத்தில் என்னவோ
அஞ்ஞான இருட்டு!

நாகரா
25-07-2009, 02:11 AM
மருத்துவருக்கு மெய்யுடம்பை ஒப்படைத்தாயிற்று!
பொய்க் குருவுக்கு மனத்தை ஒப்படைத்தாயிற்று!
மூச்சை யாரிடமும் ஒப்படைக்க முடியாததால்
அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது!
மெய்யுடம்பின் நோய் தீர் மருந்தும்
மனத்தின் அஞ்ஞானந் தீர் குருவும்
வாசியென்ற உண்மை வாசியாமல்
அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது!

நாகரா
26-07-2009, 01:53 AM
புறத்தே ஆண்டவ வேடம்!
அகத்தே ஆணவக் கூடம்!
வேடத்தில் மயங்கிக் கூடுங் கூட்டம்!

நாகரா
27-07-2009, 01:41 AM
காலில் விழுஞ் சீடர்
தலையுச்சியில் செருகி(Tapping of Crown, the Sahasrar)
அஞ்ஞான வரந்தரு பீடம்!

நாகரா
28-07-2009, 02:54 AM
பொய் வீடு
வண்ணப் பூச்சு பூசிப்
என்னமாய்ப் பளபளக்குது!
(நிஜமாகவே பூசி முடிந்துப்
பொலிவுடன் இருக்கிறது
என் வீடு
இன்று!)
மெய் வீடு
களை இழந்து
உயிருக்காய்த் துடிதுடிக்குது!
(அது பட்டுப் போய்
மண்ணைத் தொட்டு
இற்றுப் போனாலும்
என் இருண்ட பக்கத்தை மறைத்த
குற்றத்திற்கு நான் ஆளாக மாட்டேன்
என்பது எனக்கு ஆறுதலே!)
வள்ளலே!
உம் ஆதரவின்றி
ஒரு கணம் நில்லுமோ
என் மெய்!
நாக புஷ்டி லேகியம்
உண்டாலும் தேராத
என் மெய்யை
ஜோதி மருந்தாலே
நீர் ஒருவரே தேற்ற முடியும்!
பெருந்தயாளர்
உம் திருவடிகள் சரணம்!
(எழுதிய நாள்: 11/02/2009)

நாகரா
29-07-2009, 01:20 AM
வருண பேத ஆரிய மாயையை
வேரோடு பெயர்த்தெறிந்த திராவிட இயக்கத்தை
நாத்திக முடை நாற்றமென்று
ஆத்திகத் திமிரில் நான் சொல்வேன்
(வருண பேதம் விட முடியா ஆத்திரத்தில்)

நாகரா
31-07-2009, 05:01 AM
இறை இல்லம் என்னும் கட்டடத்துள்
கல் முன்னே குணு குணுவென்று
மந்திரங்கள் முணு முணுப்பேன்!
கல் தொட்டுப் பூசை செயல்
என் குல உரிமையென்று
சமரசத்தை அவமதிப்பேன்!

நாகரா
01-08-2009, 04:15 AM
ஆத்திகன் நான் சமரசத்தை
எக்காலும் ஒப்ப மாட்டேன்!
நாத்திகன் சமரசச் சீர்த்திருத்தம்
செய்து "பெரியார்" ஆனதை
ஆத்திரத்தில் பொறுக்க மாட்டேன்!
வருண பேதப் பெரிய வாள்
உருவி மறைந்திருந்து தாக்கத்
தருணம் பார்த்திருப்பேன்!

நாகரா
02-08-2009, 01:05 AM
புத்த பிக்குகளின் தலைகள் கொய்த
சமணரைக் கழுவேற்றிய
படுபாதகங் கழுவாமல்
சுத்த அசைவம் நான்
சுத்த சிவ சன்மார்க்கம் பற்றி
வாய் கிழியப் பேசுவேன்
தாள் கிழிய எழுதுவேன்!
வன்பகத்தை மறைக்க
"அன்பே சிவம்" என்று
நா மணக்கச் சொல்லுவேன்!

நாகரா
03-08-2009, 02:21 AM
வட மொழி மோகத்தில்
அதைத் தேவ பாஷை என்பேன்!
தாய்த் தமிழை துவேஷித்து
அதை நீச பாஷை என்பேன்!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
தான் தோன்றி மூத்த நற்றமிழைக்
கல் முன்னே சொல்லத் தகாதென்பேன்!
தமிழில் பூசையென்றால் அடாவடி செய்வேன்!

நாகரா
04-08-2009, 03:07 AM
பொய்ச் சிதம்பரத்தில்
என் கல் நிறுவன வியாபாரம்
களை கட்ட
மெய்ச் சிதம்பர நெற்றித் திரு விழியை
மாயைத் திரை போட்டு மறைப்பேன்

இறைநேசன்
04-08-2009, 04:21 AM
புத்த பிக்குகளின் தலைகள் கொய்த
சமணரைக் கழுவேற்றிய
படுபாதகங் கழுவாமல்
சுத்த அசைவம் நான்
சுத்த சிவ சன்மார்க்கம் பற்றி
வாய் கிழியப் பேசுவேன்
தாள் கிழிய எழுதுவேன்!
வன்பகத்தை மறைக்க
"அன்பே சிவம்" என்று
நா மணக்கச் சொல்லுவேன்!


அன்பு அன்பு என்று நாளெல்லாம் பேசி
வம்பு வளர்க்கும் மனிதர்களின்
ஆழ்மன நிலையின் அகோரங்களை
அழகாக படம் பிடித்து காட்டுகிறீர்கள் ஐயா!

நன்றி தொடருங்கள்!

நாகரா
05-08-2009, 03:03 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி இறைநேசன், தொடர்கிறேன்...

நாகரா
05-08-2009, 03:04 AM
சுகாசனத்தில் அமர்ந்து
படத்திலேறி மாலை போட்டுப்
பல்லாயிரம் இல்லங்களில்
"குரு" என்னும் மேல் ஸ்தானம்
ஏறியாயிற்று!
குருடு நீங்கவும்
குருடு நீக்கவும்
சாமியார் நான்
படத்தையும்
மாலையையும்
இல்லங்களையுந்
துறந்தே ஆக வேண்டும்!
ஆண்டவ வேடம் போட்ட நான்
அடியார்க்கு அடியாராம்
ஆண்டவ நிஜத்தின் எளிமைக்கு
ஆட்படவில்லையெனில்
ஆணவக் குழி
ஆளென்னைத் தின்று தீர்த்து விடும்!
அதைப் பற்றி எனக்கென்ன கவலை!
இப்போதைக்கு குருட்டாட்டமே குறியாக
இப் போதை எனக்குப் போதுமே!
நான் குழி விழும் போது
பல்லாயிரங்கள் புடை சூழ
என்னைப் போல் எவரே விழுவார்!

நாகரா
06-08-2009, 01:29 AM
தோலுரியத் தோலுரிய
என் கண்கள் எரிகிறது
கண்ணீர் வடிகிறது!
என் வெங்காயம் தோலுரிந்து
தீரும் முன்னர்
உரிய உரியக் காட்டுகிறேன்!
உரியக் காட்டுவதை
அருகிருந்து நீ பார்த்தால்
நின் கண்களும் எரியும்!
கண்ணீரும் வடியும்!
நின் வெங்காயத் தோலுரியும்!
அன்பின் மிகுதியில்
நான் எதைச் சொல்ல!
என் இருண்ட பக்கம் பாரென்றா!
அல்லது
ஒளி அப்பிய என் முகத்தைப் பாரென்றா!
நீயே சொல்லி விடு!

நாகரா
07-08-2009, 01:16 AM
நாகரிக வெளித் தோற்றம்
உள்ளே ஒளிந்திருப்பதோ
காட்டுமிராண்டி!

நாகரா
08-08-2009, 02:54 AM
கடவுளோடிருக்கும் நேரடித் தொடர்பை
மனிதரிடமிருந்து மறைத்துத் திரை போட்டு
ஞானம் என்ற பேரில் அஞ்ஞானம் விற்கும்
மாயாஜால ஆன்மீக வியாபாரி!

நாகரா
09-08-2009, 03:41 AM
தலையுச்சியில் அஞ்ஞானக் கொக்கி
நெற்றியில் மாயாஜாலக் கொக்கி
தொண்டையில் கரும வினைக் கொக்கி
தொண்டையின் கீழ் பேத பாவ துவேஷக் கொக்கி
நடு மார்பில் தன்னிரக்க, குற்ற உணர்வுக் கொக்கி
மார்பின் கீழ் மருள் மயக்கக் கொக்கி
நாபியில் ஆணவக் கொக்கி
நாபியின் கீழ் காமக் கொக்கி
முதுகடியில் மரண பயக் கொக்கி
ஒன்பது சக்கரங்களில் செருகிய
கொக்கிக் குழாய்களின் வழியே
மெய்யுடம்பிலிருந்து உயிர்ச் சக்தியைத் திருடும்
திரிகுண மாயை!
கொக்கிகள் கழற்ற
மெய் வழியே இற(ர)ங்கும்
ஆண்டவர் சாலை திறக்கும்!
இருண்ட பக்கமும் ஒளிரும்!

நாகரா
10-08-2009, 02:22 AM
தலையுச்சி மேலே
கொக்கிகள் கழற்றும்
தந்திர அருட்பொறி
ஆண்டவர் கரத்தில்
கூப்பிடு தூரத்தில்!
கூப்பிட்டதும்
மெய்க்குள் இற(ர)ங்கும்!
இருண்ட பக்கமும்
தெருண்டே விடியும்!

நாகரா
11-08-2009, 02:59 AM
தான் போட்ட கொக்கிகளில்
தானும் மாட்டிக் கொண்டிருப்பதை
அறியாது மோசம் போன பொய்க்குரு!

நாகரா
12-08-2009, 03:21 AM
மன இதம் அறவே இல்லை
மொழிப் பற்று
இனப் பற்று
நாட்டுப் பற்று
என்ற போர்வைகளால்
என் இருண்ட பக்கத்தை மூடிக் கொண்டு
மனிதனைப் போல் உலவும்
அதி பயங்கர தீவிரவாதி
நான்!
நாகரிகப் பூச்சுரிந்தால் தானே
என் காட்டுமிராண்டித் தோல்
புலப்படும்!

நாகரா
13-08-2009, 01:59 AM
வெளியே
பயங்கரத் தீவிரவாதி மடிந்தான்
என்ற நிம்மதிப் பெரு மூச்சு!
உள்ளே
மடிந்தவனுக்கு முழு முதற் காரணமான
அதி பயங்கரத் தீவிரவாதியோ
இன்னும் வாழ்கிறான்!
நாளொரு மிருக மேனியும்
பொழுதொரு நாகரிக வண்ணமுமாய்
அமோகமாய் வளர்கிறான்!

நாகரா
14-08-2009, 01:25 AM
உள்ளே ஒளிந்திருக்கும்
சாத்தானைச் சாட மனமின்றி
வெளியே படர்ந்திருக்கும்
அவன் சாயலைச் சாடுகிறேன்!

நாகரா
15-08-2009, 01:17 AM
உள்ளே என்னில் ஒளிந்து
சதி செய்யும் எத்தனைப் பிடித்து
அன்பாலே அவனைத் திருத்தப்
படு பயங்கரத் தீவிரவாதியுஞ்
சித்தராய்த் தெரிகிறது
எனக்கு!
என் இருண்ட பக்கம் விடிய
என்னைப் பித்தனென்கிறது
உலகம்!
நேசத்தைத் தவிரக் கைவசம்
வேறெதுவுமின்றிச் செய்கிறேன் நான்
கலகம்!
அதிசயமாய்ப் பரிமாறுகிறது
உலகம்!

நாகரா
16-08-2009, 12:06 AM
வெளியே தெரிவது
உள்ளிருப்பதன் பிம்பம்!
கோர உலகின் காரணம்
என் இருண்ட பக்கம்!
உலகப் பளிங்கில்
பிம்பத்தைத் திருத்த
ஒளி முகம் திரும்புமா
என் இருண்ட பக்கம்!

நாகரா
17-08-2009, 01:29 AM
மண்ணில் கற்பனைக் கோடுகள் போட்டு
ஒன்றே குலமாம் மனிதத்தைப்
பல்வேறு நாடுகளாய்க் கூறு போட்டு
எல்லையில்லா அன்பைத்
தொல்லை செய்யும் வன்பாய்த் திரித்துக்
கொல்லும் படைகளால் மெய்களைச் சிதைத்து
இருதயத் திரு பூமியை
இரத்தச் சகதியாய் உயிரறச் செய்யும்
என் இருண்ட பக்கம்

நாகரா
18-08-2009, 02:09 AM
உன் அவலத்துக்கு மூல காரணமான
என் இருண்ட பக்கம் மறைத்துத்
தவ வேடம் போடும்
கில்லாடி நான்!

நாகரா
24-12-2010, 02:48 PM
வாழ்த்தும் நெஞ்சம்
ஆழ்ந்த உறக்கத்தில்.
காழ்ப்பில் அழுத்தும்
கார மனத்தின்
தீர்க்க விழிப்பை
வாய் திறவாமல்
மூடி மறைக்கிறேன்.

கௌதமன்
24-12-2010, 03:22 PM
தன்னிலும், பிறரிலும், இப்பேரண்டத்தின் ஒவ்வொருத்துகளிலும் நீங்காதிருப்பது ப்ரம்மமே என்பதை தானேவுணரும் பெருனிலையையடைந்துவிட்டால் உள்ளிலும் வெளியிலும் மருள வைக்கும் இருள் விலகி ஞான ஒளிப் பரவிடுமே. பிறப்பில்லாப் பேறுநிலை அடைந்திட நல்வழிக் காட்டுவதும் அவ்வொளிதானே!

நன்றி நண்பர் நாகரா!

கௌதமன்
24-12-2010, 04:41 PM
வட மொழி மோகத்தில்
அதைத் தேவ பாஷை என்பேன்!
தாய்த் தமிழை துவேஷித்து
அதை நீச பாஷை என்பேன்!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
தான் தோன்றி மூத்த நற்றமிழைக்
கல் முன்னே சொல்லத் தகாதென்பேன்!
தமிழில் பூசையென்றால் அடாவடி செய்வேன்!


கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்

நாகரா
25-12-2010, 12:35 AM
தன்னிலும், பிறரிலும், இப்பேரண்டத்தின் ஒவ்வொருத்துகளிலும் நீங்காதிருப்பது ப்ரம்மமே என்பதை தானேவுணரும் பெருனிலையையடைந்துவிட்டால் உள்ளிலும் வெளியிலும் மருள வைக்கும் இருள் விலகி ஞான ஒளிப் பரவிடுமே. பிறப்பில்லாப் பேறுநிலை அடைந்திட நல்வழிக் காட்டுவதும் அவ்வொளிதானே!

நன்றி நண்பர் நாகரா!
ஆம், கௌதமரே! பிரம்ம ஒளி பிரமை இருளை நிச்சயம் நீக்கி விடும்!

நாகரா
25-12-2010, 12:37 AM
கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்
அருமையான பின்னூட்டக் கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் கௌதமரே!

நாகரா
25-12-2010, 01:03 AM
மனந்தான் தூற்றும்
வாயோ போற்றும்
இருதய கனம்
ஒரு சிறிதும்
இல்லாத கபடன் நான்

நாகரா
29-12-2010, 10:35 AM
இருதயம் மறைக்கும்
என் இருண்ட பக்கம்
ஒளிவு மறைவின்றி
உம் முன் வைத்தேன்
கல்லெறியும் முன்
கொஞ்சம் நீவிர்
உம் உள்ளேயும் பாரீர்

நாகரா
30-12-2010, 10:27 AM
ஆணவப் பேயன் நான்
ஆண்டவர் ஆளென்பேன்
ஏமாறாதீர்!

பாலகன்
30-12-2010, 10:48 AM
நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று புரிகிறது :D

நாகரா
30-12-2010, 11:52 AM
நானார் புரிந்தால் ஆளார் உரிவார்
ஊனே ஒளிர ஒளிவார்

உம் புரிதலுக்கு நன்றி மகாபிரபு

பாலகன்
30-12-2010, 11:56 AM
நானார் புரிந்தால் ஆளார் உரிவார்
ஊனே ஒளிர ஒளிவார்

உம் புரிதலுக்கு நன்றி மகாபிரபு

உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்

இதுவும் உங்க பாடலும் ஒன்றா?

CEN Mark
30-12-2010, 04:02 PM
[QUOTE=நாகரா;423973]

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்.. அதை உணரத்தான் ஆன்மிகமும். உள் சலனத்தை சமன் படுத்தினாலே இதனை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நெடிய ஆண்மிகப்பனிகளுக்கு மத்தியில் எண்ணங்களை பதிவுசெய்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.

நாகரா
31-12-2010, 09:29 AM
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்

இதுவும் உங்க பாடலும் ஒன்றா?
அப்படியும் ஒரு பொருள் கொள்ளலாம் மகாபிரபு

தலையுள் உயரும் அறிவாய், மண்ணில்
பதியத் தாழும் தயவாய், நெஞ்ச
நடுவுள் வாழும் அன்பே! நீயது
உணர்வாய் அறிவாய் உய்வாய்!

நாகரா
31-12-2010, 09:51 AM
[QUOTE=நாகரா;423973]

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்.. அதை உணரத்தான் ஆன்மிகமும். உள் சலனத்தை சமன் படுத்தினாலே இதனை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நெடிய ஆண்மிகப்பனிகளுக்கு மத்தியில் எண்ணங்களை பதிவுசெய்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.
அன்பே அண்டமாய் அகண்டது அதுவே
மெய்யாம் பிண்டமாய்த் திரண்டது அதனுள்
உய்ந்தே உயிராய் ஒளிந்தது அகத்தின்
உள்ளே பொன்றா துள்ளது

கருத்தாழமுள்ள உம் பின்னூட்டம் கிடைக்கப் பெற்றதும் என் பாக்கியமே, நன்றி சென் மார்க்

நாகரா
31-12-2010, 10:31 AM
பெண்ணை வாலையென்பேன்
கண் முழுக்க காமாந்தகாரகன்
நான்
(வாலை = ஞானத் தலைவி)

Hega
31-12-2010, 10:33 AM
பெண்ணை வாலையெனயுணர்பவன் அவளை விட ஞானியாவான் நாகரா..

பெண்ணை ஞானியென உணர அவன் ஞானியானால் தன இயலும்.
அஞ்ஞானியால் அது இயலாததே... நாகரா

நாகரா
31-12-2010, 10:46 AM
வாயால் வாலை என்று சொல்லும்
நோயாங் காமந் தீரா
சாமியார்களைச் சாடவே
நாகத்தின் இந்த உத்தி
வாலை ஏகா!

Hega
31-12-2010, 10:53 AM
சரிதான் நாகரா

உளளொன்று வைத்து புறமொன்று பேசும்
சாமியார்களை இனம் காண்பதே ஞானபெண்டீருக்குரிய ஞானம்.

சாடலால் வார்த்தைகளை சாட்டையாக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.


இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் நாகரா..

நாகரா
31-12-2010, 11:14 AM
நன்றி, உமக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏகா

நாகரா
06-01-2011, 10:38 AM
ஐயா (ஏகன்) பேர் சொல்லி
ஊரை எய்க்கும் அனந்த*
அய்யாமாரில் நானும் ஒருவன்