PDA

View Full Version : சுத்த சைவ பிரியாணி!(தமிழ் மன்ற சந்திப்பு)



நாகரா
05-07-2009, 02:19 AM
தமிழ் மன்ற அன்பர்கள் அனைவருக்கும் நேற்று பரிமாறப்பட்ட சுத்த சைவ பிரியாணி!

சக்கர போஜனம்

1. மணியா நேசம்(தலையாயது இது நிஜமாகவே!)
இருதய ஊட்ட சத்து - அனாகத சக்கரம் - நடு மார்பு
2. ஆரென் நாதம்(The "OM" Horn) - சுருண்ட பாம்பை எழுப்பும் மகுடி - மூலாதார சக்கரம் - முதுகடி
3. தயா மனோ பாவம்(தமிழ் மன்றக் காமராசர்) - ஆன்மீக செயல்பாடு - மணிபூரக சக்கரம் - நாபி
4. தக்ஷிணா போதம்(நம்ம daks தானுங்கோ) - தொண்டையை நனைக்கும் மது - விசுத்தி சக்கரம் - தொண்டை
5. மதி விவேகம் - திரு விழி திறக்கும் சாவி - ஆக்கினைச் சக்கரம் - நெற்றி நடு(நெற்றிக் கண்)
6. மீரா கானம்(கண்ணன் வேதமும் இதில் உள்ளடக்கம்) - சிவ-சக்தி காதல் - சுவாதிட்டானம் - நாபியடி
7. நாக ஞானம்(Be Ye Wise as Serpents! - நம்ம இயேசு சொன்னதுங்க!) - தலையுச்சித் தாமரை - சஹஸ்ராரம்(இதென்னடா புதுத் தலைன்னு குழம்ப வேண்டாம், இருதயமே(மணியா நேசம்) எப்பவும் நம்ம தல!
(8. தாமரை வாசம் - தமிழ் மன்றச் சேற்றில் பூத்திருக்கும் நம்ம தாமரை எருமையார் மன்ற சந்திப்பின் போது தம் யோக ஆற்றலைப் பயன்படுத்தி, நம் ஊனப் புலன்களுக்குப் புலப்படாமல் ஒளிந்திருந்து கலந்து கொண்டதாக நாகத்துக்கு நண்பர்களான நாயார்கள் மோப்பம் பிடித்துச் சுடச் சுடப் பகிர்ந்த செய்தியையும், பிரியாணி மணங்கூடப் பகிர்கிறேன் - 8 என்பது விஞ்ஞான மெய்ஞ்ஞானப் பாலம் - நம்ம தாமரையார் இத்தகைய பாலம் ஒன்றைப் போட்டுப் புதியதோர் உலகம் படைத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி!)

நேற்றையத் தமிழ் மன்ற சந்திப்பில் அலை பேசியில் அளவளாவிய அனைத்து அன்பர்களுக்கும் நன்றி, நம்மிடை நேசம் நமக்கு எப்போதுமே தலயாயதாய் இருக்கட்டும்!

மன்மதன்
06-07-2009, 10:29 AM
அருமை நாகரா..

உங்களிடம் அலை பேசியில் பேசியது மகிழ்ச்சி..!!

நாகரா
06-07-2009, 10:34 AM
உம்மோடு அளவளாவியதில் எனக்கும் மகிழ்ச்சியே, நன்றி மன்மதன், இணைந்திருப்போம் இருதய இணையத்தில் அன்பெனும் அகலப் பட்டையாம் துண்டிக்கப்படாத் தொடர்பில்!