PDA

View Full Version : பொய்



கீதம்
03-07-2009, 11:19 PM
உனக்கும் எனக்குமான
அந்தரங்கப் புரிதல்களை
அதீத மிகைப்படுத்தல்களுடன்
நான் பிரகடனப்படுத்தும்
தருணங்களிலெல்லாம்
அறிந்தோ அறியாமலோ
உன்னிடமிருந்து புறப்படும்
எனக்கான புறக்கணிப்புகள்
என் பொய்களை அம்பலப்படுத்தி
என் விழிநீரை வேடிக்கைப்பொருளாக்குகின்றன.

அமரன்
04-07-2009, 08:52 AM
விழிகள் போகப்பொருளும் அல்ல*
விழிநீர் வேடிக்கைப் பொருளும் அல்ல.