PDA

View Full Version : 4 நாள் டெஸ்ட் போட்டி



அறிஞர்
03-07-2009, 02:13 PM
காலத்திற்கேற்ப மாற்றங்கள் என்பது போல்.. கிரிக்கெட்டில் 6 நாள் டெஸ்ட், 5 நாள் டெஸ்ட் ஒரு நாள் ஓய்வு என மாறி.... பின் தொடர் 5 நாள் போட்டியானது.

60 ஓவர் ஒரு நாள் போட்டி 50 ஓவராக மாறியது.

பின் 20 ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு.. பிரபலமானது.

தற்சமயம்... டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றத்தை ஐசிசி கொண்டு வர இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் மார்கன் சமீபத்தில் அளித்த பேட்டியில்

5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டி இனி 4 நாட்களாக குறைக்கப்படும்.

போட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுவதோடு

வண்ண உடை,

கலர் பந்து

ஆகியவை சேர்க்கப்படும் என்றார்.

"டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வீரர்களின் உண்மையான திறமை வெளிப்படும். இதில், சிறப்பாக விளையாடும் வீரர்களே ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசத்துவர். டி20 யைப் போல டெஸ்ட் போட்டியிலும் அதிரடி மாற்றங்களை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஐசிசி நினைக்கிறது. இது ஆபத்தானது. 5 நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டி பல சமயங்களில் டிரா ஆகிறது. இப்படி இருக்க போட்டியை 4 நாட்களாக குறைத்தால் எல்லா போட்டியும் டிராவில்தான் முடியும். அது ரசிகர்களை மேலும் எரிச்சலடையச் செய்யும்." மியான்தத் கூறியுள்ளார்.

தங்களின் எண்ணம் என்ன?? கருத்துக்களை கொடுங்கள்.