PDA

View Full Version : முதன் முதல்..!!



பூமகள்
02-07-2009, 09:01 AM
முதன் முதல்....!!

http://img34.picoodle.com/img/img34/2/7/2/poomagal/f_babypicm_5a0124f.jpg



முதல் பள்ளி ஆயத்தம்,

முதல் கல்லூரி நுழைவு,

முதல் நேர்முகத் தேர்வு,

முதல் கிட்டிய வேலை,

முதல் மாதச் சம்பளம்,

முதல் வெற்றி,

முதல் காதல்,

முதல் முத்தம்,

முதல் ஸ்பரிசம்..

முதல்களின் நீளங்கள்

முடிவிலியாகினும்..

உன் மென்பஞ்சு

கால் கொண்டு

என் வயிற்றில் நீ தந்த

முதல் உதைதனை

நானுணர்ந்ததுக்கு ஈடாகுமா??!!

http://img31.picoodle.com/img/img31/2/7/2/poomagal/f_motherholdim_b4a05fe.jpg

என்னுள் வளரும் இளம்பூவே..!!

உனை உணர்ந்த கணத்தில் தான்

நான் முழுதாகினேன் கண்ணே...!!

samuthraselvam
02-07-2009, 09:05 AM
இது உண்மையிலயே வெறும் கவிதையா? இல்லை உண்மையான நடப்பா? எப்படியாகினும் வாழ்த்துக்கள்...பூ அக்கா..

நேசம்
02-07-2009, 10:46 AM
தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் கவிதை.ஏனென்றால் ஒரு பெண் முழுமையாக உணரும் தருணம்.பாராட்டுகள் சகோதரி

அமரன்
02-07-2009, 11:01 AM
உணர்வுபூர்வமான கவிதை. வாழ்த்துகள்.

நாகரா
02-07-2009, 11:10 AM
இந்த
முதன் முதல்
தாயன்பின்
முழு முதல்!

அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் பூ மகள்

ஆதவா
02-07-2009, 04:11 PM
மனிதனுக்கு மனிதன்
உதைத்துக் கொள்வது
பெரிய விஷயமல்ல

அதற்கு நன்றாய்
பயிற்சி எடுத்திருக்கிறான்
கருவறையில்..
- எஸ்.விஜயன்
-------------------------
கருவறை, புனிதன், தாலாட்டு, வாழ்த்து, இன்னபிற இத்யாதிகளைத் தாண்டி நிகழ்நிலையை எடுத்தியம்பும் கவிதை வட்டங்களினுள் இதனையும் அடக்கிக் கொள்ளலாம்.



முதல்களின் நீளங்கள்
முடிவிலியாகினும்..

அடுத்த நொடியில் நகர்ந்து செல்லும் பயணம் முதல்களின் சாலையில்தான். முதல்'கள் எப்பொழுதுமே முடிவுகளாகவே

இருக்கின்றன. ஒவ்வொரு முதல்'களின் தொகுப்பு அனுபவமாக இருக்கிறது. முதல் என்பது ஆச்சரியத்தை ஆரம்பிப்பதாகவும், அதன் முடிவு சலிப்பின் மிகுதியைத் தேக்கி வைத்திருப்பதாகவும் இருக்கிறது.

தொடர்ந்து இடப்படும் பிள்ளையின் முத்தம் கூட சில சமயங்களில் தாய்க்கு சலிப்பாகலாம்.


முதல் வாங்கிய வேலை,

இந்த வரியை சரிசெய்யுங்கள்.

அன்புடன்
ஆதவா

இளசு
02-07-2009, 05:19 PM
அன்பு பூ....

பூவாகிக் காயாகி கனிந்த மரம்...
என ஒரு பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும்..

இயற்கை காட்டும் வட்டப்பாதையின்
முக்கிய கட்டம் - தாய்மை!

அது தரும் முக்கிய உணர்வு - முழுமை!


வாழ்க தாய்மை!


வாழ்த்துகள் பூ!

வசீகரன்
03-07-2009, 05:24 AM
அடடா பூமகள் ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கிறதே..... வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல கவிதைக்கும்..... தாய்மையின் மென்மையை அழகாக சொல்லியதற்க்கும்....

கா.ரமேஷ்
03-07-2009, 06:23 AM
அழகான கவிதை... குழந்தையைப் போலவே....
முதல்கள் எப்போதுமே இனிமையானவைகள்தான் அதிலும் தாய்மை மிக சிறந்த ஒன்று வாழ்த்துக்கள்...!

பா.ராஜேஷ்
03-07-2009, 04:48 PM
தாய்மையின் மேன்மையை கூறும் அருமையான கவிதை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

சசிதரன்
04-07-2009, 03:59 PM
குழந்தையின் ஸ்பரிசம் உணரும் தாயின் உணர்வை சொல்லும் அழகிய கவிதை... வாழ்த்துக்கள்...:)

கீதம்
04-07-2009, 10:26 PM
குழந்தையின் பூம்பாதம் உதைப்பது என்பதும் ஒர் முதல்தான். அதிலேயே முழுமையடைந்துவிட்டால் எப்படி? இன்னும் பல முதல்கள் நீங்கள் அனுபவிக்கக் காத்திருக்கின்றன. வாழ்த்துகள் பூ மகள்! அன்புடன் கீதம்.