View Full Version : மன்றத்தின் புதிய பகுதி
அமரன்
01-07-2009, 07:25 PM
இனிய நட்புகளே!
நாளடைவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலும் பட்டறிவின் அடிப்படையிலும் நமது யோசனைகளின் அடிப்படையிலும் மன்ற விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பரஞ்சோதி அண்ணனின் யோசனையின் பிரகாரம் உதவும் கரங்கள் எனும் புதிய பகுதி தாமரை மன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மன்றப் பொதுவிதிகளுக்கும் உதவுங்கரங்கள் பகுதியின் வரைமுறைகளுக்கும் அமைவாக நீங்கள் தரப்போகும் புரிதலுடனான ஒத்துழைப்பு நன்றி.
தமிழ்மன்றம் சார்பாக
அமரன்
பா.ராஜேஷ்
01-07-2009, 07:33 PM
பாராட்டிற்குரிய முயற்சி. அருமையான யோசனை பரஞ்சோதி அண்ணா. உறவுகள் அனைவரும் உண்மையாய் செயல்பட்டு பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
நல்ல ஐடியாவை இங்கே கொடுத்த பரஞ்சோதி அவர்களுக்கு என் நன்றிகள் பல.
அறிஞர்
01-07-2009, 09:00 PM
அனைவரும் சரியான முறையில் பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது...
நல்ல ஆலோசனை சொன்ன இளவல் பரம்ஸூக்கும்
செயற்படுத்திய நிர்வாகக்குழு நட்புறவுகளுக்கும்
நன்றியும் பாராட்டும்!
நேசம்
02-07-2009, 05:26 AM
மன்ற உறவுகள் பயன்படும் வகையில யோசனை தந்த அண்ணனுக்கும். அமல்படுத்திய நிர்வாகத்துக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்
samuthraselvam
02-07-2009, 06:47 AM
அருமையான யோசனை சொன்ன பரம்ஸ் அண்ணாவுக்கு என் நன்றிகள்...
நிச்சயம் இந்தப் பகுதியினால் பலரும் பயன் அடைவார்கள்...
இந்தப் பகுதியை உருவாகிய நிர்வாகத்தினருக்கும் என் நன்றி...
பரஞ்சோதி
02-07-2009, 01:40 PM
என் முதல் நன்றியை நிர்வாக நண்பர்களுக்கும், விதிமுறைகள் தொகுத்த அமரன் தம்பி மற்றும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
நாம் அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை இச்சமுதாயத்திற்கு செய்வோம். மன்றத்தின் பெயரில் யாருமற்ற ஒரு குழந்தையின் கல்வி செலவையாவது நாம் பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பல இருக்கின்றன.
அது பண உதவி தான் என்றில்லை, நல்ல அறிவுரைகள், உதவி வேண்டுவோரின் விபரங்கள், உதவும் முறைகளை விளக்கும் கட்டுரைகள் குறிப்பாக ரத்த தானம் செய்வதன் நன்மைகள், இறந்தும் உடல் தானம் செய்வோரின் கட்டுரைகள், கண் தானம் செய்ய வேண்டியதன் அவசியங்கள் போன்றவற்றையும் கொடுப்போம்.
ஓவியன்
03-07-2009, 05:07 PM
ஆலோசனை தந்த பரம்ஸ் அண்ணாவுக்கு அதனை நல்ல முறையில் அமூலுக்கு கொண்டு வந்த மன்ற நிர்வாகத்தினருக்கு என் மனதார்ந்த நன்றிகள்..!!
விகடன்
05-07-2009, 06:52 AM
நல்லதிட்டத்துடன் அமைக்கப்பட்ட பகுதிதான். மேற்படி பகுதிக்கு வித்திட்ட பரஞ்சோதி அண்ணாவிற்கும் மேற்கொண்டு மெருகூட்ட பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
மஸாகி
05-07-2009, 11:40 AM
பயனுள்ள முயற்சிகள் - பாழாவதில்லை..
நட்புடன் - மஸாகி
05072009
நாகரா
05-07-2009, 12:02 PM
அன்பெனும் பரஞ்ஜோதி மேலே தயவெனும்
பண்பினில் நீயவர்உரு கீழே
அருமையான திட்டம் அமோகமாகச் செயல்பட வாழ்த்துக்கள்
kalaiselvan2
06-07-2009, 05:13 PM
இந்த எளியவனின் வேண்டுகோளுக்காக தமிழ் மன்றத்தில் ஒரு புதிய பகுதியை உருவாக்கிய நிர்வாகத்தினருக்கும், அதற்கு பேருதவியய் இருந்த பரஞ்சோதி அண்ணா அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் கோடி நன்றிகள்.அதே போல் அறிஞர் அவர்கள் நான் அனுப்பிய புகைப்படங்களை மன்றத்தில் பிரசுரித்து அப்பொருட்களை மற்றவர்கள் வாங்கினால் அது அந்த பெண்ணிற்கு மிக்க உதவியாய் இருக்கும்.
நன்றிகளுடன்
கலை
மிக அருமையான யோசனை கொடுத்த நண்பருக்கு நன்றிகள் மிகவும் வரவேற்க்கப்பட வேண்டிய பகுதி
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.