PDA

View Full Version : சானியாவை விட சாய்னா சிறந்தவர்



நேசம்
01-07-2009, 11:07 AM
சானியாவை விட சாய்னா சிறந்தவர்


இந்தியா நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உலக அளவில் மிகவும் பிரபலமான வீராங்கணையாக வலம் வரலாம்.ஆனால் அவரை விட இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வாலே சிறந்தவர் என்று மதிப்பிடுகிறார் பேட்மிண்டன் ஜாம்ப்வான் பிரகாஷ் படுகோனே.

இருவரையும் ஒப்பிட்டு அவர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் "தரவரிசை அடிப்படையில் அவர்களை எடை போட நான் விரும்பவில்லை.ஏனெனில் விருப்பப்படும் குறிப்பிட்ட போட்டிகளை தேர்வு செய்து விளையாடுகிறார்கள்.அதன் அடிப்படியில் தான் தரவரிசை அமைகிறது.ஆனால் சானியா மிர்ஸாவைவிட சாய்னா நெக்வலே தரவரிசையில் முன்னணியில் உள்ள நிறைய வீராங்களை வீழ்த்தி இருக்கிறார்.

எனவே சிறப்பான செயல்பாட்டில் சானியாவைவிட சாய்னாவே உயர்ந்து நிற்கிறார். என்பது என் கணிப்பு " என்றார்.மேலும்

"சாய்னா தற்போது உலக தரவரிசையில் 7 வது இடம் வகிக்கிறார்.முதலிடத்திற்கு முன்னேற்ற கூடிய எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது.இதற்கு அவர் கடின உழைப்பையும், பார்மையும் தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டியது முக்கியமாகும் ஏனும் கூறினார்.

நன்றி : தின*ந்த*ந்தி

பரஞ்சோதி
01-07-2009, 12:18 PM
பிரகாஷ் படுகோன் இப்படி சொல்லியிருப்பது சரியல்ல.

எந்த ஒரு வீரரையும் மற்றவரோடு ஒப்பிடுவது தவறு, அதிலும் இரு வெவ்வெறான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

சானியா அவரது துறையில் சாதித்திருக்கிறார், அதே போல் தான் சாய்னா.

தன்னுடைய துறை என்பதற்காக தூக்கி பேசுவது அழகு அல்ல என்பது என் கருத்து.

அய்யா
10-07-2009, 11:18 AM
ஒப்பீடே தவறு!

சானியாவின் சாதனை வரலாறு பெரியது. சாய்னா நேவால் தற்போதுதான் முன்னேறி வருகிறார்.

பால்ராஜ்
31-08-2009, 11:15 AM
இரண்டு பேரும் வேறு வேறு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஒப்பிடுவதே சிரமம்.

இருவரும் சிறக்க நம் வாழ்த்துக்கள்.

நேசம்
31-08-2009, 04:58 PM
நிச்சயமாக இருவரையும் ஒப்பிடுவது தவறுதான்.ஆனால் ஊடகங்கள் சானியாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாய்னாவுக்கு கிடைக்க வில்லைஎன்பது தான் நமது கருத்து .எனென்றால் சாய்னாவும் தனது விலையாட்டில் பல முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளார்

அறிஞர்
31-08-2009, 08:31 PM
இருவரும் அவரவர் துறையில் பிரகாசிக்கட்டும்...
ஒப்பிடுவது... நல்ல விசயமல்ல..

ஓவியன்
01-09-2009, 04:05 AM
சாய்னா அண்மையில் நடந்த பூப்பந்து போட்டிகளில் சோபிக்க தவறி விட்டாரே, அதற்கு அவரது சுகவீனம் காரணமாக கூறப்பட்டாலும், அவர் இன்னமும் தன்னை மெருகேற்றிக் கொண்டு உலகின் முதன்மையாளராக தன் துறையில் பிரகாசிக்க என் வாழ்த்துகள்...

arun
05-09-2009, 08:37 AM
இருவரும் வேறு வேறு விளையாட்டு விளையாடுகிறார்கள் அப்புறம் எப்படி ஒப்பிடுகிறார்? புரியவில்லை