PDA

View Full Version : காணாமல் போகின்ற பார்வையிட்ட/பதிலிட்ட திரிகள்..??!!!



பூமகள்
01-07-2009, 10:00 AM
சமீபகால மாற்றத்துக்கு பின் சென்ற வாரம் முதல் மன்றத்தின் நியூ போஸ்ட் சுட்டியை அழுத்தினால் புதிய திரிகள் மேலெழும்பும்.

நாம் பதிலிட்ட பின் மீண்டும் நியூ போஸ்ட் சுட்டியை அழுத்தினால் நாம் ஏற்கனவே பதிலிட்ட திரிகள் காணாமல் போகின்றனவே...

முன்பெல்லாம் அவை போல்ட் இல்லாமலும், மற்ற பார்வையிடாத திரிகள் போல்டாகவும்(தடித்த எழுத்துகள்) காட்சியளிக்கும்.

நாம் எவற்றுக்கெல்லாம் பதிலிட்டோம்.. அது சரியாக பதியப்பட்டிருக்கிறதா என்று உடனே தெரிய இவ்வழி உபயோகமாக இருந்தது.. இப்போது மாறிவிட்டதே..

மீண்டும் இதை சரி செய்வீர்களா??

அன்புரசிகன்
01-07-2009, 12:05 PM
அந்தவசதி இன்னமும் நம் மன்றில் உள்ளது. ஆனால் அது புதிய திரிகள் பகுதியில் இல்லாது Quick links>Todayposts என்பதில் உள்ளதே...

பரஞ்சோதி
01-07-2009, 12:22 PM
நன்றி அன்புரசிகன், நானும் இதை கேட்க நினைத்திருந்தேன்.