PDA

View Full Version : இர்பான் பதானுக்கு கல்யாணம்



அறிஞர்
30-06-2009, 02:58 PM
பந்துவீச்சாளர் சரண்டர் - நடன மங்கையுடன் பதான் ‘டும்டும்’


வதோதரா, ஜூன் 30-
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதர் தேவின் மகளான ஷிவாங்கியை காதலித்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது முதன் முதலாக பதானும், ஷிவாங்கியும் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இர்பான் காதல்வலையில் விழுந்துள்ளார்.

அதன்பிறகு இருவரும் பலமுறை போனில் பேசிவந்துள்ளனர். இதையடுத்து ஷிவாங்கி இந்தியாவில் வந்து பதான் விளையாடிய பல்வேறு ஆட்டங்களை நேரில் ரசித்துள்ளார். அவரது வீட்டிற்கு இரு முறை சென்று பெற்றோரையும் சந்தித்துள்ளார். எனினும் ஷிவாங்கியுடனான காதலை பதான் தொடர்ந்து மறுத்தே வந்தார். இந்நிலையில் ஷிவாங்கியுடான காதல் குறித்து பதான் மனம்திறந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் நான்தான் காதலை வெளிப்படுத்தினேன். அதை அவரும் ஏற்றுகொண்டார். வதோதராவில் இருந்தபடி ஷிவாங்கிக்கு போன் செய்து, ‘நான் உன்னை மணக்க விரும்புகிறேன்’ என கூறினேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். எங்களது காதலை குடும்பத்தினரும் ஏற்றுகொண்டுள்ளனர். விரைவில் வதோதராவில் திருமணம் நடைபெறும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் சார்ட்டட் அக்கவுன்டன்டாக உள்ள ஷிவாங்கி நடனபள்ளி ஆசிரியராகவும் உள்ளார். இந்த பள்ளிக்கு பதான் பலமுறை விசிட்டும் அடித்துள்ளாராம்.

நன்றி-தினகரன்

ராஜா
01-07-2009, 07:23 AM
வாழ்த்துகள் பதான் - ஷிவாங்கி..!

அய்யா.. இர்ஃபான் மாமனாரே..! பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற வேலையோட அங்க அடிபட்டு சாகிற நம்ம பயலுகளையும் கொஞ்சம் கவனிங்க..!

பரஞ்சோதி
01-07-2009, 12:38 PM
வாழ்த்துகள் பதான்.

கிரிக்கெட் போன்றே வாழ்க்கையில் வெற்றிகள் குவிங்க.

ஆமாம் யூசுப் அவர்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?