PDA

View Full Version : சீனா சீனாதான்...



அறிஞர்
29-06-2009, 03:11 PM
சீனாவின் தொழில்நுட்பத்தை இங்கு கண்டு ரசியுங்கள்.....

சீனாவின் ஷாங்காய் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 13 மாடி கட்டிடம் திடீரென்று தரையில் சாய்ந்தது. இதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.


http://i13.photobucket.com/albums/a282/aringar/china.jpg

aren
29-06-2009, 03:16 PM
நானும் இந்த நியூஸை இன்றைய பேப்பரில் படித்தேன். இவ்வளவு மட்டமான கட்டுமானங்களையா மக்கள் தங்குவதற்காக கட்டுவார்கள்.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில்தான் இப்படி என்றால் உள்நாட்டிலும் இதே கதிதானா? ஐயோ பாவம் அப்பாவி மக்கள்.

ராஜா
29-06-2009, 03:19 PM
சீனா மக்கள் தொகையில ஏன் முன்னணியில் இருக்குன்னு இப்போ புரியுது..!

இதே நம்ம ஊர்ல நடந்திருந்தா ஒரு 100 பேரை மேல அனுப்பி வச்சிருப்போம்தானே..!

அறிஞர்
29-06-2009, 03:20 PM
இவ்வளவு மட்டமான செயலை நான் எங்கும் பார்த்ததில்லை...

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு "மேட் இன் இந்தியா" என்று எழுதி இந்தியாவின் பெயரை அவமானப்படுத்த முயலுகிறார்கள்.

ராஜா
29-06-2009, 03:28 PM
இவ்வளவு மட்டமான செயலை நான் எங்கும் பார்த்ததில்லை...

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு "மேட் இன் இந்தியா" என்று எழுதி இந்தியாவின் பெயரை அவமானப்படுத்த முயலுகிறார்கள்.


அது வேறயா..?

என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா..!

பரஞ்சோதி
29-06-2009, 05:47 PM
சீனாவை பாரட்ட்ட தான் வேண்டும்.

பாருங்க கீழே விழுந்தாலும் கட்டடம் உடைய வில்லையே.

aren
30-06-2009, 03:02 AM
சீனாவை பாரட்ட்ட தான் வேண்டும்.

பாருங்க கீழே விழுந்தாலும் கட்டடம் உடைய வில்லையே.

அப்படின்னா, மறுபடியும் அதை தூக்கி நிறுத்திவிடலாம் என்கிறீர்களா?

தாமரை
30-06-2009, 03:06 AM
என்னப்பா, இது ரெடிமேடு அபார்ட்மெண்ட் என்பது தெரியவில்லையா?

அதாவது ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அபார்ட்மெண்ட்..

அந்த இடத்தில் நட வாங்கி வந்திருக்காங்க..

அங்க இருக்கிற தளத்தை சமமாக்கியதும் நட்டுடுவாங்க.. அபார்ட்மெண்ட் ரெடி..

நமக்கு வேண்டிய சைசுக்கு விதவிதமான சைசில் கிடைக்கும். வாங்கி வாங்கி நட்டுக்க வேண்டியதுதான்.. டெலிவரி பெரிய ஃபிளைட் மூலமா வரும்...

தூக்கி நிறுத்த ஹெலிகாப்டர் கிரேன் சர்வீஸூம் உண்டு.

இன்பா
30-06-2009, 03:46 AM
ஒருவேள ப்ளாஸ்டிக்குலேயே ரப்பர்லயோ கட்டிருப்பாங்களோ ?

அன்புரசிகன்
30-06-2009, 04:09 AM
அப்படியும் ஒருத்தன் தானே இறந்திருக்கார். அது தான் ஆச்சரியம்...? ஒருவேளை இரவு காவல்காரனோ???

பார்த்தால் குழந்தைகள் பொருத்தி விளையாடும் கட்டடம் போல் அல்லவா உள்ளது...

முறுக்கு கம்பிகள் எவற்றையும் காணவில்லையே....

மன்மதன்
30-06-2009, 04:26 AM
அப்படியும் ஒருத்தன் தானே இறந்திருக்கார். அது தான் ஆச்சரியம்...? ஒருவேளை இரவு காவல்காரனோ???

பார்த்தால் குழந்தைகள் பொருத்தி விளையாடும் கட்டடம் போல் அல்லவா உள்ளது...

முறுக்கு கம்பிகள் எவற்றையும் காணவில்லையே....

முறுக்கு நல்லா டேஸ்ட்டா இருந்திருக்குமோ என்னவோ...:rolleyes::D

நேசம்
30-06-2009, 06:29 AM
இவ்வளவு மட்டமான செயலை நான் எங்கும் பார்த்ததில்லை...
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு "மேட் இன் இந்தியா" என்று எழுதி இந்தியாவின் பெயரை அவமானப்படுத்த முயலுகிறார்கள்.
உண்மைதான் அன்பரே குறிப்பாக* ம*ருந்து பொருட்க*ளுக்கு மேட் இன் இந்தியா என்று பெய*ரிட்டு இங்கு இந்தியாவில் விற்ப*னை செய்கிறார்க*ள்

இன்பா
16-07-2009, 09:43 AM
இந்த படத்தப் பாத்தா வடிவேலுவின் டயலாக் ஒன்று நினைவுக்கு வருகிறது.

என்னான்னு சொல்லுங்க பாப்போம் :D