PDA

View Full Version : நமக்கு பிடிச்ச கணினி விளையாட்டுகள்

பரஞ்சோதி
28-06-2009, 06:35 AM
நண்பர்களே!

இது மாதிரியான திரி முன்பே மன்றத்தில் இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன். புதியவர்கள் இருப்பதால் புதிய திரி.

இங்கே நாம் நமக்கு பிடித்த கணினி விளையாட்டுகள் பற்றிய தகவல்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பரஞ்சோதி
28-06-2009, 06:35 AM
நான் கம்ப்யூட்டருக்கு அறிமுகம் ஆனது 1993ம் ஆண்டு, அப்போ நான் விளையாடியது பேசிக் என்ற மொழியில் செய்யப்பட்ட குட்டி குட்டி விளையாட்டுகள். குறிப்பாக பாம்பு மாதிரி நகரும், அது சுவற்றில் முட்டினால் பணால்.

அப்புறம் என்னால் மறக்க முடியாத கேம்ஸ் பேக்-மேன், ஏலியன் சூட்டர்.

இப்படி ஆடிகிட்டு இருந்த நான் ஆடி போன கேம்ஸ், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா.

ஆஹா! ஆஹா!

என்னமா ஒரு கேம்ஸ், எனக்கு பிடித்த கதாபாத்திரம், வாள் சண்டை, பேய், பிசாசுகள், மந்திரம், அழகான இளவரசி, விடுவேனே, சும்மா புகுந்து விளையாடியாச்சு.

அந்த ஆட்டத்தின் இறுதி கட்டம் செல்ல எனக்கு ஒரு ஆண்டு பிடித்தது.

இப்போ நீங்க சொல்லுங்க.

praveen
28-06-2009, 07:14 AM
அண்ணா அந்த கேம்ஸ் எல்லாம் இங்கே தரலாமா?.

வரிசையாக சொல்லிக்கொண்டே வாருங்கள் நானும் தருகிறேன் :).

ஆதவா
28-06-2009, 07:35 AM
கணிணி விளையாட்டைப் பற்றி ஒரு திரி ஆரம்பித்ததாக

எனக்கு ஞாபகம்...

இந்த பதிவை டைப்பும் சற்று முன்னர் நான் ஆடியது FIFA 03

TV விளையாட்டுகள்

Mario
Street Fighter
Racer,
இன்னும் பெயர் நினைவிலில்லாத விளையாட்டுகள்...

Dos விளையாட்டுகள்

Dave
Wolf
Doom (Dos Version)
Prince of persia

Race :

Road Rash
Need for Speed Hot Persuit

First Person Shooter வகை விளையாட்டுகள்

Doom 3
Doom 3 Resurrection of Evil
Spiderman
Call of Duty
Call of Duty 2
Brothers in Arms
Battle Field
Soldier of Fortune II (Double Helix)
Harry Potter and the Goblet of Fire
Hulk
Max Payne

Sports வகை :

Cricket 98, 2000, 2004, 2005,
WWE RAW

Others:

Warcraft 3 - Reign of chaoes
Age of Empires II, III

முடிக்காதவை :

GTA Vice City
GTA San Andreas

நினைவில் இருக்கும் விளையாட்டுகளின் பெயர்களை மட்டுமே கொடுத்திருக்கிறேன். இன்னும் இருந்தால் தருகிறேன்...

சிவா.ஜி
28-06-2009, 02:06 PM
எனக்கு கணினி அறிமுகமான 1983ல் DOS வகை விளையாட்டில் அப்போது விளையாடியது பில்லியர்ட்ஸ், பேக்மேன், டிக்கர்(Digger)(எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு).

அதற்குப் பிறகு அதிகம் விளையாடியது ஜ்வெல் க்வெஸ்ட், சாலிட்டர், DX-BALL, சிக்கன் இன்வேடர், பிறகு பையனுடன் சேர்ந்து விளையாடியது Age of Empire, GTA, மற்றும் சிந்பாத்.

எப்போதும் விளையாடுவது ஸ்பைடர் சாலிட்டர்.

வெற்றி
03-07-2009, 11:59 AM
ஆதவா வின் விருப்பங்களில் 80 % எனக்கும் பிடித்தவை

அப்பறம் சில போர்டபிள் விளையாட்டுகள் ( டிரேடு, ஜூமா..போல் )

ஆதவா
03-07-2009, 12:33 PM
Call of Duty [or]
Call of Duty 2

விமர்சனம் விரைவில்....

itsjai
03-07-2009, 06:01 PM
அடேயப்பா பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் ஆதவா. எனக்கு கணிப்பொறி அறிமுகமான கால கட்டத்தில் விளையாடிய விளையாட்டுகள்
பிரின்ஸ் ஆஃப் பெர்சியா
டேவ்
உல்ஃப் 3D
ஹோகாஸ் போகாஸ்
பேட்டில் செஸ்
ரோட் ராஷ்
ஜுவல் குவிஸ்ட்

இப்போதெல்லாம் நேரமில்லை.

பரஞ்சோதி
05-07-2009, 08:50 AM
தற்போதைய சூப்பர் ஹிட் கேம்மான அசாசின் கிரீட் (Assassin Creed) யாராவது ஆடி வருகிறீங்களா?

பரஞ்சோதி
05-07-2009, 08:51 AM
விமர்சனம் விரைவில்....

Call of Duty நானும் ஆடி அசந்து போயிருக்கேன்.

செம கேம்.

விமர்சனம் கொடுங்க தம்பி.

மேக்ஸ் பெய்னி????

பரஞ்சோதி
05-07-2009, 08:51 AM
ஆதவா வின் விருப்பங்களில் 80 % எனக்கும் பிடித்தவை

அப்பறம் சில போர்டபிள் விளையாட்டுகள் ( டிரேடு, ஜூமா..போல் )

இப்படி மொக்கையா சொன்ன எப்படிப்பூ?

கொஞ்சம் ஜாலியாக கதையாக எடுத்து சொல்லுங்க :)

ஜாக்
05-07-2009, 09:07 AM
அப்படியே நண்பர்கள் இந்த கேம்ஸ் இறக்குமதி செய்ய சுட்டிகள் தந்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்ல*

முக்கியமாக பிரவீன்குமார் அண்ணா எனது கோரிக்கையை கொஞ்சம் செவி சாய்ப்பீராக*

பரஞ்சோதி
05-07-2009, 09:15 AM
ஜாக் டோரண்ட் வழியாக கேம்ஸ் தாராளமாக இறக்கலாம், அதே நேரம் வைரஸ்கள் கூட தாராளமாக இறங்கிடும் என்று நினைக்கிறேன்.

நான் Stronghold Crusader விளையாட்டுகளை டோரண்டில் இறக்கினேன், ஒரு பிரச்சனை, விளையாடி முடிச்சாச்சு :)

ஜாக்
05-07-2009, 09:33 AM
அதே நேரம் வைரஸ்கள் கூட தாராளமாக இறங்கிடும் என்று நினைக்கிறேன்.
இந்த நக்கல்தானே வேனாங்கிறது :frown:ஏதாவது நல்ல கேம்ஸ் ஏதும் பிரச்ச்னை இல்லாமல் இறக்க வழி சொல்லுங்களேன்:D:D

பரஞ்சோதி
05-07-2009, 12:52 PM
அப்படி அல்ல ஜாக்,

அது ISO கோப்பாக இருக்கும், அதனால நம்மால் சரியாக கணிக்க முடியாது, நான் டவுண்லோட் செய்த மேக்ஸ் பெய்னி, குருசேடர், என் மகளுக்காக டவுன்லோட் செய்த டோரா, டிஸ்னி விளையாட்டுகளில் பிரச்சனை இல்லை.

மன்றத்தில் மற்றவர்களும் தங்கள் கருத்தை சொல்லுங்கள்.

ஆதவா
06-07-2009, 02:35 AM
தற்போதைய சூப்பர் ஹிட் கேம்மான அசாசின் கிரீட் (Assassin Creed) யாராவது ஆடி வருகிறீங்களா?

எப்போது மன்றத்திற்கு வந்தேனோ அப்போதிருந்தே கேம்ஸ் வாங்குவதை நிறுத்திவிட்டேன். எனது கலெக்ஸன்ஸ் ரிலீஸ் தேதி பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால்... ஆனால்.... இப்போது மீண்டும் அந்த ஆசை. நண்பனிடம் சொல்லியிருக்கிறேன்.. சென்னையில் வெகு சீப். முப்பது ரூபாய்க்குக் கூட கிடைக்கிறதாம்.. அநேகமாக அடுத்தவாரம் அவன் வரும்பொழுது வாங்கிவருவான். இனி கேம்களில் பிஸியாகிவிடுவேன்.

அப்படி அல்ல ஜாக்,

அது ISO கோப்பாக இருக்கும், அதனால நம்மால் சரியாக கணிக்க முடியாது, நான் டவுண்லோட் செய்த மேக்ஸ் பெய்னி, குருசேடர், என் மகளுக்காக டவுன்லோட் செய்த டோரா, டிஸ்னி விளையாட்டுகளில் பிரச்சனை இல்லை.

மன்றத்தில் மற்றவர்களும் தங்கள் கருத்தை சொல்லுங்கள்.

நான் பெரும்பாலும் டோரண்டுகளிலிருந்து Packed fileகளை எடுப்பதில்லை. அதனால் அதிகம் டவுண்ட்லோட் எல்லாமே ஆங்கிலப்படங்கள்தான். Piratebay கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது. எதற்கும் நீங்கள் Anti Virus இன்றைய தேதிவரைக்கும் வைத்திருப்பது நல்லது.

வெற்றி
10-07-2009, 12:13 PM
Call of Duty போலவே இருக்கும் ஆனால் குறைந்த அளாவு எம்.பி இருக்கும் விளையாட்டுக்கள் ஏதும் கிடைக்குமா ??
அதாவது First Person Shooter வகை விளையாட்டுகள் ?? அவைகளின் மிகப்பெரிய ரசிகன் நான்...
இந்த திரி ஆரம்பித்த நாள் முதல் நான் பழைய படி விளையாட்டுகளைஒ தேட ஆரம்பித்து விட்டேன் ஆனால் எல்லாம் ஜீ.பி கணக்கில் இருப்பதால் ...... :( :(

ஆதவா
10-07-2009, 03:12 PM
என்னவொரு தற்செயல் ஒற்றுமை!!!!

நானும் இத்திரி ஆரம்பித்த பிறகு விளையாடிய நினைவுகளை மீட்டு, மீண்டும் விளையாட முடிவெடுத்து, இப்பொழுது ஆடிக் கொண்டுமிருக்கிறேன்.

நான் பெரும்பாலும் பெரிய விளையாட்டுக்களையே விரும்புகிறேன். எனது configuration : nVidea Geforce 128 MB RAM அளவுக்குள் இருக்கும் விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து விளையாடுவேன். Graphics உயர்தரமாகவும், விளையாட்டு சோர்வில்லாமலும் இருக்க, விளையாட்டுகளின் அளவு பெரியதாக இருந்துவிடுகிறது. உதாரணத்திற்கு, Call of Duty 4 க்கு மினிமம் தேவையே 256 MB RAM (Video) மற்றும் 1 GB RAM (Memory) தேவைப்படுகிறது

அதனால், சிறு விளையாட்டுக்களுக்கு இடமில்லை!!! உங்கள் configuration என்னவென்று சொல்லுங்கள், அதற்குத் தகுந்த விளையாட்டட நான் அனுப்புகிறேன்.

மன்மதன்
11-07-2009, 01:39 PM
நான் அதிகம் கேம்ஸ் விளையாடியது கிடையாது..
நான் விளையாடிய கேம்ஸ் கேப்டன் க்ளா... நீட் ஃபார் ஸ்பீடு.
மைக்ரோஸாஃப்ட் மோட்டார் மேட்னஸ்..

பரஞ்சோதி
11-07-2009, 04:22 PM
நான் ஒவ்வொருமுறை கம்ப்யூட்டர் மாற்றுகிறேன் என்றால், புதிய கேம்ஸ் வந்திருக்குதுன்னு அர்த்தம்.

மேலும் இணையத்தில் இவ்வாண்டின் மிகச் சிறந்த கேம்ஸ் என்ன என்பதை ஆராய்ந்து அதையே வாங்கி விளையாடுவேன்.

சென்னையில் பர்மா பஜாரில் லாராகிராப் டோம்ப் ரைடர், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா, போன்ற அதிரடி விளையாட்டு டிவிடிகள் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. நன்றாகவே வேலையும் செய்யுது, ஆகையால் டோரண்ட் எல்லாம் போக வேண்டியதில்லை.

பரஞ்சோதி
11-07-2009, 04:28 PM
Call of Duty போலவே இருக்கும் ஆனால் குறைந்த அளாவு எம்.பி இருக்கும் விளையாட்டுக்கள் ஏதும் கிடைக்குமா ??
அதாவது First Person Shooter வகை விளையாட்டுகள் ?? அவைகளின் மிகப்பெரிய ரசிகன் நான்...
இந்த திரி ஆரம்பித்த நாள் முதல் நான் பழைய படி விளையாட்டுகளைஒ தேட ஆரம்பித்து விட்டேன் ஆனால் எல்லாம் ஜீ.பி கணக்கில் இருப்பதால் ...... :( :(

மொக்ஸ் தம்பி,

நீங்க இந்த கேம் கிடைக்குதான்னு பாருங்க, செம அசத்தல் கேம்

Return to Castle Wolfenstein

அதே போல் மேக்ஸ் பெய்னி கிடைச்சாலும் ஆடுங்க, அவை எல்லாம் 600 எம்.பி சிடியில் அடங்கிடும்.

நேசம்
12-07-2009, 05:05 AM
என்னமோ போங்க பரஞ்சோதி அண்ணா இந்த பெயரல்லாம் இப்பதான் கேள்வி படுகிறென்.கிடைத்தல் விளையாடி பார்ப்போம்

பரஞ்சோதி
14-07-2009, 10:18 AM
என்ன நேசம் இப்படி சொல்லிட்டீங்க.

இப்போ எங்கே இருக்கீங்க? துபாயிலா?

வேக இணைய இணைப்பு இருக்குதா? நான் நல்ல கேம்ஸ் கிடைச்சா, தரவிறக்கம் செய்ய கொடுக்கிறேன்.

நேசம்
14-07-2009, 10:28 AM
ஆமாம்.நான் துபையில் தான் இருக்கிறென் அண்ணா.இணைய வேகத்துக்கு ஒன்னும் பிரச்சை இல்லை.டவுன்லொஅட் செய்வது எளிதாக இருந்தால் தாருங்கள்(ஏன்ன நமக்கு விவரம் பத்தாது)

ஜாக்
15-07-2009, 07:16 AM
வேக இணைய இணைப்பு இருக்குதா? நான் நல்ல கேம்ஸ் கிடைச்சா, தரவிறக்கம் செய்ய கொடுக்கிறேன்.
அப்படியே எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்

anna
16-07-2009, 10:09 AM
நண்பர்களே எனக்கு இந்த கேம்ஸ் ஆடுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. இருந்தாலும் என் பையன் கேட்டு நச்சரிக்கிறான். ஆதலால் யாரவது கம்யூட்டர் கேம்ஸ் இருந்தால் எனக்கு கொடுங்களேன்.

வெற்றி
17-07-2009, 03:06 PM
என்னவொரு தற்செயல் ஒற்றுமை!!!!

அதனால், சிறு விளையாட்டுக்களுக்கு இடமில்லை!!! உங்கள் configuration என்னவென்று சொல்லுங்கள், அதற்குத் தகுந்த விளையாட்டட நான் அனுப்புகிறேன்.
என் config AMD processor 1.9ghz.. 1 ஜீ.பி மெமரி அண்ணா...
ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க....
தற்போது மீண்டும் Duke Nukem 3d ...VCop2...மற்றும் Midtown Madness (நீட் பார் ஸ்பீடு போல் ஆனால் அதை விட நல்ல விளையாட்டு..)

மொக்ஸ் தம்பி,
நீங்க இந்த கேம் கிடைக்குதான்னு பாருங்க, செம அசத்தல் கேம்
Return to Castle Wolfenstein
அதே போல் மேக்ஸ் பெய்னி கிடைச்சாலும் ஆடுங்க, அவை எல்லாம் 600 எம்.பி சிடியில் அடங்கிடும்.
Return to Castle Wolfenstein ஸ்கீர்ன் சாட் பார்த்தேன் ...தடாலென டோரண்ட் பக்கம் போனேன்...1.1 ¸ஜீ.பி என இருந்ததது..அதன்னால் என்ன என இறக்க ஆரம்பித்து விட்டேன்... மேக்ஸ் பெய்னி பெரிசா இருக்கும் போல இருக்குங்க..

பரஞ்சோதி
18-07-2009, 11:41 AM
நண்பர்களே எனக்கு இந்த கேம்ஸ் ஆடுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. இருந்தாலும் என் பையன் கேட்டு நச்சரிக்கிறான். ஆதலால் யாரவது கம்யூட்டர் கேம்ஸ் இருந்தால் எனக்கு கொடுங்களேன்.

அண்ணா,

நீங்க சென்னையிலா இருக்கீங்க?

ஆம் என்றால் டிசம்பர் மாதம் ஊருக்கு வரும் போது நிறைய குட்டி பசங்க கேம்ஸ் தருவேன்.

இல்லை, உடனே வேண்டும் என்றால் 300எம்பி, 400 எம்பி அளவில் இருக்கும் டோரா, டிஸ்னி கேம்ஸ் டவுண்லோட் செய்யணும்.

உங்கள் பையனின் வயது என்ன? முக்கியமாக பெயர் என்ன? :icon_rollout::icon_rollout:

பரஞ்சோதி
18-07-2009, 11:45 AM
அப்படியே எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்

நேசம், ஜாக்

நான் இன்று மேக்ஸ் பெய்னி மூன்றாம் பாகம் டவுண்லோட் செய்ய இருக்கிறேன், அது சரியாக வேலை செய்கிறது என்றால் விபரங்கள் கொடுக்கிறேன்.

டோரண்ட் கோப்புகளை பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டாம், தனிமடலில் விபரம் கொடுக்கிறேன்.

பரஞ்சோதி
18-07-2009, 11:48 AM
என் config AMD processor 1.9ghz.. 1 ஜீ.பி மெமரி அண்ணா...
ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க....
தற்போது மீண்டும் Duke Nukem 3d ...VCop2...மற்றும் Midtown Madness (நீட் பார் ஸ்பீடு போல் ஆனால் அதை விட நல்ல விளையாட்டு..)

Return to Castle Wolfenstein ஸ்கீர்ன் சாட் பார்த்தேன் ...தடாலென டோரண்ட் பக்கம் போனேன்...1.1 ¸ஜீ.பி என இருந்ததது..அதன்னால் என்ன என இறக்க ஆரம்பித்து விட்டேன்... மேக்ஸ் பெய்னி பெரிசா இருக்கும் போல இருக்குங்க..

மொக்ஸ்,

1.1. ஜிபி வராதே, தெரியவில்லை, சில சமயம் வீடியோ கோப்புகளையும் இணைச்சிருப்பாங்க.

மேக்ஸ் பெய்னி - 1 விளையாடுங்க, அது ஒரு சிடியில் வரும், அதை ஆடி பழகிட்டா பின்னர் 2 மற்றும் புதிதாக வந்திருக்கும் மூன்றாம் பாகமும் ஆட எளிதாக இருக்கும்.

அத்துடன் TOMB RAIDER - LARA CRAFT விளையாட்டுகள் 4, 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததை டவுண்லோட் செய்யுங்க, உங்க கணினியில் அது வேலை செய்யும், நன்றாக இருக்கும்.

ரத்த கொதிப்பு இருப்பவர்கள் மேலே சொன்ன கேம்ஸ் ஆட வேண்டாம். :traurig001:

anna
19-07-2009, 12:36 PM
அண்ணா,

நீங்க சென்னையிலா இருக்கீங்க?

ஆம் என்றால் டிசம்பர் மாதம் ஊருக்கு வரும் போது நிறைய குட்டி பசங்க கேம்ஸ் தருவேன்.

இல்லை, உடனே வேண்டும் என்றால் 300எம்பி, 400 எம்பி அளவில் இருக்கும் டோரா, டிஸ்னி கேம்ஸ் டவுண்லோட் செய்யணும்.

உங்கள் பையனின் வயது என்ன? முக்கியமாக பெயர் என்ன? :icon_rollout::icon_rollout:

மிக்க நன்றி நண்பரே, நான் சென்னையில் தான் இருக்கிறேன். நீங்க வரும் போதே கொடுங்கள். 300 எம்.பி 400 எம்.பி டவுன்லோட் செய்வதற்கு நம்ம ஊரில் இல்லை இல்லை என்னிடம் பிராட்பேண்ட் வசதி கிடையாது. என் பையனின் வயது ஆறு தான். பெயர் அரவிந்

பரஞ்சோதி
21-07-2009, 08:14 AM
சரி அண்ணா,

அரவிந்த் என்ற பெயரில் எனக்கு நிறைய குழந்தைகள் தெரியும், இப்போ உங்க அரவிந்த் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார்.

மோனோபாலி (பிஸினஸ்) வகையை சேர்ந்த சில கேம்ஸ் 12 எம்பிக்குள் வரும், அதை நான் இலவசமான தரவிறக்கம் தளத்தில் ஏற்றி தருகிறேன்.

எது நல்ல தளம் என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்க.

வெற்றி
21-07-2009, 12:25 PM
மோனோபாலி (பிஸினஸ்) வகையை சேர்ந்த சில கேம்ஸ் 12 எம்பிக்குள் வரும், அதை நான் இலவசமான தரவிறக்கம் தளத்தில் ஏற்றி தருகிறேன்.

என்னிடமும் மோனோபாலி வகை போர்டபிள் விளையாட்டுக்கள் உள்ளது .. நன்பர் ப்ரவீன் கொடுத்த விளையாட்டுக்கள் :) நானும் கூட தருகிறேன்...ஆனால்ல் பெரும்பாலும் ரேபிட் ஷேர் தள சுட்டிகளாக இருக்கும் :fragend005::fragend005:

எது நல்ல தளம் என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்க.
http://www.mediafire.com/
ஓரளவு நல்ல தளம் (தற்போதைக்கு) ;);)

பரஞ்சோதி
21-07-2009, 12:30 PM
நன்றி தோழரே!

நான் இன்றே என்னிடம் இருக்கும் சிறிய சிறிய விளையாட்டுகளை அதில் ஏற்றி தர முயல்கிறேன்.

அதன் லிங்க் இங்கே கொடுக்கலாம் தானே?

praveen
21-07-2009, 01:26 PM
நன்றி தோழரே!

நான் இன்றே என்னிடம் இருக்கும் சிறிய சிறிய விளையாட்டுகளை அதில் ஏற்றி தர முயல்கிறேன்.

அதன் லிங்க் இங்கே கொடுக்கலாம் தானே?

நானும் அதற்கு தான் காத்திருக்கிறேன். இந்த மாதிரி கேம்ஸ் பற்றி பதிவிறக்க சுட்டி தருவது சரியா என்று தெரியாததால் மெளனமாக இருக்கிறேன்.

விரைவில் கேம்ஸ் பற்றி இங்கே தெரிவித்து தேவைப்படுவோர் தனிமடலில் அந்த லிங்க் கேட்டுப்பெறலாம் என்று சொல்லத்தான் நினைக்கிறேன்.

பரஞ்சோதி
21-07-2009, 04:50 PM
உண்மை தான் பிரவீன், சில சமயம் உதவி செய்ய போய் உபத்திரமாக முடியக்கூடாது.

நம் கணினியில் வேலை காட்டாத வைரஸோ வேற மென்பொருளோ நண்பர்கள் கணினியில் வேலை காட்டி விட்டால், அவர்களுக்கு நம்மால் நட்டம் உண்டான கதையாகி விடும்.

சரி, கோப்புகள் ஏற்ற இலவச, தொல்லையில்லாத தளங்கள் பெயர்கள் கொடுங்க.

பிரம்மத்ராஜா
24-07-2009, 01:54 AM
நண்பர்களே ஏதோ கேம்ஸ் பற்றிய தகவல்களை சொல்கிறீர்கள் ஆனால் அதை எங்கிருந்து டவுன் லோடு செய்ய வேண்டும் என்று அது இலவசமா போன்ற விபரங்களை சொன்னால் என்னை போன்னவர்களுக்கும் உதவியாக இருக்குமே

வெற்றி
24-07-2009, 12:53 PM
விரைவில் கேம்ஸ் பற்றி இங்கே தெரிவித்து தேவைப்படுவோர் தனிமடலில் அந்த லிங்க் கேட்டுப்பெறலாம் என்று சொல்லத்தான் நினைக்கிறேன்.
எனக்கு மேக்ஸ் பெய்னி 1 மற்றும் பர்ஸ்டு ஷுட்டர் விளையாட்டுகள் வேண்டும் 1 g.b க்கு மிகமால்...:icon_b::icon_b:
( போர்டபில் 3d கேம்ஸாக இருந்தாலும் பரவாயில்லை :aetsch013::lachen001:

நண்பர்களே ஏதோ கேம்ஸ் பற்றிய தகவல்களை சொல்கிறீர்கள் ஆனால் அதை எங்கிருந்து டவுன் லோடு செய்ய வேண்டும் என்று அது இலவசமா போன்ற விபரங்களை சொன்னால் என்னை போன்னவர்களுக்கும் உதவியாக இருக்குமே
இவை இலவசம்
hடிடிp://www.dosgames.com/g_3d.php

வெற்றி
01-08-2009, 11:25 AM
மிக்க நன்றி... பரஞ்ஜோதி ..மேக்ஸ் பேனி இறக்கி விளையாடிக்கொண்டு இருக்கிறேன்.(முதல் ஸ்டேஜ் முடித்து விட்டேன் :) )

பாலகன்
01-08-2009, 01:23 PM
கம்பியூட்டர் விளையாட்டுக்களா எனக்கு உயிராச்சே... குடுங்க குடுங்க கொடுத்துக்குட்டே இருங்க.....

நன்றி மொக்கை

பரஞ்சோதி
01-08-2009, 03:43 PM
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்கள், அதாவது குடும்பத்தோடு விளையாட 150 கேம்ஸ் கொண்ட ஒரு டோரண்ட் கோப்பு இதோ:-

கேம்ஹவுஸ் என்ற விளையாட்டுகளின் தொகுப்பு இது.

http://www.mininova.org/get/2553404

நான் தரவிறக்கம் செய்து விளையாடி பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது.

பாலகன்
01-08-2009, 05:38 PM
நான் தரவிறக்கம் செய்து விளையாடி பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது.

இதோ நானும் விளையாடுறேன் பரம்ஸ் அண்ணே.. நன்றி

பரஞ்சோதி
01-08-2009, 06:04 PM
பிரபு மொக்கசாமி மேக்ஸ்பெய்னி எங்கிருந்து தரவிறக்கம் செய்தார் என்று கேட்டு அதை பெறுங்க. படுசுவாரஸ்யமான விளையாட்டு அது.

வெற்றி
05-08-2009, 11:01 AM
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்கள், அதாவது குடும்பத்தோடு விளையாட 150 கேம்ஸ் கொண்ட ஒரு டோரண்ட் கோப்பு இதோ:-
கேம்ஹவுஸ் என்ற விளையாட்டுகளின் தொகுப்பு இது.
நான் தரவிறக்கம் செய்து விளையாடி பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது.

இதில் இருக்கும் 5 விளையாட்டுகள் மட்டும் ஏற்கனவே விளையாடி இருக்கிறேன்..மற்றவை ரொம்ப புதுசு !! மிக்க நன்றி

பாலகன்
05-08-2009, 05:52 PM
Transport Tycoon இந்த விளையாட்டு யாரிடமாவது இருக்கா? இந்தா இங்கு தரஇயலுமா? ரொம்பவும் அருமையான ஸ்டேட்டர்ஜிக்கல் கேம்.

ஆதவா
06-08-2009, 10:26 AM
Zoo Tycoon 2 வை நண்பன் கொடுத்தான்.. Install மட்டும் செய்திருக்க்கிறேன். பல புதிய வசதிகள் இருப்பதாகச் ச்சொன்னான், First Person View அதில் குறிப்பிடத் தக்கது.. நேரம் மட்டும்தான் கிடைப்பதில்லை விளையாட...

பார்ப்போம்..

சுட்டிபையன்
06-08-2009, 11:12 AM
எனக்கு போர் சம்பந்தமான விளையாட்டுக்கள்தான் அதிகம் பிடிக்கும்
டெல்டா ஃபோஸ் (Delta Force) 1,2,3,4&5
ஐஜிஐ (IGI)1&2
Call of Duty, என்னும் நிறைய பிடிக்கும் ஆனால் விளையாடத்தான் நேரம்மிடைப்தில்லை

மகாபிரப்பு நீங்கள் கேட்ட Transport Tycoon

- சுட்டி நீக்கப்பட்டது - அமரன்

பாலகன்
06-08-2009, 05:15 PM
நேரம் மட்டும்தான் கிடைப்பதில்லை விளையாட...

பார்ப்போம்..

நிறைய பிடிக்கும் ஆனால் விளையாடத்தான் நேரம்மிடைப்தில்லை

நீங்க சொல்வர்றது எனக்கு நல்லாவே புரியுது... என்ன செய்வது மதியம் 1.30 முதல் அடுத்தநாள் வரை சும்மா தானே இருக்கேன் :D :D

ரொம்ப நன்றி சுட்டிபையன்

அமரன்
06-08-2009, 08:25 PM
நண்பர்களே,

இலவசமாகக் கிடைக்கக் கூடிய கணினி விளையாட்டுகளின் சுட்டிகளை மட்டும் இங்கே தாருங்கள்.

நன்றி.

ஆதவா
07-08-2009, 03:33 AM
இப்போது கையில் இருப்பவை : (Yet to play)

IGI 2 (Soldier of Fortune 1 and 2 Double Helix)
Call of Duty United Offensive (Of course i didnt play that)
Tunnel Rats
NecroVision
Dead Space
A complete collection of Warcraft
Left 4 Dead
Call of Duty 4 Modern Warfare (Requires High Video Memory)
Half Life Episode 2

ஆதவா
07-08-2009, 03:41 AM
எனக்கு போர் சம்பந்தமான விளையாட்டுக்கள்தான் அதிகம் பிடிக்கும்
டெல்டா ஃபோஸ் (Delta Force) 1,2,3,4&5
ஐஜிஐ (IGI)1&2
Call of Duty, என்னும் நிறைய பிடிக்கும் ஆனால் விளையாடத்தான் நேரம்மிடைப்தில்லை

மகாபிரப்பு நீங்கள் கேட்ட Transport Tycoon

- சுட்டி நீக்கப்பட்டது - அமரன்

எனக்கும்தான் சுட்டி... அதிலும் அதன் BGM, Gun Fire Effects எனக்கு மிகவும் பிடிக்கும்....

Call of Duty இல் Hardened அல்லது Veteran Level இல் விளையாட விரும்புவேன்!!

Modern Warfare எனது கணிணிக்கு ஒவ்வாததால், வரும் தீபாவளிக்குள் Video கார்ட் 512 Mb வாங்க முடிவு செய்திருக்கிறேன்!!