PDA

View Full Version : ''உயிருடன் பிடிபட்டும் உறுதி குலையவில்லை..''mgandhi
27-06-2009, 05:22 PM
மெள்ளக் கசியும் மயக்க குண்டு மர்மங்கள்...

'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்பதை மெள்ள மெள்ள ஏற்கிற மனநிலைக்கு வந்துவிட்ட புலி ஆதரவாளர்கள், 'கடைசி நிமிடங்களில் பிரபாகரனுக்கு என்னதான் நேர்ந்தது?' என்று அறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். 'மிகக் கடுமையான சித்ரவதைக்குப் பின்பே பிரபாகரன் கொல்லப்பட் டார்!' என்று தீவிர புலி ஆதரவுப் பிரமுகர்கள் சிலரே இணைய தளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில்...

''அவர் கடைசி வரை தன்மானத்தோடு, கம்பீரத்தோடு, உறுதி குலையாமல் நின்றார்...'' என்று இலங்கை ராணுவத் தரப்பிலிருந்தே தகவல்கள் கசிவதாக, முக்கிய நாடுகளின் உளவு அதிகாரிகள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்கிறார்கள். இத்தகைய அதிகாரிகளின் தொடர்பாளர்கள் சிலரிடம் நாம் பேச முடிந்தபோது...

இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன?

''நான்காம் கட்ட ஈழப் போரின் மிக முக்கிய நாளாக எதிர்காலத்தில் வரலாற்றில் பதியப் போவது மே 17-ம் தேதிதான்! அன்றைய தினம் காலையிலிருந்தே எந்தவித எதிர்ப்புமில்லாமல் முள்ளி வாய்க்காலை நான்கு புறமும் சுற்றி

வளைத்திருக்கிறார்கள் சிங்கள ராணுவத்தினர். பிரிகேடியர்கள் நந்தல உதவத்தன மற்றும் கமால் குணரட்சன தலைமையில் ராணுவத்தின் 58, 59 மற்றும் சிறப்பு அதிரடிப் படையணித் துருப்புகள், முள்ளிவாய்க்காலை வளைத்துக் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. அந்தத் தாக்குதலுக்கு முன்பாகவே முடிந்தவரைக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகளை உயிருடன் கைது செய்ய வேண்டும் என படையினருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதற்காகவே 17-ம் தேதி மாலை ஒரு சிறப்பு ஆபரேஷனை நடத்தியிருக்கிறார்கள் ராணுவத்தினர்.

'சரீன்' (Sarin) என்ற - நரம்புகள் வழியாக ஊடுருவி செயலிழக்கச் செய்கிற - கெமிக்கல் பாமை (ரசாயன குண்டு), சிங்கள ஆட்லறி மூலமாக புலிகள் பதுங்கியிருந்த ஏரியாக்களில் கண்மூடித்தனமாகச் செலுத்தியிருக்கிறார்கள் ராணுவத்தினர் (சர்வதேச ஆயுத பயன்பாட்டு ஒப்பந்தத்தின்படி இந்த சரீன் பயன்பாடு முற்றிலுமாக யுத்தங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறித்தான் சதாம் உசேன் 'சரீன்' கலந்த குண்டுகளைப் பயன்படுத்தியதாக உலக அளவில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கும்).

இந்த பாம் விழுந்து வெடித்ததும், இதிலிருந்து வெளிப்படும் வாயு வீச்சினால்... தசைகளில் இறுக்கம், மூச்சுத் திணறல், வயிற்றுப் புரட்டல், இதயப் படபடப்பு அதிகமாதல் போன்ற அடையாளங்கள் முதலில் எழும். புகையின் அடர்த்தியைப் பொறுத்து அதை சுவாசித்தவரின் இயக்கம் முடக்கப்படும். மயக்கத்தின் ஆழ்ந்த நிலையும் அதை வைத்தே தீர்மானிக்கப்படும். இந்த குண்டு விழுந்த பகுதியில் இதை சுவாசித்தவர்களை எவ்வளவு சீக்கிரத்தில் மீட்டு மாற்று மருந்து கொடுக்கிறோமோ... அவ்வளவு சீக்கிரத்தில் மயக்கம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து மீட்க வாய்ப்பு உண்டு.

'சரீன்' அடங்கிய குண்டு விழுந்த இடத்தில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களும் அப்படியே சுருண்டு மயங்கி விழ வாய்ப்பு உண்டு. இறுதிப் போர் தருணத்தில் இதுதான் அங்கேயும் நடந்திருக்கிறது. உளவு விமானங்கள், புலிகள் பதுங்கியிருந்த மறைவிடங்கள் தொடர்பான விவரங்களை ராணுவத்துக்கு வழங்கியிருந்தபோதும், அந்த இடத்தை நெருங்க முடியாமல் தவித்த ராணுவத்தினர்... கடைசியாக மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் குறிவைத்து 'சரீன்' தாக்குதலை அந்தப் பகுதி மீது நடத்தியிருக்கிறார்கள். சுமார் அரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடங்கியிருந்த புலிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லாருமே அடர்த்தியான 'சரீன்' புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார்கள். விமானப்படை மூலம் இதை உறுதி செய்து கொண்ட ராணுவம், மாஸ்க்குகளுடன் அந்தப் பகுதிகளுக்குள் புகுந்து, புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரையும் மயக்க நிலையிலேயே உயிருடன் பிடித்திருக்கிறது.

அப்படிப் பிடிபட்டவர்களில் மிக முக்கியமானவர் களைத் தவிர, ஏனைய தளபதிகளை அந்த இடத் திலேயே சுட்டுக் கொன்றிருக்கிறது சிங்கள ராணுவம்.

மயக்க நிலையில் பிடிபட்ட பிரபாகரன், சார்லஸ் ஆன்டனி, சூசை, வெற்றி, ராம்குமார், மணிமேகலா, அண்ணாதுரை, ரங்கன், விநோதன் உள்ளிட்ட 23 தளபதிகளை கிளிநொச்சியிலுள்ள தங்கள் முகாமுக்குக் கொண்டு சென்றதைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்!'' என்று விவரிக்கிறார்கள் இவர்கள்.

அந்த முகாமில் நடந்ததாகச் சொல்லப்படும் சித்ரவதைப் படலத்தைத்தான் புலி ஆதரவுப் பிரமுகர்கள் சிலர் எப்படியோ அறிந்துகொண்டு, இணைய தளத்தில் ஓரளவு வெளிப்படுத்திக் கொதித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பிரபாகரனுக்கு நடந்தது என்ன?

கொழும்பிலுள்ள மிக முக்கிய தமிழ்ப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். அவர், ''சிங்கள ராணுவத்தினர் மத்தியிலிருந்து இப்போது மெள்ளக் கசியும் தகவல்களைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...'' என்ற முன்னுரையோடு சொன்னார் -

''பிரபாகரன் பிடிபட்ட 17-ம் தேதி இரவே ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா, மேஜர் ஜெனரல் சந்திரசீறி, ஜெகத் ஜெயசூர்யா ஆகியோர் கிளிநொச்சியிலுள்ள 57-வது பிரிவு முகாமுக்கு சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பே சயனைடு குப்பிகளை அவர்களிடமிருந்து அகற்றியிருக்கிறார்கள். அங்கு பிரபாகரனை ஃபொன்சேகாவின் காலில் விழும்படி வற்புறுத்திக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பிரபாகரன் அதற்கு உடன்பட மறுத்து விடவும், அவரின் கண் எதிரிலேயே அவர் மகன் சார்லஸ் ஆன்டனிக்கு மிகக் கடுமையான சித்ரவதைகள் தொடங்கியிருக்கிறது. வேதனைகள் தாங்க மாட்டாமல் சார்லஸ் அலறியபோதும், உறுதி தளராமல் அமைதியாகத்தான் இருந்தாராம் பிரபாகரன். தொடர்ந்து சார்லஸின் நகக் கணுக்கள் பிய்த்து எறியப்பட்டதோடு, சில பற்களும் பிடுங்கப்பட்டிருக்கிறது. பிரபாகரனின் கண் எதிரிலேயே அவரை சுட்டுக் கொன்றதாகத்தான் ராணுவத் தரப்பிலிருந்து சேதி வருகிறது!

அதன் பிறகு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் சூசையில் தொடங்கி, ஒவ்வொருவரிடமும் பல்வேறு தகவல்களைக் கேட்டுத் தோற்றுவிட்டு... வரிசையாக பிரபாகரன் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அந்த சித்ரவதைக் கூடத்தில் பொட்டு அம்மான் இல்லை என்று மட்டும் அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்...'' என்றவர், இறுதியில் பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் சில விவரங்களைச் சொல்லி அதிர வைத்தார்.

''பிரபாகரனின் சடலம் என்று தொலைக்காட்சி களில் காட்டப்பட்டது அவருடைய சடலம்தான் என்று நம்ப முகாந்திரங்கள் உண்டு...'' என்று வருத்தத்தோடு கூறும் இந்த இதழ் ஆசிரியர்,

''பிரபாகரனின் நெற்றியின் மேல்பகுதியில் ஜெனரல் ஜகத் டயஸ் என்ற ராணுவ அதிகாரி அங்கிருந்த கோடரியால் தாக்கியதைத் தொடர்ந்தே மரணம் நிகழ்ந்ததாக ராணுவத் தரப்பிலிருந்து தகவல் வருகிறது. அதற்கு முன்பாக, காய்ச்சிய கம்பிகளாலும் பிரபாகரன் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அந்த வரிக் காயங்கள் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் நந்திக்கடல் நீர்நிலை அருகே உடம்பைக் கண்டெடுத்தாகக் காட்டிய பதிவுகளில், உடையோடு காட்டினார்கள். சீருடை இல்லாமல் காட்டிய மற்றொரு படத்தில் காயங்களின் மீது சேற்றைப் பூசி வைத்திருந்தார்கள் போலி ருக்கிறது...'' என்றும் சொல்கிறார் இவர்.

இதையெல்லாம் எந்தளவுக்கு நம்புவது என்ற பிரமிப்பையும் அவர் பேச்சில் நம்மால் உணர முடிந்தது.

பொட்டு அம்மான்....?

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டுவிட்டார் என கடந்த வாரம்கூட அடித்துச் சொல்லியிருக்கிறார், இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே. உண்மையில் பொட்டு அம்மான் ராணுவத்தின் பிடியில் உயிருடன் இருப்பதாக அடித்துச் சொல்கிறார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள். அவர்கள் சிலரிடத்தில் பேசினோம்.

''புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைவராக இருந்தாலும்கூட, இயக்கத்தின் மூளையாக இருந்தது பொட்டு அம்மான்தான். ஏனென்றால், உலகம் முழுவதும் புலிகளுக்கு இருக்கும் சொத்து விவரங்களில் தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அவர்களுடைய ரகசியப் பிரதிநிதிகளின் பட்டியல் வரையில் அத்தனை விவரங்களும் பொட்டுக்கே முழுமையாகத் தெரியும். அவரை கொழும்புக்கு வெளியில் உள்ள ஒரு ராணுவ முகாமில் வைத்துள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு புலிகளுக்கு உதவி பண்ணிய சிங்கள ராணுவ அதிகாரிகள் பற்றி முதல் கட்டமாக அவரிடம் விசாரணை தீவிரமாக நடக்கிறதாம். அதில் பொட்டு அம்மான் கொடுத்த தகவல்படி இதுவரை 4 ராணுவ அதிகாரிகளை கைது செய்ததோடு, ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது இலங்கை ராணுவம். இன்னொரு பக்கம், பல வருடங்களாகவே கொழும்புக்குள் ஊடுருவியிருக்கும் தற்கொலை படையினர் பற்றியும் அவரிடம் விசாரிக்கும் முயற்சிகள் நடப்பதாக தலைநகரில் ஒரு பேச்சிருக்கிறது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் ஆயுதக் குவியல்களையும் அடுத்தடுத்துக் கைப்பற்றும் திட்டமிருக்கிறதாம். முல்லைத் தீவில் இதுவரை 100 கிலோ தங்கம், 6.5 மில்லியன் டாலர் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்... மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள தோனிதான்ட மடுவில் மற்றும் மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியிலுள்ள இலுப்படிச் சேனை, நாரக்கமுல்ல பகுதி களிலும் பெருமளவிலான ஆயுதக் குவியலை கண்டுபிடித்ததாகவும்கூட கொழும்பு நகரின் அதிகார வட்டாரங்களில் தற்போது பேசப்படுகிறது. திரிகோணமலை மாவட்டம் வெள்ளான்தோட்டத்திலும், வெருகல் பிரதேசம் கல்லடியிலும் ஆயுதக் குவியலை கண்டுபிடித்துள்ளதாம் ராணுவம்.

மேலும்... புலிகளுக்கு மருந்துப் பொருட்கள் வழங்கியதாக வெள்ளவத்தை செல்வநாயகம் பாலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய கருணாகரன் கந்தசாமி, பார்த்திபன் தவராசா, டாக்டர் மூர்த்தி, விநாயகமூர்த்தி முருகேசு ஆகியோரை இலங்கை அரசின் தகவலையடுத்து அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கிறார்களாம்...'' என்றெல்லாம் கூறுகிறார்கள், இந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்.

முக்கியமாக, புலிகளுக்கான பொருளாதார பலம் துளிகூட தாழ்ந்துவிடாமல் இதுவரை பார்த்துக்கொண்ட அனைத்துலக தொடர்பாளர் குமரன் பத்மாநாபனை பிடிக்க ஒரு டீம் இன்டர்போல் உதவியோடு இந்தோனேஷியாவுக்கும், தாய்லாந்துக்கும் சென்றுள்ளதாம்.

புலிகள் அடுத்து..?!

தலைவர் மறைந்து விட்டாலும் அவருடைய வழியில் நம்முடைய பயணத்தை தொடர வேண்டும் என கூறிவரும் புலிகள், அடுத்த கட்டமாக 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற ஒன்றை உருவாக்கி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வநாதனின் மகனான வழக்கறிஞர் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாம் இந்த அமைப்பு.

ஆலோசனை வழங்குவதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களில் இருந்து, இந்த அமைப்புக்கு 11 பல்துறை நிபுணர்களையும் நியமித்திருக்கிறார்கள். திபெத்தை சீனா ஆக்கிரமித்த பிறகு திபெத்தின் அரசாங்கத்தை நாடு கடந்து இந்தியாவிலுள்ள தர்மசாலாவில் நடத்தி வருவது போன்றுதான் இந்த 'நாடு கடந்த தமிழீழ அரசாங்க'மும் செயல்படும் என்கிறார்கள் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

''இலங்கைக்கு வெளியில் இருந்துகொண்டு நாட்டுக்குள் வாழும் தமிழர்களுக்கான உரிமையை வழங்குவதற்காக அத்தனை முன்னெடுப்பு முயற்சி களையும் மேற்கொள்வதற்காகத்தான் இப்படியரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது!'' என உருத்திர குமாரன் தெரிவித்திருப்பதும் கூர்ந்து கவனிக்கப்படு கிறது.
- மு. தாமரைக்கண்ணன்

நன்றி ஜூனியர் விகடன்

ராஜா
29-06-2009, 11:16 AM
வானாதிக்கம் கொண்ட முதல் மற்றும் ஒரே போராளி இயக்கம் என்ற பெருமைக்குரிய புலிகள் நச்சுவாயுத் தாக்குதலை எதிர்பார்த்து காப்பு முகமூடிகள் இல்லாமலிருந்தது வியப்புக்கும் வேதனைக்கும் உரிய விடயமே..!

கோடரியால் கொத்தப்பட்டதும் கொடுமையே..!!

நேசம்
29-06-2009, 12:08 PM
ராஜா அண்ணா இனவெறியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.இதெல்லாம் சதாரணம்.

praveen
29-06-2009, 12:09 PM
இந்த செய்தியை ஜீ.வி-யில் படித்தும் நம்ப முடியவில்லை.

இந்த செய்திகளை சாதாரணமாக பார்த்தால் உண்மை போல தெரியும். ஆனால் பல விசயங்கள் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

1) பிராபாகரனை பிடித்து துன்புறுத்தி கொண்றார்கள் என்றால், பின்னர் பிராபாகரன் உடலை அடையாளம் காட்ட எட்டப்பன் கருணாவை எதற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும்.

2)உண்மை முகம் என்ற ஒரு பிளாக்ஸ்பாட்டிலே பிராபகரன் உடலை கண்டெடுக்கையில் மொபைல் போனில் பேசிய பேச்சில், வீரர் ஒருவர் தானே வந்து மாட்டிக்கொண்ட ஒரு பேராளியை சுட்டு பெல்ட்டையும் அடையாள வில்லையையும் கொண்டு வந்ததாகவும், பின்னர் அந்த வில்லை எண்ணை வைத்து அது பிராபாகரன் என்று அறிந்து பின்னர் நடவடிக்கை கொண்டதாகவும் தெரிகிறது

3)தமிழ்நாட்டு பத்திரிக்கை உலகில் இரண்டு விதமான கருத்து உள்ளது, நக்கீரன் இதழ் இதுவரை பிராபகரன் கொல்லப்படவில்லை என்றே கருத்து தெரிவித்து வருகிறது. ஜூனியர் விகடன் தான் மாற்றுக்கருத்து ஆணித்தரமாக சொல்லாமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நிறைய பில்டப் களுடன் சொல்லி வருகிறது. இந்த செய்தி புலிகளே தந்து வெளியிட செய்திருக்கலாம்(ஏனென்றால் பிராபகரன் மறைவாயிருப்பதே நலம் என்பதற்காக)

4)தன் உடல் கூட சிங்கள காடையார்களிடம் கிடைக்க கூடாது என்றும், ராஜிவ்காந்தியை டெல்லியில் சந்திக்க போன போது சயனடை குப்பியை விடாமல் வைத்திருந்த அளவிற்கு எண்ணம் கொண்டிருந்த பிராபாகரன் பேடிப்பயல்கள் ராணுவத்திடம் சிக்கினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எப்படியிருந்தாலும் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல, பிராபகரன் இருக்கையிலும் ஆயிரம் செய்திகள் இறந்ததாக சொல்லி மறைந்திருக்கையிலும் ஆயிரம் செய்திகள்.

தமிழ்பத்திரிக்கைகள் இலங்கை தமிழர் நிகழ்வுகளை வைத்து இன்னும் பல கவர் ஸ்டோரி வெளியிட்டு கல்லா கட்டுவார்கள். இலங்கை தமிழர் பால் அன்பு கொண்ட அதே சமயம் ஒன்றும் செய்ய இயலாத மக்களும் இதனை வாங்கி படித்து குழம்பி கொள்வார்கள்.

தூயவன்
29-06-2009, 12:33 PM
இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு ..ஆனாலும் நான் நம்ப மட்டேன்.

Honeytamil
29-06-2009, 01:40 PM
அவனுங்க நல்லா கதை விடுராங்க....இதை நீங்க நம்பிட்டு இருங்க.

Honeytamil
29-06-2009, 01:43 PM
வானாதிக்கம் கொண்ட முதல் மற்றும் ஒரே போராளி இயக்கம் என்ற பெருமைக்குரிய புலிகள் நச்சுவாயுத் தாக்குதலை எதிர்பார்த்து காப்பு முகமூடிகள் இல்லாமலிருந்தது வியப்புக்கும் வேதனைக்கும் உரிய விடயமே..!

கோடரியால் கொத்தப்பட்டதும் கொடுமையே..!!

யார் சொன்னது புலிகளிடம் நச்சுவாயுமுகமூடிகள் இல்லையென்ன்று? பூநகரி வீழ்ச்சிக்குமுன்னர் புலிகள் சி.எஸ் வாயு தாக்குதல் நடத்தியதை மறந்துவிட்டீர்களா????

jk12
29-06-2009, 02:05 PM
ஜூவி படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.... முடியவிலை.
இங்கு அந்த் கட்டுரையை பதித்தமைக்கு மிகவும் நன்றி...

நம்ப முடியாத நெஞ்சை உறைய வைக்கும் கட்டுரை....
இவை உண்மையாக இருக்ககூடாது என்ற எண்ணத்திலே இன்று தூக்கமும் வராது...

இன்பா
30-06-2009, 04:01 AM
எனக்கென்னவோ 2009 செப் 4 -லிலோ அ 2012 டிசம்பரிலோ இலங்கை மட்டும் தான் அழியும் என்று தெரிகிறது...