PDA

View Full Version : கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது



மயூ
27-06-2009, 07:52 AM
தமிழ் கணனிப் பயனர்களுக்கு நல்ல ஒரு செய்தி. கூகிள் தமது குரோம் உலாவியை தமிழ் இடைமுகத்துடன் வெளியிட்டுள்ளனர். ஓ போடு!தற்போது பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா (வின்டோஸ் விஸ்டாவில் மட்டும்), தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது. ஹிந்திப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பயர்பொக்ஸ் 2.X தமிழ் இடைமுகத்துடன் கிடைத்தது. அது தமிழா.காம் சமூகத்தினால் மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்னர், பயர்பொக்ஸ் பதிப்பு 3.0 வெளியானது ஆயினும் அதற்கு தமிழ் இடைமுகத்தை வெளியிடவில்லை.இதேவேளையில் பயர்பொக்ஸ் 3.0 சிங்கள இடைமுகத்துடன் வெளியிடப்பட்டதைக் குறிப்பிடவேண்டும்.


பின்னர் மொரட்டுவைப் பலகலைக்கழகம் செயற்பட்டு இலங்கைத் தமிழ் இடைமுகம் ஒன்றைக் கொண்டுவந்தது. இங்கு முதலில் ஆங்கிலப் பதிப்பை நிறுவி அதில் மேல் இந்த தமிழ் இடைமுகத்தை நிறுவலாம்.
தற்போது பயர்பொக்ஸ் 3.5 தமிழ் இடைமுகத்துடன் கிடைக்கின்றது, ஆனால் இது Release candidate பதிப்பாகும். ஆகவே இதன் ஸ்திரத்தன்மை குறைவாகவே இருக்கும்.


இப்போது தமிழ் உட்பட முக்கியமான்ன இந்திய மொழிகளுக்கு கூகிள் தமது உலாவியை வெளியிட்டுள்ளனர்.


கூகிள் குரோமின் முக்கியமான உதவி பக்கங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ஆனாலும் இவர்கள் தமிங்கல வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். கூகிளின் மொழிபெயர்ப்பிற்கு எதிராக அடிக்கடி எழுப்பபடும் புகார் இது.


நீங்களும் உங்களின் தமிழ் கூகிள் குரோம் (http://www.google.com/chrome/index.html?hl=ta&brand=CHMB&utm_campaign=en&utm_source=en-ha-na-us-sk&utm_medium=ha) உலாவியை குரோம் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கலாம்

அக்னி
27-06-2009, 08:09 AM
இணையத்தில் தமிழ் வந்தால்,
எம்மிடம் அழைத்து வரும் மயூவுக்கு நன்றிகள் பலப் பல...

உங்கள் சேவை என்றும் தொடரட்டும்...

பாரதி
27-06-2009, 01:22 PM
நல்ல தகவல். தடைப்படாமல் தமிழ் செய்திகளை வழங்கி வருவதற்கு பாராட்டுகிறேன். மிக்க நன்றி மயூ.

அன்புரசிகன்
27-06-2009, 02:34 PM
எங்கும் பரவவேண்டும் தமிழ். பகிர்வுக்கு நன்றிகள் மயூ...

மயூ
27-06-2009, 03:04 PM
அனைவருக்கும் நன்றிகள்.

ஓவியன்
27-06-2009, 03:07 PM
நல்ல செய்தி கொண்டு வந்த அன்பு மயூக்கு என் நன்றிகளும்...

பாலகன்
27-06-2009, 07:30 PM
எங்கும் தமிழ் எதிலும் தமிழ். இப்போது இதிலும் தமிழ். நன்றி மயூ

jeeva.p
24-12-2009, 10:27 AM
நல்ல தகவல், நன்றி

anna
24-12-2009, 12:40 PM
நல்ல அருமையான தகவல், தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.