PDA

View Full Version : நீயும் நானும் மதுரையில்மதுரை மைந்தன்
27-06-2009, 06:19 AM
தங்க தாமரை பரிசளிக்க நினைத்தேன் உனக்கு
மீனாட்சி கோயில் குளத்தில் அதை சங்கிலியால் கட்டி விட்டனர்

பெரும் தூண் ஒன்றை நிறுவ நினைத்தேன் உனக்காக
நாயக்கர் மஹாலில் அதை ஏற்கனவே செய்து விட்டனர்

பௌர்ணமி நிலவில் தெப்பக்குளத்தில் படகில் வர ஆசை உன்னுடன்
தண்ணிர் இன்றி அங்கு விடலை பையன்கள் கிரிக்கெட் ஆடுகின்றனர்

பழமுதிர்சோலையில் கள்ளழகரை தரிசனம் செய்ய சென்றோம்
சகோதரி மீனாட்சியை காண மதுரை சென்று விட்டார் அவர்

மதுரையை விட்டு வெளியெ செல்லாம் என்றால்
யானை பசு நாகம் இவை மலைகளாகி நம்மை தடுக்கின்றனவே

அக்னி
27-06-2009, 06:53 AM
கவியிலுள்ள உவமைகள் முழுமையாகத் தெரியாததால்,
பொருத்திப் பார்க்க முடியாமற் தவிக்கின்றேன்...

மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகக் காத்திருக்கின்றேன்...

மதுரை மைந்தன்
28-06-2009, 02:01 PM
கவியிலுள்ள உவமைகள் முழுமையாகத் தெரியாததால்,
பொருத்திப் பார்க்க முடியாமற் தவிக்கின்றேன்...

மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களுக்காகக் காத்திருக்கின்றேன்...

உவமைகள் பெரிதனவை அல்ல. மதுரையின் முக்கிய இடங்களான மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக்குளம், பழமதிர்சோலை, யானை மலை, நாக மலை, பசு மலை இவற்றை வைத்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறேன்.

பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.

அக்னி
28-06-2009, 04:17 PM
நீங்கள் போட்டது பின்னூட்டமா அல்லது எனது கவிதையை குற்றம் கூற வந்துள்ளீர்களா என்று தெரியாமல் தவிக்கிறேன்.

நான் பின்னூட்டம்தான் இட்டேன்.
கவிதையின் காட்சிகளை மனக்கண்முன் நிறுத்த, அவை பற்றித் தெரியாத என் அறிவு ஒத்துழைக்கவில்லை.
அதானாற்தான், ரசித்த கவிதை காட்சிப்படுத்த, மற்றைய பின்னூட்டங்களை எதிர்பார்த்தேன்.
இது உங்கள் கவிதையின் குறை அல்ல, அந்த ஸ்தலங்கள் பற்றிய எனது அறிவின்மை.

தவிர இந்தப் பின்னூட்டத்தில் எந்தக் குற்றத்தையும் நான் சுமத்தவில்லையே...
கவிதையைக் குற்றம் சுமத்துவதாக, எனது பதிவில் ஏதேனும் வரிகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
தவறு என்னுடையதாயின் மன்னிப்புக் கேட்க நான் எப்போதுமே தயங்கியதில்லை. இங்கும் அவ்வாறே...

மன்றத்து பழைய உறுப்பினர்களுக்கு என் மீது உள்ள காழ்ப்பு உணர்வை நான் அறிவேன்.

இது முழுக்க முழுக்க தவறான புரிதல்.
இந்தத் தவறான புரிதல்தான், மற்றவர்கள் எதைச் சொல்லினும்,
அவர்கள் குற்றம் குறை சொல்வதாக உங்களுக்குப் படுகின்றது.
இயலுமானால் மாற்றம் கொள்ளுங்கள்.

புதிதாக மதுரையிலிருந்து இணைந்துள்ள நண்பர்களுக்காகவே இந்த கவிதை.

இதனைக் கவிதையின் முன்னரேயே குறிப்பிட்டிருப்பின்,
நான் இந்தப் பதிவை இடவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.

இருந்தும் சிரமம் பார்க்காமல் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.

தங்களுக்கும் எனது நன்றி.

*****

மதுரை மைந்தன் ஐயா...
உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளதே தவிர, எந்தக் காழ்ப்புணர்வும் எவருக்குமே இல்லை.
கருத்தொருமித்துப் போகாததை எல்லாம் காழ்ப்புணர்வு என்று சொல்லமுடியாது.
தயவுடன் இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாதுபோனால்,
உங்கள் திரிகளில் எதனை எவ்வாறு எழுதினாலும்,
அது உங்களுக்குத் தவறாகவே தெரியும்.

இந்தச் சங்கடத்தைத் தவிர்த்துக்கொள்ள நான் விரும்புவதனால்,
தனிப்பட்ட முறையில் எனது பதிவுகளை உங்கள் திரிகளில் தவிர்த்துக்கொள்கின்றேன்.
தவிர, வேறெந்த விரோதமோ, பழியுணர்வோ என்னிடமில்லை.

ரசிப்பவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்...

நன்றி!

Ravee
28-06-2009, 06:06 PM
ஆகா, எங்கள் இறையனாரும் நக்கிரரும் வாது செய்தது போல என்ன இது.
மதுரை மைந்தரே மதுரையின் எல்லை வரை போய் யாருக்கு பரிசு தர போனீர் என்று சொல்லவில்லையே நண்பரே

பாலகன்
28-06-2009, 06:47 PM
மதுரையை விட்டு வெளியெ செல்(ல)லாம் என்றால்
யானை பசு நாகம் இவை மலைகளாகி நம்மை தடுக்கின்றனவே

ஓ இவைகள் எல்லாம் மலைகளா? பாதை இருக்குமே. அப்போ நீங்க குறிப்பிடும் நபரும் நீங்களும் மதுரையிலிருந்து வெளியில் போக பார்க்கிறீர்கள் சரியா நண்பரே. :)

அமரன்
28-06-2009, 09:35 PM
ஹி...ஹி... விஜய்க்கு போன் போடுங்க. அர்ச்சுனரு வில்லு.. அரிச்சந்திரன் சொல்லு.. ந்னு பாடிக்கிட்டு வண்டியைக் கட்டுவாரு..

மதுரை மாநகரின் வனப்பான சிறப்புகளை வைத்து அருமையான கவிதை புனைந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

சந்தடி சாக்கில் வரட்சியின் கொடுமையை தெப்பக்குளத்தில் மட்டைப்பந்து மூலம் தோலுரித்துக் காட்டிவிட்டமைக்கு பிரத்யேகமான பாராட்டு.

வைகை நதிபோல் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்.

மதுரை மைந்தன்
29-06-2009, 10:15 AM
நான் பின்னூட்டம்தான் இட்டேன்.
கவிதையின் காட்சிகளை மனக்கண்முன் நிறுத்த, அவை பற்றித் தெரியாத என் அறிவு ஒத்துழைக்கவில்லை.
அதானாற்தான், ரசித்த கவிதை காட்சிப்படுத்த, மற்றைய பின்னூட்டங்களை எதிர்பார்த்தேன்.
இது உங்கள் கவிதையின் குறை அல்ல, அந்த ஸ்தலங்கள் பற்றிய எனது அறிவின்மை.

தவிர இந்தப் பின்னூட்டத்தில் எந்தக் குற்றத்தையும் நான் சுமத்தவில்லையே...
கவிதையைக் குற்றம் சுமத்துவதாக, எனது பதிவில் ஏதேனும் வரிகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
தவறு என்னுடையதாயின் மன்னிப்புக் கேட்க நான் எப்போதுமே தயங்கியதில்லை. இங்கும் அவ்வாறே...

இது முழுக்க முழுக்க தவறான புரிதல்.
இந்தத் தவறான புரிதல்தான், மற்றவர்கள் எதைச் சொல்லினும்,
அவர்கள் குற்றம் குறை சொல்வதாக உங்களுக்குப் படுகின்றது.
இயலுமானால் மாற்றம் கொள்ளுங்கள்.

இதனைக் கவிதையின் முன்னரேயே குறிப்பிட்டிருப்பின்,
நான் இந்தப் பதிவை இடவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.

தங்களுக்கும் எனது நன்றி.

*****

மதுரை மைந்தன் ஐயா...
உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளதே தவிர, எந்தக் காழ்ப்புணர்வும் எவருக்குமே இல்லை.
கருத்தொருமித்துப் போகாததை எல்லாம் காழ்ப்புணர்வு என்று சொல்லமுடியாது.
தயவுடன் இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாதுபோனால்,
உங்கள் திரிகளில் எதனை எவ்வாறு எழுதினாலும்,
அது உங்களுக்குத் தவறாகவே தெரியும்.

இந்தச் சங்கடத்தைத் தவிர்த்துக்கொள்ள நான் விரும்புவதனால்,
தனிப்பட்ட முறையில் எனது பதிவுகளை உங்கள் திரிகளில் தவிர்த்துக்கொள்கின்றேன்.
தவிர, வேறெந்த விரோதமோ, பழியுணர்வோ என்னிடமில்லை.

ரசிப்பவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்...

நன்றி!

உங்களது பின்னூட்டத்தை தவறாக புரிந்து கொண்டதற்கு வருந்துகிறேன். உங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
29-06-2009, 10:18 AM
ஆகா, எங்கள் இறையனாரும் நக்கிரரும் வாது செய்தது போல என்ன இது.
மதுரை மைந்தரே மதுரையின் எல்லை வரை போய் யாருக்கு பரிசு தர போனீர் என்று சொல்லவில்லையே நண்பரே

மதுரையின் முக்கிய இடங்களான மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக்குளம், பழமதிர்சோலை, யானை மலை, நாக மலை, பசு மலை இவற்றை வைத்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறேன்.

பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.

மதுரை மைந்தன்
29-06-2009, 10:21 AM
ஓ இவைகள் எல்லாம் மலைகளா? பாதை இருக்குமே. அப்போ நீங்க குறிப்பிடும் நபரும் நீங்களும் மதுரையிலிருந்து வெளியில் போக பார்க்கிறீர்கள் சரியா நண்பரே. :)

பாதைகள் இருந்தாலும் மலைகளை பார்த்து திரும்ப மதுரைக்கே செல்ல தோன்றுகிறது. நகைச்சுவையான இந்த கவிதைக்கு பின்னூட்டம் போட்டதற்கு நன்றி

மதுரை மைந்தன்
29-06-2009, 10:24 AM
ஹி...ஹி... விஜய்க்கு போன் போடுங்க. அர்ச்சுனரு வில்லு.. அரிச்சந்திரன் சொல்லு.. ந்னு பாடிக்கிட்டு வண்டியைக் கட்டுவாரு..

மதுரை மாநகரின் வனப்பான சிறப்புகளை வைத்து அருமையான கவிதை புனைந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

சந்தடி சாக்கில் வரட்சியின் கொடுமையை தெப்பக்குளத்தில் மட்டைப்பந்து மூலம் தோலுரித்துக் காட்டிவிட்டமைக்கு பிரத்யேகமான பாராட்டு.

வைகை நதிபோல் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்.

கவிதையை ரசித்து பாராட்டி இருக்கிறீர்கள். எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி

இளசு
01-07-2009, 09:06 PM
மதுரையைப் பாடுபொருளாக்கி
சிலேடைகள், கற்பனை, தற்குறிப்பு என
பல்முகத் திறன் காட்டி
அருமையாய் வடித்துவிட்டீர்கள்..

பாராட்டுகள் மதுரைமைந்தன்..

---------------------------------------

அக்னியைப் புரிந்து அளித்த பின்னூட்டம் கண்டு
மனம் நடவுக்கழனியாய் நெகிழ்கிறேன்..

இலங்கையின் சில பகுதிகளை விவரித்து இதுபோல் ஒரு கவிதை வந்தால்
நாம் புரிந்துகொள்ள சிரமப்படுவோம் - இல்லீங்களா?

அதைத்தான் தம்பி அக்னி சொல்லவந்தார்..

புரிதல்கள் நிகழ்ந்தது குறித்து திருப்தி!