PDA

View Full Version : சுய தரிசனம்



நாகரா
27-06-2009, 06:13 AM
இன்னவன் என்று
என்னை இறுக்கும்
பொய்கள் அனந்தம்
மொத்தமாய் உரிய
உத்தமனாய் நிற்கும்
மெய்யோ "நான்"?

அமரன்
29-06-2009, 07:13 AM
நான் கட உள் என்பதன் அர்த்தமும் இதுதானோ.

ஞானக்கவிக்கு நன்றியும் பாராட்டும்.

நாகரா
06-07-2009, 03:16 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி அமரன்

ஓவியன்
04-10-2009, 10:54 AM
பொய்கள் உதிரவே
மெய்யாயிருக்க,
பொய்களைப் புனைந்து
உழன்று கொண்டிருக்கின்றோம்..!!