PDA

View Full Version : பாவம் ஏமாந்தார் பிள்ளையார்



Ravee
27-06-2009, 01:30 AM
பாவம் ஏமாந்தார் பிள்ளையார்

பாபுக்கு நாளை
பள்ளியிலே பரிட்சை
படித்தது இல்லை அவன்
பக்கத்திலே பிள்ளையார்
பிள்ளையாரே பிள்ளையாரே
பரிட்சையிலெ
பாஸ் வேணும் எனக்கு
பால் பணியாரம் உனக்கு
வேண்டிவிட்டு போனன்.......
பிள்ளையார்க்கு ஆசை
பஞ்சு போல பால் பணியாரம்
பகல் இரவாய் படித்தார்
ஆங்கிலம் தமிழ் அறிவியல் கணிதம் .....
.தலை சுற்றியது
பரிட்சை நாளும் வந்தது
பரிட்சை வகுப்பில் பாபு
பதட்டத்தில் பிள்ளையார்
பகல் கனவு பாபு காண
பரிட்சை முடித்தார் பிள்ளையார்
தேர்வு முடிவு வந்தது
தேறி விட்டான் பாபுவும்
அப்பா தந்தார் பல்சர்
அம்மா தந்தாள் டவுசர்
ப்றந்தான் பாபு பய்கிலெ
பாவம் ஏமாந்தார் பிள்ளையார்
பால் பணியாரத்துக்கு..............

இளசு
30-06-2009, 07:12 PM
ஹாஹ்ஹா!

காரியம் முடிந்தபின் கழட்டிவிடுவதில் கைதேர்ந்தது மனித இனம்
என்னும் அந்தப் பாடமும் அவர் இன்று படித்துவிட்டார்..

அடுத்தடுத்த பாபுகளுக்கு இனி ஆப்பு!


பாராட்டுகள் ரவீ...

நேசம்
01-07-2009, 07:08 AM
சுயநலத்துக்காக இறைவனை வேண்டும் மக்கள் ஆண்டவனுக்கே தண்ணி காட்டுவதில் என்ன ஆச்சர்யம்.... ரவீ தொடர்ந்து எழுதுங்கள்

கா.ரமேஷ்
01-07-2009, 08:58 AM
அருமை ... கவிதை வடித்த விதம் வித்தியாசமக இருக்கிறது...

அமரன்
04-07-2009, 11:35 AM
என்னதான் இருந்தாலும் தொந்தி வாத்தியாரை பிள்ளையாராக உருவகித்திருக்கக் கூடாது நீங்கள்.

நம்ம மன்றத்து தொந்தியார்களை ஆதவா சொன்னதாக ஞாபகம். அவுங்களும் பல விசயத்துல வாத்தியார்கள்தான்.

ஹி...ஹி.....

எத்தனை காலந்தான் பிள்ளையார் சுழிச்சு தேர்வெழுதுவது. தேர்வெழுதி பிள்ளையாரை சுழிச்ச பாபுவுக்கு பாராட்டு.

பாபுவின் கனவில்
வருவதுக்காய் வந்தார் பிள்ளையார்..

"என் பிள்ளை யார்" என்று
மார்தட்டிய அப்பாவைத் தாண்டி
பாபுவை (அ)தட்டினார்.

"எங்கேடா பணியாரம்"

"போப்பா சும்மா
நான் குடுத்த பாலையே குடிக்காத நீ
பணியாரம் மட்டும்
எப்படித் தின்பாயாம்"

அசடு வழிந்தார்
கஷ்டப்பட்டுப் பாஸ் பண்ணிய
பிள்ளையார்..