PDA

View Full Version : ஒட்டிப் பிறக்க வைத்தான்...



இன்பக்கவி
26-06-2009, 08:03 PM
http://msnbcmedia3.msn.com/j/msnbc/Components/Photos/051004/051004_conjoined_hmed_11a.hmedium.jpg
ஒன்றாய் பிறந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ஏனோ இறைவன் நம்மை
ஒட்டிப் பிறக்க வைத்தான்...
ஒரு நிமிடம் கூட பிரியவில்லை
என்னை நீயும்
உன்னை நானும்
சுமந்தே சுற்றி வந்தோம்

பார்ப்போர்க்கு எல்லாம்
வியப்பு..பரிதாபம்...
எனக்கு நீ ஆறுதலாய்
உனக்கு நான் ஆறுதலாய்...
மனம் உடைந்து போன
நாட்கள் எல்லாம்
கணக்கில் அடங்காதவை.....

எல்லோரையும் ஏக்கமாக
நாம் பார்த்தோம்
அவர்களைப் போல
வாழ நம்மால் முடியாதா என்று....

உன்னை பிரிய நானும்
என்னை பிரிய நீயும்
நினைக்கவில்லை
சுகமாய்
சந்தோஷமாய் இருக்கையில்
என்னுள் மட்டும் எப்படி வந்தது
இந்த காதல் உணர்வு.....

என்னையும் காதலித்த மனதை
என்னவென்று சொல்ல....
அவருடன் நான் சேர
உன்னை பிரிய வேண்டுமே...
இதை நினைக்கையில் மனம்
துடிக்குது....

இன்று முதல் முறையாக
இறைவனை பழிக்கிறேன்
என்ன குற்றம் செய்தோம்...
கண்ணீரோடு கதறுகிறேன்...

நம்மை பிரிக்க நாட்கள்
குறித்தாயிற்று...
இருவருமே பிழைப்போமோ
இருவருமே மரிப்போமோ
தெரியவில்லை...

எனக்காக உயிரைக் கொடுக்க
நீ துணிந்து விட்டாய்...
உன்னை இழக்க என்னால்
முடியவில்லை....
ஒருவராவது சந்தோஷமாக
வாழ்ந்தால் போதும்....
நரக வாழ்க்கை போதும்
என்ற முடிவில் நீ......
முற்றுப்புள்ளியாய் போய் விடுமோ
நம் வாழ்க்கை என்ற தவிப்பில் நான்........

முதன்முதலாய் பிரிய போகிறோம்
அது உடலால் மட்டுமே இருக்கட்டும்.....
மரணம் கூட நம்மை பிரிக்காது..
வாழ்வை தேடி நம்பிக்கையோடு
வாழ்வோம் என்ற நம்பிக்கையில்
செல்வோம்...வா...

அமரன்
26-06-2009, 08:11 PM
இரட்டையர்கள் மனவோட்டத்தை அற்புதமாகச் சித்தரித்துள்ளீர்கள்.

இயல்பான சோதரர்களை விட இந்தரகச் சோதரர்களுக்கு நடுவில் அன்னியோன்யம் அதிகமிருக்கும். அந்த அன்னியோன்யமே ஒரு கட்டத்தில் பிரச்சினையாகிடும். இந்தச் சிக்கலை முளையிலேயே கிள்ளிடும் பொருட்டு பலவற்றை கையாள்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஒரே மாதிரி ஆடை.. ஒரே வகுப்பில் கல்வி.. ஒத்த துறைப் படிப்பு.. என பல ஒத்தவைகளை முயன்று தவிர்த்து மனநிலை மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். இதனால் பாதிப்புக் குறைந்து விடுகிறது.

ஆரம்பத்தில் கஷடமாக இருந்தாலும் நல்விளைவை தருவதால் சகித்தே தீரவேண்டும்.

வித்தியாசமான களக்கவிதைக்குப் பாராட்டுகள் கவிதா.

இன்பக்கவி
27-06-2009, 08:49 AM
நன்றிகள்...

பா.ராஜேஷ்
03-07-2009, 04:42 PM
அவர்களில் ஒருவர் முகம் பார்க்க இன்னொருவரால் இயலாது என்பதும் கூட கொடுமை. வழக்கம் போல் அற்புதமான கவிதை. பாராட்டுக்கள் கவி!

இளசு
03-07-2009, 05:42 PM
பிறர் மனம் கூடுபாய்ந்து உணர்ந்தெழுதும் ஆற்றல்
நல்ல கவிஞர்களுக்கே வாய்க்கும்..

நல்ல கவிஞருக்கு வாழ்த்துகள்!

இன்பக்கவி
03-07-2009, 06:24 PM
நன்றிகள்...