PDA

View Full Version : உன்னை நினையாத இரவுகள்



Raaj
26-06-2009, 06:10 PM
உன்னை நினையாத
இரவுகள் என்னுள்
ஒரு போதும் விடிவதே இல்லை
அதற்ட்காகவேனும்
இரவின் நீளத்தை
நீட்டிக் கேட்கிறேன்
நேரில் கிடைக்காத உன் அன்பை
கனவில் தரிசிக்க......

அமரன்
26-06-2009, 09:13 PM
சும்மாவா சொன்னாங்க.
ஊசிமுனையின் காதுக்குள்ளே
ஒட்டகங்களை நுழைப்பது காதல் என்று.

அக்னி
26-06-2009, 10:11 PM
இரவு போதாது உன்னை நினைத்திருக்க...
இன்னமும் நீளமாய் வேண்டும் இரவு...

சரி...

நினைத்திருக்கக் கேட்டு,
இரவை நீளமாக்கியபின்,
கனவிற் காண என்றால்..,

ஓ... இரவிற் பகற்கனவோ...

கவிதையில் முரண் இருந்தாலும், கவர்வதானால் பாராட்டுக்கள்...

Raaj
27-06-2009, 08:42 AM
thanks for your comments.

அக்னி
28-06-2009, 07:29 AM
thanks for your comments.

அழகான தமிழில், அழகாகத்தானே பதிவிடுகின்றீர்கள்.
பிறகும் ஏன் ஆங்கிலப்பதிவு...

மன்றம் ஆங்கிலப்பதிவுகளை வரவேற்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும்தானே.

கவனத்திற் கொள்ளுங்கள்.