PDA

View Full Version : இந்தியா VS மேற்கிந்திய தீவுகள் - ஒருநாள் போட்டி!!!!



aren
26-06-2009, 03:33 AM
இன்று முதல் இந்தியாவிற்கும் மேற்கு இண்டீஸிற்கும் இடையேயான ஒரு நாள் போட்டி ஆரம்பமாகிறது. யாருக்கு வெற்றி கிடைக்கும். அலசுங்கள்.

பா.ராஜேஷ்
26-06-2009, 09:44 AM
இந்திய அணி வெல்வதே விருப்பம். இருப்பினும் யாருக்கு திறமை மற்றும் கூட்டு அணி முயற்சி இருக்கிறதோ அந்த அணியே வெல்லும். இந்திய அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதது ஒரு வகையில் பின்னடைவே!

அறிஞர்
26-06-2009, 02:08 PM
இந்திய அணியில் அனுபவம் உள்ள விளையாட்டு வீரர்கள் குறைவு....

மேற்கு இந்திய வேகத்திற்கு நம்மவர்கள் ஈடு கொடுப்பார்களா என்பது சந்தேகமே...

எல்லா போட்டிகளும் நடந்தால் மேற்கு இந்திய அணியனர் 3:1 என்ற கணக்கில் தொடரை வெல்வர்.

மன்மதன்
27-06-2009, 07:36 AM
முதல் வெற்றி முற்றிலும் வெற்றி...பார்ப்போம்...


ஆ.தோ.அ.வ என்று யாரோ பாடறது கேட்கிறது..;);)

aren
27-06-2009, 04:50 PM
முதல் போட்டியில் இந்தியா வென்றுவிட்டது. இன்னும் இருக்கும் மூன்று போட்டிகளிலும் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

எதற்கு தோனி இந்த ஜடேஜாவை இன்னும் குழுவில் வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. பேசாமல் அடுத்த ஆட்டத்திற்கு பத்ரிநாத்தை உள்ளே கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

அதுபோல் இஷாந்த் ஷர்மாவிற்கு பதில் ப்ரவீன்குமாரை உள்ளே கொண்டுவரலாம்.

பத்ரிநாத்தை ஒன் டவுன் ஆட்டக்காரராக களத்தில் இறக்கலாம். ரோஹித் ஷர்மா ஐந்தாவது ஆட்டக்காரராகவோ அல்லது ஆறாவது ஆட்டக்காரராகவோ களத்தில் இறங்கலாம்.

தோனியின் ஆட்டம்கூட அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. கொஞ்சம் இதையும் அவர் கவனிக்கவேண்டும்.

தோனிக்கு பதில் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பாலகன்
27-06-2009, 06:16 PM
நண்பர் ஆரன் சொன்னதுபோல டோனியின் ஆட்டம் அவ்வளவு நன்றாக இல்லை அவர் முதலில் நன்கு பயிற்சி எடுத்துக்கலாம்

பரஞ்சோதி
28-06-2009, 06:48 AM
இனிவரும் போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

யுவராஜின் அதிரடி வெற்றிக்கு முக்கிய காரணம்.

பந்து வீச்சில் பயம் காட்ட முடியவில்லை.

ஜடேஜாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், அவர் 20/20 போட்டியினை 50 ஓவர் போட்டியாக நினைச்சு திறமையாக ஆடினார் தானே.

பாலகன்
28-06-2009, 07:23 PM
இன்றைய போட்டியில் இந்தியா 188 தான் எடுத்தது

ருத்ர சிங் நன்றாக ஆடினார். தோனி 95 அடித்தாலும் சிறப்பாக இல்லை

அமரன்
28-06-2009, 09:13 PM
மேற்கிந்தியாவுக்கு இலகுவான வெற்றி.

34.1 ஓவர்களில் இரு விக்கட் இழப்புக்கு 192 ஓட்டங்கள்.

பரஞ்சோதி
29-06-2009, 09:12 AM
ஜடேஜாவுக்கும், யூசுப் பதானுக்கும் கல்தா கொடுக்க வேண்டியது தான்

ராஜா
29-06-2009, 11:02 AM
தோனி இன்னும் 5 போட்டிகள் சொதப்பினாலும் கவலை இல்லை..! நேத்து 95 அடிச்சுட்டாரே..

நன்றிங்க ப்ரேவோ..!

aren
29-06-2009, 02:00 PM
ஏன் இப்படி சொதப்பிட்டாங்களோ தெரியவில்லை? ஷார்ட் பிட்ச் பந்துவீச்சு என்று விமர்சகர்கள் சொன்னாலும் அப்படி அவுட் ஆனது யூசுப் பத்தான் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் சுழல் பந்துவீச்சை எப்படி எதிர்த்து விளையாடுவது என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள்.

அடுத்த ஆட்டத்திற்கு முரளி விஜயையும், பத்ரிநாத்தையும் காம்பீருக்கும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக உள்ளே கொண்டுவரலாம்.

முதல் மூன்று ஆட்டக்காரர்கள் தமிழர்கள். இதுவரை இது இந்திய வரலாற்றில் நடந்ததே இல்லை. ஆகையால் சாத்தியம் இருக்குமா என்று தெரியவில்லை.

அடுத்த இரண்டு போட்டிகளிலும் நம் மக்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

aren
29-06-2009, 02:01 PM
தோனி இன்னும் 5 போட்டிகள் சொதப்பினாலும் கவலை இல்லை..! நேத்து 95 அடிச்சுட்டாரே..

நன்றிங்க ப்ரேவோ..!

அடித்த 95ம் சொதப்பலுடன் கூடியது. கால் அவருக்கு நகரவே மாட்டேன்கிறது. அப்படியே ஆணி அடித்தது போல் நின்று ஆடுகிறார். கஷ்டம்தான்.

ராஜா
29-06-2009, 02:12 PM
அடித்த 95ம் சொதப்பலுடன் கூடியது. கால் அவருக்கு நகரவே மாட்டேன்கிறது. அப்படியே ஆணி அடித்தது போல் நின்று ஆடுகிறார். கஷ்டம்தான்.


என்னங்க மாட்டிரிக்ஸ்..!

கால் நகராதது, பிரவீண் குமாரையும், ஹர்பஜனையும் ராம்பாலுக்கு தாரை வார்த்தது.. பிரேவோ கேட்ச் விட்டது.. இதையெல்லாம் கவனிக்காதீங்க.. இந்திய இரசிகரா இருந்தா ஸ்கோரை மட்டுந்தான் கவனிக்கணும்..

அதான் தேச பக்தி..!

aren
29-06-2009, 02:14 PM
என்னங்க மாட்டிரிக்ஸ்..!

கால் நகராதது, பிரவீண் குமாரையும், ஹர்பஜனையும் ராம்பாலுக்கு தாரை வார்த்தது.. பிரேவோ கேட்ச் விட்டது.. இதையெல்லாம் கவனிக்காதீங்க.. இந்திய இரசிகரா இருந்தா ஸ்கோரை மட்டுந்தான் கவனிக்கணும்..

அதான் தேச பக்தி..!


தல காதிலே விழுந்திடப்போகுது. தோனி சென்னை சூப்பர்கிங்ஸ் காப்டன். அதனால் கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம்.

ராஜா
29-06-2009, 02:26 PM
அதாருங்க தல..?

aren
29-06-2009, 02:33 PM
நம்ம தல, மன்றத்தின் தல நம் மணியா அவர்கள்.

ராஜா
29-06-2009, 02:37 PM
மணியா தான் தலையா..?

சரி.. சரி..!

:)

அறிஞர்
29-06-2009, 02:39 PM
தோல்வி உறுதி எனத் தெரிந்தும்,....பொறுப்புடன் கட்டை போட்டி ஆடினார் தோனி...

aren
29-06-2009, 02:40 PM
மணியா தான் தலையா..?

சரி.. சரி..!

:)

என்னென்னு சொல்றது. உங்களுக்கு அபராதம் கிடைத்தாலும் கிடைக்கலாம் தல யார் என்று தெரியாமல் இருந்ததற்கு.

aren
29-06-2009, 02:41 PM
தோல்வி உறுதி எனத் தெரிந்தும்,....பொறுப்புடன் கட்டை போட்டி ஆடினார் தோனி...

ஆட்ட நாயகர் பட்டம் தோனிக்குத்தான் கொடுத்திருக்கனும் சொல்டுபோட்டு ஆடி மாட்சை ஜவ்வுமாதிரி இழுத்ததால் டிவியில் பல விளம்பரங்களைப் போட்டி டிவிகாரர்கள் பல கோடி ரூபாய்களை பார்த்துவிட்டார்கள்.

அறிஞர்
29-06-2009, 02:44 PM
"விளமரங்களின் நாயகன்" என்ற பட்டத்தை கொடுத்துவிடலாம் (இம்சை அரசன் பாணியில்).

ராஜா
29-06-2009, 02:53 PM
ஆட்ட நாயகர் பட்டம் தோனிக்குத்தான் கொடுத்திருக்கனும் சொல்டுபோட்டு ஆடி மாட்சை ஜவ்வுமாதிரி இழுத்ததால் டிவியில் பல விளம்பரங்களைப் போட்டி டிவிகாரர்கள் பல கோடி ரூபாய்களை பார்த்துவிட்டார்கள்.


முற்றிலும் உண்மை..!

அறிஞர்
03-07-2009, 04:38 PM
மழையால் 3ம் ஆட்டம் தடைப்பட்டு... தொடர்கிறது.

மேற்கு இந்திய அணி 8.3 ஓவரில் 54/1

அணியில் இசாந்த் சர்மா நீடிப்பதின் மர்மத்தை யாராவது தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.