PDA

View Full Version : °ღ•நான் வாழ்கிறேன் ๏๏๏!!! °ღ•



sofi
25-06-2009, 10:53 PM
உன்னை நினைத்துக் கொண்டு
நான் வாழவில்லை
உன் நினைவுகளாலேதான்
நான் வாழுறேன் ..!!!

நீ செய்த ....பேசியவற்றை எல்லாம்
மறந்துவிட்டு நான் வாழவில்லை
மறப்பதற்காகவே வாழ்கிறேன்...!!!

உன்னை வெறுத்துவிட்டு வாழவில்லை
உன்னை வெறுப்பதற்காகவே
நான் வாழ்கிறேன் ...!!!

இன்னும் உன் பொய்மைகளை
சகித்துக் கொள்ளவே வாழ்கிறேன்

மொத்தத்தில் நான் வாழ்ந்து
கொண்டிருப்பதற்காக வாழவில்லை
இனியாவது வாழ்வோம்
என்பதற்காக வாழ்கிறேன் ...!!:rolleyes:

பிரியமுடன்
சோபி
:icon_rollout:

அமரன்
26-06-2009, 10:35 AM
குழம்பிய மனநிலையை தத்ரூபமாக* கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

வீழ்ந்தும் எழுவோம் என்ற அற்புதக் கருத்தை மௌனமாக வலியுறுத்துவதில் கவிதை மிளிர்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். அனைத்தும் வசப்படும். வாழ்த்துகள் சோபி.

ஆதி
26-06-2009, 11:02 AM
எப்போதும் வியப்பேன்
இப்போத்ம் வியக்கிறேன்
பெண் கவிஞர்களுக்கு மட்டும்
இது எப்படி சாத்தியகாகிறதென..

எழிலான எளிமையான கவிதை

தொடர்ந்து எழுதுங்கள்..

பாராட்டுக்கள்..

sofi
01-07-2009, 09:11 PM
குழம்பிய மனநிலையை தத்ரூபமாக* கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

வீழ்ந்தும் எழுவோம் என்ற அற்புதக் கருத்தை மௌனமாக வலியுறுத்துவதில் கவிதை மிளிர்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். அனைத்தும் வசப்படும். வாழ்த்துகள் சோபி.


நன்றி அமரன் அவர்களே..!!:p:p

sofi
01-07-2009, 09:12 PM
எப்போதும் வியப்பேன்
இப்போத்ம் வியக்கிறேன்
பெண் கவிஞர்களுக்கு மட்டும்
இது எப்படி சாத்தியகாகிறதென..

எழிலான எளிமையான கவிதை

தொடர்ந்து எழுதுங்கள்..

பாராட்டுக்கள்..


நன்றி ஆதி அவர்களே..!!:p:p

இளசு
02-07-2009, 05:43 PM
இனிப்புக்கும் கசப்புக்கும்
நெருப்புக்கும் நீருக்கும்...
வெறுப்புக்கும் விருப்புக்கும்
நினைவுக்கும் மறதிக்கும்...

இடைவெளி அதிகமில்லை!

துருவங்கள் அருகருகில் இருக்கும் உலகம் - மன உலகம்!
இக்கவிதை எழுப்பும் சலன அலைகள் அநேகம்!


பாராட்டுகள் சோபி!

அக்னி
02-07-2009, 09:51 PM
இந்த உறவுநிலை,
இரண்டாக உடைந்த
காந்தக்கோல் போன்றது...

ஒத்துப்போகாத ஒத்த முனைகள்,
தள்ளுப்படுகின்றன...

எதிரெதிர் முனைகள் ஆனாலும்,
மீண்டும் ஒட்டிக்கொள்ளச் சாத்தியம் உண்டு...

தள்ளுப்படும் இந்த உறவும்,
உரிய புள்ளியிற் சந்தித்தால்,
இணைவு நிச்சயமே...

கவிதை தந்த சோபி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...
வழமைபோல அண்ணலின் பின்னூட்டம் ஊட்டச்சத்து...

sofi
13-03-2010, 10:42 PM
நன்றி அக்னி ..உங்கள் கவிதைகள் என்றும் அருமையே ..!
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் ... மன்னிக்கவும்

govindh
13-03-2010, 10:47 PM
உன்னை வெறுத்துவிட்டு வாழவில்லை
உன்னை வெறுப்பதற்காகவே
நான் வாழ்கிறேன் ...!!!
ஓய்ந்த காதலின் வலி அதிகம் ....
கவி வரிகள் அருமை..

sofi
13-03-2010, 11:02 PM
உன்னை வெறுத்துவிட்டு வாழவில்லை
உன்னை வெறுப்பதற்காகவே
நான் வாழ்கிறேன் ...!!!
ஓய்ந்த காதலின் வலி அதிகம் ....
கவி வரிகள் அருமை..
நன்றி ...!
காதலர்கள் ஓய்ந்து விட்டார்கள் ஆனால் காதல் மட்டும் ஓயவில்லை

Ravee
14-03-2010, 03:21 AM
வலிகளை வருடிக்கொண்டே வாழ விரும்பும் பெண்களில் நீயும் ஒருத்தி சோபி