PDA

View Full Version : ஒரு நாள் கூத்து தான்...



இன்பக்கவி
24-06-2009, 04:59 PM
http://www.hindu.com/2006/02/06/images/2006020609490601.jpg
http://www.thehindu.com/2005/04/22/images/2005042206640601.jpg
http://www.hindu.com/2006/04/29/images/2006042911770201.jpg
http://www.hindu.com/2007/12/13/images/2007121361080401.jpg

பள்ளம் எல்லாம் மேடாச்சு
தெருவெல்லாம் சுத்தம் ஆச்சு...
இரவொடு இரவாக
புது ரோடு போட்டாச்சு...
வெள்ளைத்தூள் தூவியாச்சு...
வீதி இப்போ பளபளப்பாச்சு
மின்னாமல் தெரு விளக்கு
புதுசா எரிய துவங்கியாச்சு....
பிரியாணி சாப்பாடு தயாராச்சு...
கூட்டமும் அதிகமா கூடியாச்சு....
ஒரு நாள் கூத்து தான்...
என்றாலும்
எங்கள் மனம் ஏங்கியாச்சு....
எங்க சேரிப் பக்கம்
மந்திரி வந்தால்
ஒரு நாள் சந்தோஷமாவது
எங்களுக்கும் கிடைக்குமே.....
சுத்தமாக எங்கள் தெருவை
பார்த்து பல வருடம் ஆச்சு...
ஏம்பா.. மந்திரி...
எங்கள் சேரிப்பக்கமும்
கொஞ்சம் வந்து போய்யேம்பா...:icon_b:

அமரன்
25-06-2009, 09:27 PM
போட்டது போட்டபடி கிடக்க தொண்டன் ஓடிவந்து பணி செய்வதில் நன்மை இருக்கத்தான் செய்யுது.

கோலம் அழகாக உள்ளது கவிதா.

இளசு
25-06-2009, 09:32 PM
எத்தனைமுறை கிலுகிலுப்பை ஆட்டினாலும்
அத்தனைமுறை மலர்ந்து சிரிக்கும் மழலைகள்..
நம் மக்கள்!

தமிழினக் காப்பு முதல் தார்ச்சாலை வரை
கூத்துகட்டி ஆடுவதில் தேர்ந்தவர்கள்
நம் அரசியல்வாதிகள்..


மழலைகளும் கூத்தாடிகளுமாய்
நல்ல கூட்டு..
நடக்குது கூத்து..
நாளையும் தொடரும்..


பாராட்டுகள் கவிதா123!
படங்கள் வெகுபொருத்தம்!

இன்பக்கவி
26-06-2009, 10:34 AM
நன்றிகள்...
இது தான் நிஜமான உண்மை எங்கள் ஊரில்....

பாரதி
26-06-2009, 12:04 PM
ஐந்து வருடங்களுக்கு அரசுக்கட்டிலில் உட்கார வைக்கும் முன்பு யோசிக்க வேண்டியதை,
ஐந்நூறு ரூபாய் மூலம் மறக்கடித்து,
தேர்தல் நாள் மட்டும் கைவிரலிலும்
மீதி நாட்கள் நம் முகத்திலும் கரி பூசிக்கொண்டு
ஏங்கிக்கிடப்பதை இயல்பாகக் காட்டும் கவிதை.
வாழ்த்துகிறேன்.
தொடரட்டும் உங்கள் சமூகப்பார்வையிலான கவிதைகளும்!