PDA

View Full Version : உணர்வுகள்



Ravee
24-06-2009, 04:41 PM
உணர்வுகள்


அன்பே நலமா எனை மறந்து எங்கே போனாய் எத்தனை நாளாய் உனக்காக காத்து இருந்தேன் தெரியுமா ..

அப்பா அம்மா என்ன சொன்னார்கள் சம்மதிக்கவில்லை என்றால் பெங்களுர் போய் விடுவோம் என் தோழி இருக்கிறாள் அங்கே ...........இன்னும் காலம் தாழ்த்தினால் விபரிதம் நடந்து விடும் .டாக்டர்யை பார்த்தேன் ........உறுதி செய்து விட்டார்

அப்பா அம்மாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. 3 பெண்களை வைத்து கொண்டு இப்படி செய்துவிட்டாயே என்று செத்தே போய் விடுவார்கள் முடிவு ஒன்று சீக்கிரம் எடுக்க வேண்டும் எப்போதும் சந்திக்கும் இடத்துக்கு வருகிறேன் ஆபீஸ் முடித்து

இன்று உங்கள் வீட்டு வாசல் கதவு திறந்து இருந்தது அது தான் இதை எழுதி அனுப்புகிறேன் .................

இப்படியே போனது அந்த சிறுவன் கொண்டு வந்து தந்த காதல் கடிதம்

கடைசி வரியில் தான் புரிந்தது நான் புதிதாய் வந்த இந்த அறையில் எனக்கு முன்பு ஒரு மோசக்காரன் இருந்திருக்கிறான் என்று.

பெண்ணே யாராய் இருந்தாலும் பாவம் நீ .

சிவா.ஜி
24-06-2009, 05:16 PM
சொற்ப வரிகளில் நல்ல சஸ்பென்ஸை வைத்து எழுதியுள்ளீர்கள். அருமை. வாழ்த்துகள் ரவி.

ரங்கராஜன்
24-06-2009, 05:26 PM
எழுத்து புதுசாக இருக்கிறது ரவீ பாராட்டுகள், நீங்கள் சொல்லி இருக்கும் கதையில் ஆரம்பத்தில் இருந்து யார் யாருக்கு எழுதிகிறார் என்று தெரியாமல்? எதுக்கு எழுதுகிறார்? என்று தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த விதம் ரசித்தேன். கடைசியில் கொஞ்சம் பாவமான முடிவு தான்.....பாராட்டுகள் இன்னும் இன்னும் எழுதுங்கள்.

இன்பக்கவி
25-06-2009, 06:57 AM
அண்ணா..
ரௌம்ப நல்லா இருக்கு....
கொஞ்சம் குழப்பம் ஆகா ஆரம்பித்து நிறைவு பண்ண விதம் நன்றாக இருக்கு..
வாழ்த்துக்கள்

கா.ரமேஷ்
25-06-2009, 08:23 AM
அருமை...! வாழ்த்துக்கள்...!

அமரன்
25-06-2009, 08:42 AM
குறுங்கதைக்குள் உணர்வுகளை அடைத்து வைத்துள்ளீர்கள். இதில் கூட சாடல் இழையோடுகிறது. மனதை நிறைத்த பெண்ணை.. வயிற்றை நிரப்பிய ஆணை.. நினைத்து மனம் வெம்பி கண்கள் நெருப்புத் துண்டங்களை பொருத்திக்கொள்கின்றன. திருப்பமான பாணியில் உங்கள் சுவடுகளுடன் கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்.

மதுரை மைந்தன்
25-06-2009, 12:33 PM
ரத்தின சுருக்கமாக ஒரு அழகான கதையை சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்