PDA

View Full Version : இது ரயில் பயணம் இல்லை ...



Ravee
24-06-2009, 04:27 PM
இது ரயில் பயணம் இல்லை...

தோழி ஒருவள் எனக்கு இருந்தால்
நான் துவண்ட போது எல்லாம்
என்னை தூண்டி விட ...
தொலைந்த என் சந்தோசம் எல்லாம்
தோண்டி கொடுத்தாள் எனக்குள் இருந்தே

அவள் எனக்கு
தமக்கை இல்லை ,தங்கை இல்லை ..
காதலியும் இல்லை ...
காற்றின் வேகத்தில் போகும் போது
தொட்டு விட்டு சென்றாள்
சுடர்கிறது என் சிந்தை ...

மணம் ஆனதாலோ என்னை
மறந்து போனளோ தெரியாது
என் மனம் மறக்காது
மரணம் வரும் வரை

அந்நிய மண்ணில் இருந்து விட்டால்
நீ எனக்கு அன்னியம் இல்லை தோழி
வா என் சிந்தைகுள்ளே ...

இது ரயில் பயணம் இல்லை ...
உயிர்களின் பயணம் ...

விட்டது ஒரு நாள் வீடு வரும்
காத்திருப்பேன் ...
எதிர் பார்த்திருப்பேன்
தோழி நீ தொலைந்த திசை நோக்கி

அமரன்
25-06-2009, 07:44 PM
ஒருபால் சினேகமே கல்யாணத்தின் பின் அறுந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

இருபால் சினேகம் சொல்லவே வேண்டாம்.. எங்கேனும் அரிதாக, அருமையாக அந்த நட்புசங்கிலி அறுந்திடாமல் ஜொலிக்கும்.

பல்வேறு சுமைகளில் நசுங்கிப் போவதோ, மனச்சுமை ஏற்ற விருப்பமின்மையோ இதற்குக் காரணம்.

தொடர்ந்து எழுதுங்கள் ரவீ. பாராட்டுகள்.

இளசு
25-06-2009, 09:26 PM
நம்மூர் இருபால் நட்புகள் ஏனோ அவரவர் திருமணங்கள் நிகழ்ந்தபின் அறுந்தே போகின்றன..


கவிதைக்கு வாழ்த்துகள் ரவீ அவர்களே!


( ஒருவள் என ஒரு சொல் தமிழில் இல்லை என நினைக்கிறேன் -
ஒருத்தி என்பதே வழக்கு..)

பாரதி
26-06-2009, 12:23 PM
வாழ்க்கையும் ஒரு பயணமே!

பயணப்படுபவர்கள் எப்போதும் உடனிருப்பார்கள் என்ற அதீத
நம்பிக்கையே ஏமாற்றத்திற்கு காரணம்.

காரண காரியங்களைத் தேடி காயப்பட்டுக்கொள்ளாமல்
பயணத்தில் உடன் இருந்ததை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்.

கவிதைப்பயணம் கைகூடி வர வாழ்த்துகிறேன் நண்பரே.