PDA

View Full Version : இன்று கவியரசர் கண்ணதாச 82-வது பிறந்த நாள்



mgandhi
23-06-2009, 05:15 PM
இன்று கவியரசர் கண்ணதாச 82-வது பிறந்த நாள்

கவிஞர் கண்ணதாசன் [/color]

வார்த்தைகளுக்குள் வசப்படாத வாழ்க்கை கவிஞர் கண்ணதாசனுடையது.

சிறுகூடல்பட்டியில் 24 - 6 - 1927 ல் பிறந்த கண்ணதாசன் எட்டாவது வரை படித்திருக்கிறார்.

கண்ணதாசன் திரைஉலகில் பாடலாசிரியராக நுழைந்தார் ,வருடம் 1949, முதற் பாடல் கலங்காதிரு மனமே இடம் பெற்ற படம் கன்னியின் காதலி.் .

பின் வசனகர்த்தா,கதாசிரியர் ,மற்றும் சினிமா தாயாரிப்பாளராக கூட கண்ணதாசன் வலம் வந்தாலும்,மக்கள் மனதில் பாடலாசிரியர் கண்ணதாசனே சிம்மாசனம் போட்டமர்ந்திருந்தார்.

இந்தியாவை சீனா அறுபதாவதுகளின் தொடக்கத்தில் ஆக்கிரமித்தது.இதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் 'இரத்தத் திலகம்' என்ற படமெடுத்தார்.இரத்தத் திலகத்தில் சீனப் படைகள் வைத்திருக்கும் கொடிக்கு பதிலாக சோவியத்தின் கொடியை தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருந்தது.இதை கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டிக் காட்டியவுடன் ஓடிக்கொண்டிருந்த படத்திலிருந்து அக்காட்சியை கண்ணதாசன் நீக்கினார்.அந்த காலத்தில் இது சிரமமான விஷயம்.

திருமகள் (1944), திரைஒலி (1945&1946),தென்றல் கிழமை இதழ்,சண்டமாருதம்(1954),தென்றல் நாளிதழ் (1961),கண்ணதாசன் மாத இதழ் ,கடிதம் நாளிதழ் ஆகிய பத்திரிக்கைகளில் கண்ணதாசன் இயங்கினார்.

வியாபார ரீதியில் பெரும் வெற்றி பெறாவிடிலும் பத்திரிக்கை துறைக்கு கண்ணதாசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அனுசரித்து போகாத,உள்ளதை உள்ளபடி கூறும் குணத்தால் கவிஞரது அரசியல் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையவில்லை. தி.மு.கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராக தனது பயணத்தை தொடங்கியவர் 1957ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.பின் திமுகவிலிருந்து விலகி (1960) சம்பத் தலைமையில் உருவாகிய தமிழ்த் தேசிய கட்சியில் இணைந்தார்.பின்னர் தமிழ்த் தேசிய கட்சி கங்கிரஸில் இணையும் போது (1963)தானும் இணைந்தார் .அகில இந்திய காங்கிரஸின் செயற்குழு உறுப்பினராகவும் (1964 - 66)இருந்திருக்கிறார்.

மத்திய ,மாநில அரசுகளால் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற கண்ணதாசன் தனது சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடமி பரிசு (1979) பெற்றார்.சிறந்த கவிஞருக்கான அண்ணாமலை நினைவுப் பரிசும் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவியளித்து சிறப்பித்தார்.

சிகாகோ நகர் மருத்துவமனையில் 17 - 10 - 81 அன்று மறைந்தாலும் ,மக்கள் மனங்களில் நீங்காது வாழும் கவிஞர் கண்ணதாசன்.

இளசு
23-06-2009, 06:33 PM
தினமும் ஒரு முறையாவது இவனை எண்ணாமல் இல்லை!
அன்றும் இன்றும் என்றும் இவனை விஞ்சிய திரைக்கவி இல்லை!!


செய்திக்கோர்வைக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி காந்தி அவர்களே!

பரஞ்சோதி
23-06-2009, 06:44 PM
தமிழ் தாய் தவப்புதல்வனின் பெருமைகளை கொடுத்த அய்யாவுக்கு நன்றி.

தமிழ் இருக்கும் வரை இக்காவியத் தலைவன் பெயர் நிலைத்திருக்கும்.

அமரன்
23-06-2009, 09:53 PM
அழிவில்லாதவன்... திரைச் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்ரவர்த்தி.

இவருடைய கடைசிப் பாடலான கண்ணே கலைமானேயைக் கேட்கும்போதெல்லாம் திரையையும் தாண்டி தமிழை நினைத்து இவன் உருகுவது போல்த் தோன்றும். கடைசிப் பாடலென நினைத்துத்தான் வடித்தானோ என்று பிரமிக்க வைக்கும்.

சிவா.ஜி
24-06-2009, 05:25 PM
அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்

காவியத்தாயின் இளைய மகன் அவன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை

அவரது வரிகளைக் கேட்காத, பாடாத யாரேனும் தமிழகத்தில் இருக்க முடியுமா? அவரை மறக்கமுடியுமா?

பிறந்த தினத்தை நினைவூட்டிய மோகன் காந்திக்கு மிக்க நன்றி.

ஓவியா
25-06-2009, 12:16 AM
//வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது .. மடமையடா..

அஞ்சாமை திராவிடர் .. உடமையடா //


வாள் போர் புரிந்தால் மட்டுமே வீரனல்ல, மனிதனின் மனதில் உதிக்கும் கெட்ட குணப் பேய்களிடம், இது போல் வரிகளால் போர் புரிந்து அவனையே அவன் வென்றேடுக்க வேண்டும் என்பதற்க்காக காவிய கவிதை வரிகளை விதைத்தவரும் வீரரே!!!

வாழ்க எம்மான் கண்ணதாசன். ஓங்குக அவர் புகழ்.


கண்ணதாசனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கையில் திராட்சைப் பழச்சாறுடன் ஒரு கிண்ணத்தை ஏந்தும்
- ஓவியா. :D:D

ஓவியா
25-06-2009, 01:55 AM
கவியரசர் பிறந்தநாளுக்கு என் பரிசு பாடல்கள்


1. சூரியகாந்தி, ஜெயலலிதா, முத்துராமன், கவியரசர்

http://www.youtube.com/watch?v=6zlHEagTBbw



2. வசந்த மாளிகை, சிவாஜி, காஞ்சனா, டி.எம்.ஸ், ஈச்வரியம்மா.

http://video.google.com/videoplay?docid=-6784725882090161979



3. நாடோடி, எம்.ஜி.ஆர், பாரதி

http://www.youtube.com/watch?v=I0ET7nZG4Is&feature=related



4. சட்டம் என் கையில், கமல்.

http://www.youtube.com/watch?v=SWw2yhqa7VI



5. நினைத்தாலே இனிக்கும், ரஜினி, எம்.எஸ்.வி

http://www.youtube.com/watch?v=l2emJbo9LPc&feature=related




6. பார் மகளே பார், சிவாஜி, சௌகார் ஜானகி

http://www.youtube.com/watch?v=uFDnBLApCNo&feature=related



7. பணக்கார குடும்பம், எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=tNx9RjqEbiA




8. ரிஷிமூலம், சிவாஜி, கே.ஆர்.விஜயா, டி.எம்.ஸ்

http://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw



9. நாளை நமதே, எம்.ஜி.ஆர் 1, எம்.ஜி.ஆர் 2,

http://www.youtube.com/watch?v=vAvxM64AcZs



10. வைர நெஞ்சம், சிவாஜி, சி.ஐ.டி அத்தை

http://www.youtube.com/watch?v=uvknaw6In7Q



11. அந்தமான் காதலி, சிவாஜி, சுஜாதா

http://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY&feature=channel



12. பாழும் பலமும், சிவாஜி, சரோஜா தேவி

http://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY&feature=channel



13. காதலிக்க நேரமில்லை, ரவிசந்திரன், ராஜஸ்ரீ

http://www.youtube.com/watch?v=GRMs-mIsrGQ&feature=related



14. சுமைதாங்கி, ஜெமினி கனேசன்.

http://www.youtube.com/watch?v=LrrwGqwUIAc



15. பாமா விஜயம், நாகேஸ், முத்துராமன், பாலையா,

http://www.youtube.com/watch?v=4z6ahnxiwVA&feature=related



16. அவள் ஒரு தொடர்கதை, சுஜாதா, விஜயகுமார்

http://www.youtube.com/watch?v=HlaK4vw5JpU&feature=related


ச்
17. அவள் அப்படிதான், ஸ்ரீப்ரியா, ஜெயசந்திரன், சிவசந்திரன்

http://www.youtube.com/watch?v=52lDnAYzCUk&feature=related



18. அவளுக்கென்று ஒரு மனம், பாரதி, ஜெமினி கனேசன்

http://www.youtube.com/watch?v=cMcMKx2KDWs&feature=channel



19. பட்டினப் பிரவேசம், சிவசந்திரன், மீரா, பாலசந்தர்

http://www.youtube.com/watch?v=SpXDJAphVJw&feature=related



20. மூன்றாம் பிறை, கமல், ஸ்ரீதேவி

http://www.youtube.com/watch?v=oCkg3S1uTFQ


நேரமிருந்தால் ஒரு வலம் வாருங்கள்.

ஓவியா
28-06-2009, 05:57 PM
அழிவில்லாதவன்... திரைச் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்ரவர்த்தி.

இவருடைய கடைசிப் பாடலான கண்ணே கலைமானேயைக் கேட்கும்போதெல்லாம் திரையையும் தாண்டி தமிழை நினைத்து இவன் உருகுவது போல்த் தோன்றும். கடைசிப் பாடலென நினைத்துத்தான் வடித்தானோ என்று பிரமிக்க வைக்கும்.

அமரா, இவருடைய முதல் பாடல் எது?

mgandhi
28-06-2009, 06:54 PM
அமரா, இவருடைய முதல் பாடல் எது?

1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே